Tamil Current Affairs 19th October 2018


Tamil Current Affairs 19th October 2018


1.அண்மையில் எந்தத் தேதியில், உலக உடற்காய தினம் கடைபிடிக்கப்பட்டது?

[A] அக்டோபர் 14
[B] அக்டோபர் 15
[C] அக்டோபர் 16
[D] அக்டோபர் 17
ü  ஒவ்வோர் ஆண்டும் அக்.17 அன்று உலக உடற்காய தினம் (Trauma Day) கடைபிடிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான கட்டத்தில் ஓர் உயிரைப் பாதுகாத்து, உடற்காயத்தால் உண்டாகும் மரணத்தைத் தவிர்க்கக் கையாள வேண்டிய வழிமுறைகளைக் கடைபிடித்து நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே உலக உடற்காய தினம் அனுசரிக்கப்படுகிறது.
ü  உலகம் முழுவதும் மரணம் மற்றும் ஊனத்திற்கான முக்கியக்காரணம் உடற்காயமே ஆகும். சாலை விபத்து, தீ, தவறிவிழுதல், பெண்கள், குழந்தைகள், முதியோர் போன்ற பலவீனமான மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை மற்றும் குற்றச்செயல் போன்றவற்றால் உடற்காயம் ஏற்படுகிறது. மற்ற எல்லா காரணங்களையும் விடவும் உலக முழுவதும் சாலை விபத்துக்களே உடற்காயத்துக்கான பெரும் காரணமாக விளங்குகிறது.


2. 12 ஆவது ஆசிய ஐரோப்பா உச்சிமாநாட்டின் (ASEM) கருப்பொருள் என்ன?
[A] Working Together for a Sustainable and Secure Future
[B] Global Partners for Global Challenges
[C] 20 years of ASEM: Partnership for Future
[D] Biodiversity and Cultural Heritage
ü  12 ஆவது ஆசிய – ஐரோப்பிய உச்சிமாநாடு அக்.18 அன்று பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் ‘உலக சவால்களை எதிர்கொள்ள உலக பங்களிப்பாளர்கள்’ என்ற கருப்பொருளில் தொடங்கியது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்கும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவிற்குத் தலைமையேற்கிறார் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கைய நாயுடு.
ü  2017 ஆகஸ்ட் மாதம் குடியரசுத் துணைத்தலைவராக பொறுப்பேற்ற பின் அவர் முதல்முறையாக இந்த இருதரப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார். முப்பது ஐரோப்பிய நாடுகள் மற்றும் 21 ஆசிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய யூனியன் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின் செயலாளர் ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
ü  ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்த உச்சிமாநாடு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய துறைகளில் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே பேச்சுவார்த்தைக்கும், ஒத்துழைப்புக்கும் மிகவுயர்ந்த தளமாக கருதப்படுகிறது.


3.நடப்பாண்டில் புனைவுக்கான மேன் புக்கர் பரிசை வென்றுள்ளவர் யார்?
[A] அன்னா பன்ஸ்
[B] வால் மெக்டெர்மிட்
[C] லியோ ராப்சன்
[D] லீனே ஷாப்டன்
ü  வட அயர்லாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பன்ஸ் (56), நடப்பாண்டுக்கான மேன் புக்கர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பரிசை வெல்லும் ஐரீஷ் பெண்மணி அன்னா பன்ஸ் ஆவார். ‘மில்க்மேன்’ என்ற அவரது நூலுக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த நூலில் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக வட அயர்லாந்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை பற்றி அன்னா பர்ன்ஸ் விரிவாக எழுதியுள்ளார். ஏற்கனவே அவர், ‘No Bones’ மற்றும் ‘Little Constructions’ என்ற இரு புதினங்களை எழுதியுள்ளார்.
4. 2018 இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில், வில்வித்தை போட்டியில் இந்தியாவின் முதல் வெள்ளிப்பதக்கத்தை வென்றவர் யார்?


