தமிழ் நடப்பு நிகழ்வுகள்
Tamil Current Affairs 11th October 2018
1. “The
Paradoxical Prime Minister: Narendra Modi and His India” எனும்
நூலின் ஆசிரியர் யார்?
|
[B] சஞ்சய் பாரு
[D] ரவி மந்தா
ü
“The Paradoxical Prime Minister: Narendra Modi
and His India” எனும் நூலை காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் சசி
தரூர் எழுதியுள்ளார். இந்நூலின் பெயர் “முரண்பட்ட பிரதமர்: நரேந்திர மோடியும் அவரது
இந்தியாவும்” ஆகும். இதில் மொத்தம் 5 பகுதிகளும்,
50 அத்தியாங்களுடன் ஒரு சேர மொத்தம் 400
பக்கங்களுடன் எழுதியுள்ளார். இது அக்.26 அன்று வெளியிடப்படுகிறது.
ü
இந்நூலின்
முதல் பகுதியில், நரேந்திர மோடியின் வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 4 பகுதிகளிலும்
மோடி அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் இந்திய சமூகம், இந்தியப் பொருளாதாரம், வெளியுறவுக்கொள்கை
மற்றும் அடிப்படை மதிப்புகளில் அவை ஏற்படுத்தியுள்ள ‘தீங்கு விளைவிக்கும் தாக்கமும்’
குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது இந்நூல் அமேசானில் முன் – பதிவு செய்யப்பட்டு
வருகிறது.
|
[A] சாக்ஷி மாலிக்
[B] புல்லேலா
கோபிசந்த்
[C] தீபா கர்மாகார்
[D] P V சிந்து
ü
அக்.7
அன்று, பாட்மிண்டன் பயிற்சியாளர்
புல்லேலா கோபிசந்துக்கு, ராமிநேனி அறக்கட்டளை –யின் ‘சிறந்த நபர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விருதை
குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு வழங்கினார். மேலும், தெலுங்கு இலக்கிய மேதை கரிகாபதி
நரசிம்ம ராவ், திரைப்பட
இயக்குநர் நாக் அஸ்வின் ரெட்டி மற்றும் எழுத்தாளர் C
வெங்கடரமணா ஆகியோருக்கு சிறப்பு விருதுகளையும் அவர் வழங்கினார்.
ü
1995’ம்
அமெரிக்காவில் நிறுவப்பட்ட ராமிநேனி அறக்கட்டளை, பல்வேறு துறைகளில் சாதனைகளைப் புரியும் சிறந்த நபர்களை
கௌரவித்துவருகிறது. சிறந்த நபர் விருது ரூ. 2 லட்சம் ரொக்கப்பரிசையும், சிறப்பு
விருதுகள் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசையும் கொண்டுள்ளது.
3.மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951’ன் எந்தப் பிரிவின்படி, கர்நாடகத்தில் இடைத்தேர்தல்
நடத்தும் தேர்தல் ஆணையம், ஆந்திரத்தில் இடைத்தேர்தல் நடத்தாமல் உள்ளது?
|
[B] பிரிவு 154A
[C] பிரிவு
151A
[D] பிரிவு 152A
ü
1951
ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 151A பிரிவில், மக்களவைத் தொகுதிகள், சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாகும் நாளிலிருந்து, சரியாக
ஆறு மாதங்களுக்குள் இடைத் தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும் எனவும் அத்துடன்,
காலியாகும் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால்,
அந்தத் தொகுதிகளின் எஞ்சிய பதவிக்காலம் ஓராண்டு அல்லது அதை விட அதிககாலம்
கொண்டதாக இருக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ü
கர்நாடகத்தில்
உள்ள 3 மக்களவைத்தொகுதிகள், கடந்த
மே 18 ஆம் தேதி, மே 21 ஆம் தேதியில் இருந்து காலியாக உள்ளன.
மக்களவையின் பதவிக்காலம் 2019 ஜூன் 3 ஆம் தேதி வரையுள்ளது. கர்நாடகத்தில் மூன்று
மக்களவைத் தொகுதிகள் காலியான நாளான மே 18, 21 ஆம் தேதியுடன்,
மக்களவையின் எஞ்சிய பதவிக்காலத்தையும் ஒப்பிட்டால் ஓராண்டுக்கும்
அதிக பதவிக்காலம் இருக்கிறது. இதனால் அங்கு இடைத்தேர்தல் நடத்தும் முடிவை தேர்தல்
ஆணையம் எடுத்தது.
