Tamil Current Affairs 17th October 2018


Tamil Current Affairs 17th October 2018


1.இந்திய சர்வதேச பட்டு கண்காட்சி (IISF – 2018) நடைபெற்ற நகரம் எது?

[A] கெளகாத்தி
[B] புனே
[C] புது தில்லி
[D] லக்னோ
ü  அக்.16 அன்று புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில்,  6 ஆவது இந்திய சர்வதேச பட்டு கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி தொடங்கிவைத்தார். இந்த மூன்று நாள் கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து 108 நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சிக்கு வைக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களிலிருந்து 10 நிறுவனங்களும், ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து 9 நிறுவனங்களும் இதில் பங்கேற்றுள்ளன.
ü  சீனாவிற்கு அடுத்ததாக உலகளவில் பட்டு உற்பத்தி செய்வதில் இந்தியா 2வது இடத்தைப் பிடித்து, மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக வளர்ந்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, வியட்நாம் மற்றும் இலங்கையில் இந்திய பட்டு பொருட்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. இந்த மூன்று நாள் கண்காட்சியில் $20 மில்லியனுக்கு மேல் விற்பனை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


2.நடப்பாண்டிற்கான ‘இந்திய சமூக தொழில்முனைவோர்’ விருது பெற்றவர் யார்?
[A] பிரேமா கோபாலன்
[B] ஸ்மிதா ராம்
[C] ராமகிருஷ்ணா NK
[D] ராஜீவ் குமார்
ü  ஸ்வயம் சிக்ஷன் பிரயோக்கின் (SSP) நிறுவனர் பிரேமா கோபாலனுக்கு, நடப்பாண்டிற்கான ‘இந்திய சமூக தொழில்முனைவோர் – India Social Entrepreneur of the Year (SEOY)’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தொழில் முனைவு ஊக்குவிப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் அவரது பணிக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
ü  5000 சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு; பெண்கள் தலைமையிலான தொழில்களுக்கு ஒரு நிவாரண நிதியம்; பெண்களுக்கான ஒரு தொழில்முனைவு மற்றும் தலைமைத்துவப் பள்ளி; பெண் வணிகர்களுக்கு கிடங்கு, வர்த்தகம், சந்தைப்படுத்துதல் மற்றும் விநியோக சேவைகளை வழங்கும் ஒரு சந்தை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நான்கு துறைகள் SSP மாதிரியில் உள்ளன.
ü  சமூக தொழில்முனைவுகளுக்காக 2010 ஆம் ஆண்டில், ஜுபிலந் பாரதிய அறக்கட்டளை & ஸ்வாப் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ‘SEOY’ விருதினை நிறுவின. நடைமுறையில் சாத்தியப்படும் மற்றும் நிலையான தீர்வுகளை கொண்டுவரும் சிறந்த தொழில்முனைவோர் & தொழினுட்ப அறிஞர்களை இவ்விருது அங்கீகரிக்கிறது. சமூக தொழில்முனைவுகளுக்கான ஸ்வாப் அறக்கட்டளை, உலக பொருளாதார மன்றத்தின் (WEF) ஓர் இணை அமைப்பாகும்.


3.தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) புதிய தலைவர் யார்?
[A] துதி கேக்கர்
[B] பிரியங் கனூங்கோ
[C] சாந்த சின்ஹா
[D] குஷல் சிங்
ü  பிரியங் கனூங்கோ, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் புதிய தலைவராக மூன்றாண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். NCPCR’ன் முன்னாள் தலைவர் துதி கேக்கர், செப்டம்பர் 16 அன்று ஓய்வுபெற்றதிலிருந்து இப்பதவி காலியாகவே இருந்தது. தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், 2005 டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட குழந்தை உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தன்னாட்சி பெற்ற அரசமைப்பாகும். இந்த அமைப்பு, 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் செயல்பட தொடங்கியது.
4. 2019 IAAF உலக தொடரோட்டங்களை நடத்தும் நாடு எது?


[A] இந்தோனேஷியா
[B] தென் கொரியா
[C] ஜப்பான்
[D] சீனா
ü  சர்வதேச தடகள கூட்டமைப்புகள் சங்கத்தின் (IAAF) நான்காவது உலக தொடரோட்டங்களை (Relays) யோகோஹாமாவில் (டோக்கியோவிற்கு அருகேயுள்ள) உள்ள நிசான் அரங்கில், ஜப்பானிய தடகள கூட்டமைப்புகள் சங்கம் நடத்தவுள்ளது. இந்தப் போட்டிகள் வரும் 2019 மே 11-12 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ü  இது, 2019 ஆம் ஆண்டு தோஹாவில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்சிப் மற்றும் 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிப் போட்டியாக இருக்கும். உலக தரவரிசையில் முதல் பன்னிரண்டு இடங்களைப்பிடிக்கும் அணிகள் தோஹாவுக்கும், முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் டோக்கியோவுக்கும் செல்லும்.