[A] ஸ்வப்னா குமார்
[B] ஜெர்மி லல்ரினுங்கா
[C] ஆகாஷ் மாலிக்
[D] தபாபி தேவி
ü  இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில், வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஆகாஷ் மாலிக், வெள்ளி வென்றார். இதன்மூலம், இளையோர் ஒலிம்பிக் போட்டிகளின் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப்பதக்கம் வென்றுதந்த வீரர் என்ற பெருமையை ஆகாஷ் மாலிக் பெற்றுள்ளார். ஆடவர் தனிநபர் ‘ரீகர்வ்’ பிரிவின் இறுதிச்சுற்றில் ஆகாஷ், அமெரிக்காவின் டிரென்டன் கெளல்சிடம் 0-6 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்ந்தார்.
ü  இதன்மூலம், 3 தங்கம், 9 வெள்ளி, ஒரு வெண்கலம் என 13 பதக்கங்களுடன் 17 ஆவது இடத்தைப் பிடித்து இந்தியா போட்டியை நிறைவு செய்தது. ரஷ்யா 29 தங்கம், 18 வெள்ளி, 12 வெண்கலம் என 59 பதக்கங்களுடன் முதலிடமும் சீனா, ஜப்பான் முறையே அடுத்த இரு இடங்களையும் பிடித்தன.


5. நடப்பாண்டிற்கான WEF’ன் சர்வதேச போட்டித்திறன் குறியீட்டில் (Global Competitiveness Index) இந்தியாவின் தரநிலை என்ன?
[A] 48 ஆவது
[B] 58 ஆவது
[C] 38 ஆவது
[D] 28 ஆவது
ü  நடப்பாண்டிற்கான WEF’ன் சர்வதேச போட்டித்திறன் குறியீட்டில் 62.0 மதிப்பெண்ணுடன் இந்தியா 58 ஆவது இடத்தில் உள்ளது. மொத்தமுள்ள 140 நாடுகளின் பட்டியலில், முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அதைத்தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி இரண்டாவது, 3 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. G20 பொருளாதார மாநாட்டிற்கு பிறகு, இந்தியாவின் தரநிலை 2017 ஆம் ஆண்டை விட 5 இடம் உயர்ந்துள்ளது.
ü  BRICS நாடுகளின் பொருளாதாரங்களில், சீனா 72.6 புள்ளிகளுடன் 28 வது இடத்தில் உள்ளது. “தெற்காசியாவின் முக்கிய உந்துசக்தியாக இந்தியா உள்ளதாகவும், மிகவும் திறமையான உட் கட்டமைப்பு முறையை அது நம்பியுள்ளதாகவும், போக்குவரத்து உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் இந்தியா அதிகளவில் முதலீடு செய்துள்ளதாகவும் உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
ü  அறிக்கையின் படி, இந்தியாவின் மிகப்பெரிய போட்டித்திறன் நன்மைகள் அதன் சந்தை அளவு, புதுமை (குறிப்பாக அதன் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் வணிக இயக்கவியல் சீர்குலைக்கும் வணிகங்களின் எண்ணிக்கை உட்பட) ஆகும். உலக பொருளாதார மன்றத்தின் சர்வதேச போட்டித்திறன் குறியீட்டு 4.0 என்பது பொருளாதாரம் உற்பத்தித் திறனை நிர்ணயிக்கும் காரணிகளின் தொகுப்பை மதிப்பிடும் ஒரு கூட்டுக் குறியீடாகும் - இது நீண்ட கால வளர்ச்சியின் மிக முக்கியமான தீர்மானமாக பரவலாக கருதப்படுகிறது.

6.மரிஜுவானா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கியுள்ள G7 நாடு எது?
[A] பிரான்ஸ்
[B] ஜெர்மனி
[C] அமெரிக்கா
[D] கனடா
ü  உருகுவேக்கு அடுத்ததாக நாடு முழுவதும் மரிஜுவானா பயன்படுத்த சட்டபூர்வ அனுமதி அளித்து கனடா அரசு சட்டம் இயற்றியுள்ளது. கன்னாபிஸ் சட்டம் (அல்லது சி-45 சட்டம்) அக்டோபர் 17 அன்று அமலுக்கு வந்தது. இந்தப் புதிய சட்டம், கனடாவில் மரிஜுவானாவை வளர்க்கவும், கேளிக்கை விடுதிகளில் முறையான அனுமதியுடன் மரிஜுவானாவை விற்பனை செய்யவும், சில கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை பயன்படுத்தவும் வழிவகை செய்கிறது.