ü
அதேநேரத்தில்,
ஆந்திரத்தில் ஐந்து மக்களவைத் தொகுதிகளும்,
கடந்த ஜூன் 20 ஆம் தேதியில் இருந்துதான்
காலியாக உள்ளன. இந்த நாளிலிருந்து (ஜூன் 20 இல் இருந்து) மக்களவையின் எஞ்சிய
பதவிக்காலத்தை ஒப்பிட்டால், ஓராண்டுக்கும் குறைவாக வருகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் 5 மக்களவைத்
தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதில்லை என்ற முடிவை தேர்தல் ஆணையம் எடுத்தது
என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
4.அண்மையில் புது தில்லியில் ‘சர்வதேச நடுவர்
தீர்ப்பாயத்தில் சிறந்த நடைமுறைகள்' என்ற பயிலரங்கத்தை நடத்திய இந்திய நிறுவனம் எது?
|
[B] நாஸ்காம்
[C] பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா
[D] NITI ஆயோக்
ü
ICC சர்வதேச
நடுவர் தீர்பாயத்துடன் இணைந்து NITI ஆயோக் ‘சர்வதேச நடுவர்
தீர்ப்பாயத்தில் சிறந்த நடைமுறைகள்' என்ற பயிலரங்கத்தை புது
தில்லியில் அக்.10 அன்று நடத்தியது. தீர்வு காணும்
நடைமுறைகளை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதோடு
‘இந்தியாவிலேயே தீர்வுகாண்போம்’ என்பதை ஊக்குவிக்கும் விதமாக இது உள்ளது.
ü
இப்பயிலரங்கம்,
சர்வதேச தீர்ப்பாயம் தொடர்பான அடிப்படைக்கருத்துகளை உள்ளடக்குகிறது. இதில்
கலந்துரையாடல், நடுவர்களை
தேர்வுசெய்தல் போன்ற பல்வேறு தலைப்புகளில் UK,
சிங்கப்பூர்,
பாரிஸ் மற்றும் இந்தியாவைச்சேர்ந்த
பயிற்சியாளர்கள் பயிற்றுவித்தனர்.
|
[A] WHO
[B] UNO
[C] FAO
[D] UNICEF
ü
உலக
சுகாதார அமைப்பின் (WHO) ஆதரவுடன் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் அக்.9
முதல் 11 வரை புது தில்லியில், “மருந்துப்பொருட்களை அணுகுவது – பேணுவதற்கான
வளர்ச்சி இலக்குகள் 2030” பற்றிய
இரண்டாவது உலகமாநாட்டை நடத்தியது. நிகழாண்டில் நடந்த இரண்டாம் உலக மாநாட்டின் முக்கிய
நோக்கம், 2017 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது உலகமாநாட்டின் பரிந்துரைகளை முன்னெடுப்பதாகும்.
ü
நீடித்த
வளர்ச்சி இலக்குகளின் (வர்த்தக ஒப்பந்தங்கள் உட்பட) சூழலில் மருந்துப் பொருட்களை
அணுகுவதற்காக செய்யப்படும் பணிகளை உருவாக்குதல், மருத்துவ தயாரிப்புகளுக்கான
கண்டுபிடிப்பு தளங்களில் புதிய அணுகுமுறைகளை வளர்த்தெடுத்தல் மற்றும் சர்வதேச
வர்த்தக மற்றும் சுகாதாரத்தின் ஊடாக தகவல் மற்றும் கொள்கை இலக்குகளை 2030 ஆம்
ஆண்டளவில் அடைவதும் இதன் நோக்கங்களாகும்.
6. 2018 கோடைகால இளையோர் ஒலிம்பிக்கில், தங்கப்பதக்கம்
வெல்லும் இந்தியாவின் முதல் துப்பாக்கி சுடும் வீராங்கனை யார்?
|
[B] துஷார் மானே
[C] மெஹுலி கோஷ்
[D] அஞ்சும் முட்கில்
ü
அக்.9 அன்று அர்ஜென்டினாவில் நடந்த கோடைகால இளையோர்
ஒலிம்பிக்கின் பெண்கள் துப்பாக்கி சுடுதல் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் இந்தியாவின்
இளம் வீராங்கனை மானு பாக்கர் 236.5 புள்ளிகளை குவித்து துப்பாக்கிசுடுதலில் இந்தியாவின் முதல்
தங்கத்தை வென்று சாதனை படைத்தார். இதன்மூலம், நடந்து வரும் நிகழ்வில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் ஆனார்.
ü
முன்னதாக,
பளுதூக்கும் வீரர் ஜெரேமி லால்ரின்னுங்கா,
நடந்து வரும் நிகழ்வில் இந்தியாவின் முதல் தங்கத்தை வென்றார். நடந்து வரும் நிகழ்வில்,
கொடியேந்தி இந்திய அணியை வழி நடத்தியவர் மானு என்பது குறிப்பிடத்தக்கது.
|
[A] 91 ஆவது
[B] 71 ஆவது
[C] 81 ஆவது
[D] 61 ஆவது
ü
சர்வதேச
வான் போக்குவரத்து சங்கத்துடன் இணைந்து ‘Henley’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள நிகழாண்டின் ‘கடவுச்சீட்டு தரவரிசை’யில்,
ஜப்பான் முதலிடம்பிடித்துள்ளது. ஜப்பான் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 190
நாடுகளுக்கு நுழைவாணை (Visa) இன்றியும் அல்லது வருகையின்போது
நுழைவாணை பெற்றுக்கொண்டால் போதும். நுழைவாணை இல்லாமல் பிற
நாடுகளுக்குச் செல்லும் அனுமதியை வழங்குவதின் அடிப்படையில் இத்தரவரிசை தயார்செய்யப்பட்டுள்ளது.
