தமிழ் நடப்பு நிகழ்வுகள்
Tamil Current Affairs 15th 16th October 2018
1.நிகழாண்டின் உலக முட்டை தினத்துக்கான கருப்பொருள்
என்ன?
[A] Eat & Run
[B] Protein for
Life
[C] Put an Egg On
It
[D] Protein for
Good Health
ü
1996
ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் வரும் 2 ஆவது வெள்ளிக்கிழமை அன்று உலக முட்டை தினம்
கொண்டாடப்பட்டுவருகிறது. முட்டையின் நன்மைகள் குறித்தும்,
அதிலுள்ள சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை
மக்களுக்குத் தெரியப்படுத்துவதும் இந் நாளின் நோக்கமாகும். இயற்கையிலேயே
முட்டையில் அதிகளவு புரதச்சத்து உள்ளது.
ü
முட்டையில்
உள்ள புரதங்கள் மூளை, தசை வளர்ச்சி, நோய்த்தடுப்பு மற்றும் பொது நலனில் மிக
முக்கியப் பங்கினை வகிக்கின்றன. நிகழாண்டில் வரும் இந்த நாளுக்கான கருப்பொருள், “வாழ்க்கைக்கான
புரதம்” என்பதாகும்.
|
[A] இந்தியா
[B] பிரிட்டன்
[C] நியூசிலாந்து
[D] மலேசியா
ü
அக்.13 அன்று
மலேசியாவின் ஜோஹோர் பாருவில் நடந்த 8 ஆவது சுல்தான் ஜோகர் கோப்பை ஜூனியர் ஹாக்கி
போட்டியில், இந்தியாவை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து கிரேட் பிரிட்டன் அணி கோப்பையை
வென்றது. ஜப்பான், ஆஸி, மலேசியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை போட்டியில்
பங்கேற்ற பிற அணிகளாகும்.
|
[A] 113 ஆவது
[B] 123 ஆவது
[C] 103 ஆவது
[D] 133 ஆவது
ü
2018
உலகளாவிய பசி அட்டவணையில் (Global Hunger
Index) 119 நாடுகளில் இந்தியா 103 ஆவது இடத்தில் உள்ளது.
நிகழாண்டின் அறிக்கை, உலகளாவிய அரசு சாரா அமைப்புகளான ‘Concern
Worldwide’
(அயர்லாந்து) மற்றும் ‘Welthungerhilfe’ (ஜெர்மனி) ஆகியவற்றால் இணைந்து தயாரிக்க –ப்பட்டுள்ளது. 2000
ஆம் ஆண்டில் 29.2 என்ற அளவில் இருந்த மதிப்பு, 20.9 என்ற அளவுக்கு வந்துள்ளது. இம்மதிப்பு உலகளவில் பசியின்மை மற்றும்
ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை தீவிர வகைக்குள் உள்ளதென சுட்டிக்காட்டுகிறது.
4.நிகழாண்டின் புக்குவோக்கா கலை மற்றும்
பண்பாட்டுப்பரிசை வென்ற இந்திய நாட்டுப் புறக்கலைஞர் யார்?
|
[B] சுவரூப் கான்
[C] தீஜன்
பாய்
[D] மாலினி அவஸ்தி
ü
சத்தீஸ்கர்
மாநிலத்தைச் சேர்ந்த நாட்டுப் புறக்கலைஞரான தீஜன் பாய்க்கு, நிகழாண்டுக்கான புக்குவோக்கா
கலை மற்றும் பண்பாட்டுப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது ஜப்பானின் மிகவுயரிய கெளரவங்களுள்
ஒன்றாகும். மகாபாரத காவியத்தை ‘பண்டவாணி’ என்ற நாட்டுப்புறக் கலை வடிவில் பாடும்
முன்னணி கலைஞராவார் Dr.
தீஜன் பாய்.
|
[A] ஹரூகி முரகாமி
[B] மேரிஸ்
கான்டே (Maryse
Conde)
[C] நீல் கெய்மன்
[D] கிம் தூய்
ü
பிரெஞ்சு
(குவாதலூபியர்) வரலாற்றுப் புனைகதை எழுத்தாளரான மேரிஸ் கான்டே, 2018 ஆம்
ஆண்டுக்கான புதிய அகாடமி இலக்கியப்பரிசை பெற்றுள்ளார். இது இலக்கியத்திற்கான நோபல்
பரிசுக்கு எதிராக உருவாக்கப்பட்டதாகும். கூட்டுப்பங்கு நிதித்திரட்டல் மற்றும் நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்ட £87,000
பவுண்டு ரொக்கப்பரிசு, நோபல் பரிசு வழங்கப்படும் தேதிக்கு ஒருநாள் முன்னதாக (9
டிசம்பர் 2018) கான்டேவுக்கு வழங்கப்படும்.
ü
#MeToo இயக்கத்தின் ஒரு பகுதியாக பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்ததன்
காரணத்தால், இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1949 ஆம் ஆண்டிலிருந்து முதன்முறையாக இம்முறை
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
|
[A] ஆஸ்திரேலியா
[B] ரஷ்யா
[C] இலங்கை
[D] சீனா
ü
இந்தியா,
சீனா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான முத்தரப்பு
ஒப்பந்தத்தின் கீழ் அக்.15 முதல் 26 ஆம் தேதி வரை ஆப்கானிஸ்தானின் தூதரக
அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக, இந்தியாவும், சீனாவும் இணைந்து அதன் முதலாவது
கூட்டுத்திட்டத்தை தொடங்கியுள்ளன.