ü  இந்தப் புதிய சட்டம், 18 வயது நிரம்பிய ஒருவரை பொது இடத்தில் 30 கிராம் வரையிலான உலர்ந்த மரிஜுவானாவை உட்கொள்ள அனுமதிக்கிறது. G7 நாடுகளிலேயே மரிஜுவானாவை பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கி பயன்படுத்தவும் அனுமதியளிக்கும் முதல் நாடு கனடா ஆகும். 2001 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு மரிஜுவானாவை பயன்படுத்துவது கனடாவில் அனுமதிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

ü  G7 என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாகும். மரிஜுவானா என்பது மருத்துவப் பயன்பாடு மற்றும் போதைக்காக கன்னாபிஸ் செடியிலிருந்து பெறப்படும் ஒரு வித போதைப்பொருள் ஆகும்.


7.FH-98’ என்ற போக்குவரத்துக்கான உலகின் மிகப்பெரிய ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக சோதித்துள்ள நாடு எது?
[A] ஜெர்மனி
[B] சீனா
[C] ஜப்பான்
[D] இந்தோனேசியா
ü  போக்குவரத்துக்கான உலகின் மிகப்பெரிய ஆளில்லா விமானத்தை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. Feihong-98 (FH-98) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விமானம் ஏறத்தாழ 5.25 டன் எடை கொண்ட பொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. சீன விண்வெளி தொழில்நுட்பக் கழகம் தயாரித்துள்ள இந்த விமானம் வடக்கு சீனாவின் இன்னர் மங்கோலியா பகுதியில் உள்ள என்ற இடத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
ü  4,500 மீ., உயரத்தில் 180 கி.மீ., வேகத்தில் பறக்கும் திறன்கொண்ட FH-98, 1,200 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கண்காணிக்கும் திறமையும் கொண்டது. இந்த விமானத்தின் மூலம் பெருமளவு ஆயுதங்களை வீரர்களுக்கும், குறிப்பிட்ட இடங்களுக்கும் கொண்டுசெல்ல முடியும்.
8. அண்மையில் எந்தத் தேதியில், உலக மாணவர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது?


[A] அக்டோபர் 14
[B] அக்டோபர் 15
[C] அக்டோபர் 16
[D] அக்டோபர் 17
ü  இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர், அறிவியல் விஞ்ஞானி Dr. APJ அப்துல்கலாமின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் அக்.15 அன்று உலக மாணவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘Wings of Fire’, ‘My journey’, ‘Ignited Minds – Unleashing the power within India’ மற்றும் ‘India 2020 – A Vision for the New Millennium’ உள்ளிட்டவை அவரெழுதிய சில நூல்களாகும். 2015ம் ஆண்டு ஐ.நா அவை அக்.15’ஐ ‘உலக மாணவர்கள் தினம்’ என அறிவித்தது.


9.அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ், அமைச்சரின் பதவி விலகலை இந்தியக் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்வார்?
[A] பிரிவு 73
[B] பிரிவு 75
[C] பிரிவு 77
[D] பிரிவு 79
ü  பிரதமர் மோடியின் ஆலோசனையின் பேரில் இந்தியக் குடியரசின் அமைச்சரவையை சேர்ந்த M J அக்பரின் ராஜிநாமாவை அரசியலமைப்பின் 75 ஆவது பிரிவின் விதி (2)ன் கீழ் இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் ஏற்றுக்கொண்டார். பல பெண் பத்திரிகை –யாளர்கள் அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை கூறியதன் காரணமாக அவர் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.


10. Dharma Guardian – 2018” என்ற முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சி, இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலானது?
[A] தென்னாப்பிரிக்கா
[B] பிரேசில்
[C] ஜப்பான்
[D] சிலி
ü  இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான “Dharma Guardian – 2018” என்ற முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சியானது நவம்பர் 01 – நவம்பர் 14 வரை வைரெங்காதேவில் உள்ள கிளர்ச்சி எதிர்ப்பு போர்முறை பள்ளியில் நடைபெறவுள்ளது. 14 நாள் நடைபெறும் இப் பயிற்சியின்போது, இரு நாட்டுப்படைகளிடையே இருக்கும் தொடர்பு அதிகரிக்கப்படும்.
ü  இருதரப்பினரும் கூட்டாக பயணித்து, திட்டமிட்டு, நன்கு திட்டமிடப்பட்ட உத்திசார் பயிற்சிகளை மேற்கொள்வார்கள். இருதரப்பு சார்ந்த வல்லுநர்கள் நிபுணத்துவம் குறித்த தங்களின் விரிவான அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள்.No comments:

Post a comment