ü
189 நாடுகளுக்கு நுழைவாணை இன்றி அல்லது
வருகையின்போது நுழைவாணை பெற அனுமதிக்கும் சிங்கப்பூர் கடவுச்சீட்டு இரண்டாமிடத்தை
பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை ஜெர்மனி,
தென்கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள்
(188) பகிர்ந்து கொள்கின்றன.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்க முறையே இந்தப் பட்டியலில் நான்காம் மற்றும் ஐந்தாம்
இடத்தைப் பிடித்துள்ளன.
ü
இந்தியா
இப்பட்டியலில் 81
ஆவது இடம்பிடித்துள்ளது. இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்போர் 60
இடங்களுக்கு நுழைவாணை இன்றியும் அல்லது
வருகையின்போது நுழைவாணை பெற்றுக் கொள்ள முடியும். இதில்,
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள்
மிகக்குறைந்த தரவரிசையில் உள்ளன.
|
[A] ஜெர்மனி
[B] ஐக்கிய ராஜ்ஜியம்
[C] அமெரிக்கா
[D] பிரான்ஸ்
ü
அமெரிக்காவின்
வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், உலகின் முதல் உயிரி – மின்னணு மருந்துகளை
உருவாக்கியுள்ளனர். நரம்பு மீளுருவாக்கத்தை விரைவுபடுத்தும் மற்றும் சேதமடைந்த
நரம்பை குணப்படுத்துவதை மேம்படுத்தும் இது ஓர் உட்பொருத்தத்தக்க,
மக்கி அழியும் கம்பியில்லா சாதனமாகும். நேச்சர்
மெடிசின் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, ஒரு நாணயத்தின் அளவே உள்ள இந்தச் சாதனத்தின்
தடிமன் ஒரு தாளின் அளவே உள்ளது.
ü
பக்கவிளைவுகள்
அல்லது வழக்கமான, நிரந்தரமாக உடலில்பதிக்கப்பட்ட கருவி தொடர்புடைய ஆபத்துக்களை இது குறைக்கிறது.
எனினும், இந்தச் சாதனம்
இன்னும் மனிதர்களில் சோதனை செய்யப்படவில்லை, எதிர்காலத்தில் நரம்பு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்தச்
சிகிச்சை முறை பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
9.இந்தியாவின் புதிய தலைமை அரசு வழக்குரைஞர் யார்?
|
[B] குணால் மங்கல்
[C] துஷார்
மேத்தா
[D] பங்கஜ் ஜெயின்
ü
மத்திய
அரசின் தலைமை அரசு வழக்குரைஞராக இருந்த ரஞ்சித் குமார்,
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தனது
பதவியை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து, அந்தப் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில்,
இந்தியாவின் கூடுதல் தலைமை அரசு வழக்குரைஞரான
துஷார் மேத்தா புதிய தலைமை அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய பதவிக் காலம் ஜூன் 30,
2020 வரை நியமிக்கப்பட்டுள்ளது.
|
[A] அருணாச்சலப்பிரதேசம்
[B] அசாம்
[C] ஜார்கண்ட்
[D] ஒடிசா
ü
புகழ்பெற்ற
அசாமிய பாடகரும், இசையமைப்பாளருமான கிஷோர் கிரி (63), அக்டோபர் 7 அன்று
கெளகாத்தியில் காலமானார்.
தமிழ்நாடு
நடப்பு நிகழ்வுகள்
ü உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்,
வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் சூழல்
நிலைப்புத் தன்மை ஆகியவற்றை செயல்படுத்த தொழிற்சாலைக் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்
துறையால் ஐ.எஃப்.எல்.ஏ.டி.பி-யின் கீழ் தமிழ்நாட்டில் தோல் தொழிலை ஊக்கப்படுத்த
ரூ.107.33 கோடி மொத்த ஒதுக்கீட்டுடன் நான்கு திட்டங்கள் அமலாக்கத்திற்கு ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ளது.
o திருச்சியில் சி இ டி பி யை
மேம்படுத்துதல், நாகல்கேணி
குரோம் பேட்டையில் பல்லாவரம் சி இ டி பி, ராணிப்பேட்டையில் சிட்கோ கட்டம் – 1 சி இ டி பி,
ஈரோட்டில் பெருந்துறை தோல் தொழிற்சாலைகள்
எக்கோ செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட் ஆகியவை தமிழ்நாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட
திட்டங்களாகும்.
No comments:
Post a Comment