5.ஆறாவது RCEP அமைச்சரவை சந்திப்பில் பங்கேற்ற இந்திய குழுவின் தலைவர் யார்?
[A] அஜித் தோவல்
[B] சுரேஷ் பிரபு
[C] சுஷ்மா சுவராஜ்
[D] C R செளத்ரி
ü  ஆறாவது RCEP அமைச்சரவை சந்திப்பு, அக்.12-13 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரில் நடைபெற்றது. 16 RCEP நாடுகளின் அமைச்சர்களும் ASEAN மற்றும் ASEAN’ன் FTA பங்காளர்களிடையே நவீன, விரிவான மற்றும் பரஸ்பர நன்மை வாய்ந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தம் பற்றி விவாதித்தனர். இதில் பங்கேற்ற இந்திய குழுவுக்கு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் C R செளத்ரி தலைமை தாங்கினார்.
ü  RCEP என்பது பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு (Regional Comprehensive Economic Partnership) கூட்டணியாகும். இது 10 ASEAN குழு உறுப்பினர்களையும் (புரூணை, கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, ஃபிலிப்பைன்ஸ், லாவோஸ் மற்றும் வியட்நாம்) மற்றும் அதன் 6 சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பங்காளர்களான இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸி., மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் கொண்டுள்ளது.

6.இந்தியாவில், எந்தத் தேதியில் தேசிய பெண் விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது?
[A] அக்டோபர் 14
[B] அக்டோபர் 15
[C] அக்டோபர் 16
[D] அக்டோபர் 17
ü  விவசாயம் மற்றும் அதுசார்ந்த துறைகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கும் பொருட்டு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15 அன்று இந்தியாவில் தேசிய பெண் விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அக்.15 ஆம் தேதி, தேசிய பெண் விவசாயிகள் தினமாக கடைப்பிடிக்கப்ப –டும் என 2016 ஆம் ஆண்டில் மத்திய விவசாயத்துறை அமைச்சகம் அறிவித்தது.
ü  விதைத்தல், நாற்று நடுதல், நீர்ப்பாய்ச்சுதல், தண்ணீர் வடித்தல், உரமிடுதல், பயிர் பாதுகாத்தல், களைபறித்தல், அறுவடை, விளைபொருட்களைப் பத்திரப்படுத்தல் என அனைத்து விவசாயப் பணிகளையும் இன்று பெண்கள் செய்கின்றனர்.


7.எந்த நகரத்தில், இந்தியாவின் முதலாவது இணையவழி விவசாய மற்றும் உணவு வணிக கற்றல் தளம் தொடங்கப்பட்டுள்ளது?
[A] கொச்சி
[B] அகர்தலா
[C] வாரங்கல்
[D] நாக்பூர்
ü  இந்தோ – UK கூட்டுமுயற்சியான SRiX வேளாண் – வணிக அகாடமி, வாரங்கலில் உள்ள SR Innovation Exchange (SRiX) வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதலாவது இணையவழி விவசாய மற்றும் உணவு வணிக கற்றல் தளமான இதனை, ஹைதராபாத்தில் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் ஆண்ட்ரூ பிளெமிங் தொடங்கிவைத்தார்.
ü  SRiX என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் தொழில் நுட்ப வணிக காப்பகமாகும். வேளாண்மை, தூய தொழினுட்பம் மற்றும் இணைய உலகம் ஆகியவற்றின் துளிர் நிறுவனங்களில் இது கவனம் செலுத்துகிறது. சரஸ் அகாடமியும் (UK சார்ந்த நிறுவனம்) மற்றும் SRiX அகாடமியும் இணைந்து இந்த அகாடமியை தொடங்கியுள்ளன. இது தெலுங்கானா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஒத்துழைப்பை காட்டுகிறது.


8. 2018 ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ சின்னம் எது?
[A] Olly
[B] Zabivaka
[C] Gauchito
[D] Rhino
ü  14 ஆவது ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை புவனேசுவரில் உள்ள கலிங்கா அரங்கத்தில் நடைபெறவுள்ளது. ஒடிசா மாநிலத்தின் பூரி கடற்கரையில், இப்போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னமாக ஆலி ஆமை அறிவிக்கப்பட்டுள்ளது.
ü  நிகழ்வுக்கான விளம்பரத்துடன், ஒடிசாவில் அழிவின் விளிம்பிலிருப்பதாகக் கூறப்படும் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 18 நாள் நடைபெறும் இந்நிகழ்வில் இந்தியா உட்பட 16 நாடுகள் பங்கேற்கின்றன.


9.அண்மையில், எந்தத் தேதியில் உலக கிராமப்புற பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது?
[A] அக்டோபர் 14
[B] அக்டோபர் 15
[C] அக்டோபர் 16
[D] அக்டோபர் 17
ü  கிராமப்புற குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல், கிராமப்புற வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த நலனை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் பெண்கள் மற்றும் சிறுமியர்களின் முக்கியப்பங்கை அங்கீகரிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்.15 அன்று உலக கிராமப்புற பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ü  நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “நீடித்த உட்கட்டமைப்பு, சேவைகள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான சமூக பாதுகாப்பு மற்றும் கிராமப்புற பெண்கள் மற்றும் சிறுமியருக்கு அதிகாரம் அளித்தல் – Sustainable Infrastructure, Services and Social Protection for Gender Equality and the Empowerment of Rural Women and Girls” என்பதாகும்.


10.அண்மையில் காலமான பால் ஆலன், பில் கேட்ஸ் உடன் இணைந்து எந்த ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவினார்?
[A] 1971
[B] 1983
[C] 1975
[D] 1980
ü  மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தனது குழந்தைப் பருவ நண்பரான பில் கேட்சுடன் இணைந்து நிறுவிய பால் ஆலன் (65), அக்.15 அன்று சியாட்டிலில் காலமானார். ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் $20 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் ஆலன் 44 ஆவது இடத்திலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.No comments:

Post a comment