ü
சீனாவின்
வூகன் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு
இடையே நடந்த ஒரு முறைசாரா உச்சிமாநாட்டின் போது இதுபோன்ற ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்
ஏற்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் மாற்றங்கள் ஏற்படுத்தவும்,
தலிபான் அரசுகளை அகற்றி அமைதியை நிலைநாட்டவும் இந்தத் திட்டம் உதவும்.
|
[A] ரோஜர் பெடரர்
[B] போர்னா கோரிக்
[C] நோவக் ஜோகோவிச்
[D] ஆண்டி முர்ரே
ü
சீனாவின்
ஷாங்காய் நகரில் நடந்த ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், செர்பிய டென்னிஸ் வீரர்
நோவக் ஜோகோவிச், குரோஷிய வீரர் போர்னா கோரிக்கை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன்
பட்டத்தை கைப்பற்றினார். 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அவர் தொடர்ந்து 18 ATP போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம்,
பெடரரிடம் இருந்த இரண்டாமிடத்தை ஜோகோவிச் கைப்பற்றியுள்ளார். இது ஜோகோவிச்
வெல்லும் நான்காவது ஷாங்காய் மாஸ்டர்ஸ் பட்டமாகும்.
8.அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) புதிய தலைமை இயக்குநராக
நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
|
[B] கிரிஷ் சஹானி
[C] அமன் சக்சேனா
[D] ஜகதிஷ் K பால்
ü
அறிவியல்
மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) புதிய தலைமை இயக்குநராகவும், அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறை செயலாளராகவும்
உயிரியலாளர் சேகர் C மான்டே நியமிக்கப்பட்டுள்ளார். CSIR’ன் முன்னாள் தலைமை இயக்குநர் கிரிஷ் சஹானி, ஆகஸ்ட் 31 அன்று ஓய்வுபெற்றதிலிருந்து இப்பதவி காலியாகவே இருந்தது.
ü
மான்டே
தற்சமயம், புனேவில் உள்ள
தேசிய செல் அறிவியல் மையத்தின் இயக்குநராகவும், RSS இணை சுதேசி அறிவியல் இயக்கமான விஞ்ஞான
பாரதியின் நிர்வாகியாகவும் இருக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள DNA கைரேகை மற்றும் கண்டறிதலுக்கான மையத்திலும் Dr. மான்டே
பணிபுரிந்துள்ளார்.
|
[B] Reducing
Disaster Economic Losses
[C] Home Safe
Home
[D] Resilience is
for Life
ü
பேரிடர்
இன்னல் குறைப்புபற்றி உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர்
13 அன்று சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மக்கள்
தங்களுக்கு ஏற்படும் பேரிடர் இன்னல்களை எங்ஙனம் குறைத்துக்கொள்கிறார்கள் மற்றும்
விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள் என்பதையும் இந்நாள் கூறுகிறது. நிகழாண்டில்
வரும் இந்நாளுக்கான கருப்பொருள், ‘Reducing
Disaster Economic Losses’ என்பதாகும்.
10. “Maharana Pratap: The Invincible Warrior”
என்னும் நூலின் ஆசிரியர் யார்?
|
[B] சுமித் சர்கார்
[C] ரீமா
ஹூஜா (Rima
Hooja)
[D] உமா சக்ரவர்த்தி
ü
“Maharana Pratap:
The Invincible Warrior” என்னும் நூலை புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ரீமா
ஹூஜா எழுதியுள்ளார். அக்பரின் வலிமைவாய்ந்த படைக்கு நீண்டகாலமாக பிடிகொடுக்காமல்
மஹாராணா பிரதாப் எவ்வாறு சமாளித்தார் என்பதை இந்நூல் விவரிக்கிறது. மஹாராணா
பிரதாப் குறித்த இந்தப் புதிய நூல், மாபெரும் ராஜ்புத் வீரரான அவரின் வாழ்வை ஆராய்கிறது.
மேலும் முகலாயர்களுடனான அவரின் பிரபல ஹல்திகாடி போரை மீளாய்வு செய்துள்ளது.
தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்
ü
தொழிற்சாலைகள்,
கட்டுமானங்கள் மற்றும் சுரங்கங்களில்
‘விபத்தில்லா நோக்கு’ என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு சென்னை
கிண்டியில் நடைபெற்றது.
ü
புதுச்சேரி
ஐந்தாவது உலக தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதலைமைச்சர்
நாராயணசாமி, மொரீசியஸ்
அதிபர் பரமசிவம் வையாபுரி பிள்ளை, கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து உட்பட சிங்கப்பூர்,
மலேசியா , தென்னாப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளை
சேர்ந்த முந்நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ReplyDeleteHey TNPSC aspirants, the tnpsc hall ticket download for group 4 notification has now been released and the hall tickets can be downloaded easily.
All the TNPSC aspirants are required to download the hall ticket for the exam by visiting the official website or by visiting our website.
Make sure you download it before the last ending date.
Thanks.
IEEE Final Year projects Project Centers in Chennai are consistently sought after. Final Year Students Projects take a shot at them to improve their aptitudes, while specialists like the enjoyment in interfering with innovation. For experts, it's an alternate ball game through and through. Smaller than expected IEEE Final Year project centers ground for all fragments of CSE & IT engineers hoping to assemble. Final Year Projects for CSE It gives you tips and rules that is progressively critical to consider while choosing any final year project point.
ReplyDeleteSpring Framework has already made serious inroads as an integrated technology stack for building user-facing applications. Spring Framework Corporate TRaining the authors explore the idea of using Java in Big Data platforms.
Specifically, Spring Framework provides various tasks are geared around preparing data for further analysis and visualization. Spring Training in Chennai
The Nodejs Training Angular Training covers a wide range of topics including Components, Angular Directives, Angular Services, Pipes, security fundamentals, Routing, and Angular programmability. The new Angular TRaining will lay the foundation you need to specialise in Single Page Application developer. Angular Training