Tamil Current Affairs 1st 2nd October 2018


Tamil Current Affairs 1st 2nd October 2018
1.சாலை விபத்தில் காயமடைந்து, உயிருக்கு போராடும் நபர்களுக்கு உதவி செய்வோருக்கு சட்டரீதியில் பாதுகாப்பு வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலம் எது?


[A] ஒடிசா
[B] அசாம்
[C] கர்நாடகா
[D] பஞ்சாப்
ü  சாலை விபத்தில் காயமடைந்து, உயிருக்கு போராடும் நபர்களுக்கு உதவி செய்வோருக்கு சட்ட ரீதியில் பாதுகாப்பு அளிக்கும் வகையில், கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள “Karnataka Good Samaritan and Medical Professional (Protection and Regulation During Emergency Situations) மசோதா – 2016’க்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
ü  இதன்மூலம், சாலை விபத்தில் சிக்குவோரை, சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து உதவும் நல்ல மனம் படைத்தோருக்கு, கர்நாடக மாநில அரசு நிதியுதவி அளிப்பதுடன், அந்த வழக்கு சம்பந்தமாக, காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்திற்கு, தொடர்ந்து நேரில் வருவதில் இருந்து விலக்கும் அளிக்கவுள்ளது. அந்த வழக்குக்கான செலவு முழுவதையும், மாநில அரசே ஏற்கும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ü  விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுவோர்க்கு உதவுவோர்க்கு சட்டரீதியில் பாதுகாப்பளிப்பது, காவல்துறை மற்றும் விசாரணை அதிகாரிகளால் துன்புறுத்தல் இருக்காது என்ற அச்சம் இல்லாமல் அவசர சிகிச்சை அளிப்பது, காயமடைந்த நபர்களுக்கு அவசர காலத்தில் உடனடி மருத்துவ உதவி அளிப்பது ஆகியவற்றை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். இதுபோன்ற சட்டம், நாட்டிலேயே கர்நாடகத்தில்தான் முதல்முறை கொண்டுவரப்பட்டுள்ளது.


2.நிகழாண்டின் ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டியில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளவர் யார்?
[A] மன்ப்ரீத் சிங்
[B] ரூபீந்தர் பால் சிங்
[C] சோம்வார்பேட்டை விட்டலாச்சார்யா சுனில்
ü  இந்தியா ஹாக்கி அணியின் அணித் தலைவர் சர்தார் சிங் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஹாக்கி போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, ஆசிய அணிகளுக்கான 5 ஆவது ஆசிய சாம்யின்ஸ் ஹாக்கி தொடர் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மஸ்கட்டில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா,தென் கொரியா, ஓமன் மற்றும் ஜப்பான் அணிகள் பங்கேற்கின்றன.
ü  இந்தத் தொடரில் கலந்துகொள்ளும் இந்திய அணியின் தலைவராக நடுகள வீரர் மன்ப்ரீத் சிங் செயல்படுவார் என இந்திய ஹாக்கி வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தொடரில் விளையாடும் 18 வீரர்கள் கொண்ட அணி விபரத்தையும் வெளியிட்டது.


3.அண்மையில் காலமான ஜஸ்தேவ் சிங், தூர்தர்ஷனில் 48 ஆண்டுகளாக என்னவாக பணிபுரிந்தார்?
[A] சட்ட வல்லுநர்
[B] சந்தைப்படுத்தல் ஆலோசகர்
[C] உள்ளடக்க மேலாளர்
[D] ஹிந்தி வர்ணனையாளர்
ü  தூர்தர்ஷனில் 48 ஆண்டுகளாக ஹிந்தி வர்ணனையாளராக பணிபுரிந்த ஜஸ்தேவ் சிங் (87), செப்.25 அன்று புது தில்லியில் காலமானார். 1963 ஆம் ஆண்டிலிருந்து 48 ஆண்டுகளாக அவர் சுதந்திர தின மற்றும் குடியரசு தின அணிவகுப்பு ஒளிபரப்பிற்கான அதிகாரப்பூர்வ வர்ணனையா –ளராக இருந்துள்ளார்.
ü  ஒலிம்பிக் இயக்கத்தை பரப்பியமைக்காக 1988 ஆம் ஆண்டு சியோல் பதிப்பின்போது சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் ஜுவான் அன்டோனியோ சமரஞ்ச் அவர்களால் ‘ஒலிம்பிக் ஆர்டர்’ கெளரவம் இவருக்கு வழங்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2008 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
4. 2018 UNHCR நான்சென் அகதிகள் விருதுக்கான அதிகாரப்பூர்வ வெற்றியாளரான Dr. இவான் அடார் அதாஹா, எந்த நாட்டைச் சேர்ந்தவர்?


[A] எகிப்து
[B] தெற்கு சூடான்
[C] ஸ்பெயின்
ü  உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு சூடானில் உள்ள புஞ்ச் நகரத்தில் போதிய மின்சாரம் மற்றும் மருந்துகள் இல்லாத நிலையிலும் அங்குள்ள லட்சக்கணக்கான அகதிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துவரும் தெற்கு சூடானை சேர்ந்த Dr. இவான் அடார் அதாஹாவுக்கு ஐ.நா. அகதிகள் நிறுவனம் (UNHCR) தன் மிகவுயரிய விருதான நான்சென் அகதிகள் விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ü  தெற்கு சூடானில் கிட்டத்தட்ட 300000 அகதிகள் உள்ளனர். அவர்களில் 92 சதவீதம் பேர் தெற்கு சூடானிய எல்லைக்கு அருகிலுள்ள தென் கொர்டோபான் மற்றும் நீல நைல் பகுதியைச் சேர்ந்த சூடானியர்கள் ஆவர். அகதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றும் நபர்களுக்கு ஐ.நா ஆண்டுதோறும் ‘நான்சென்’ விருதை வழங்கி வருகிறது.
ü  ஐ.நா.வின் முதல் அகதிகளுக்கான உயராணையராக இருந்த நார்வேவை சேர்ந்த ஃபிரிட்ஜோஃப் நான்சென்னின் நினைவாக இவ்விருது வழங்கப்படுகிறது. நிகழாண்டின் விருது வழங்கும் விழா ஜெனிவாவில் அக்டோபர் 1 அன்று நடைபெற்றது.


5.அண்மையில், ரயில்வே பாதுகாப்பு படையின் (RPF) புதிய இயக்குநராக அருண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். RPF இன் குறிக்கோளுரை (Motto) யாது?
[A] Duty Unto Death
[B] Service and Loyalty
[C] Bahujana Hitaya Bahujana Sukhaya
[D] Service, Security and Brotherhood
ü  ரயில்வே பாதுகாப்பு படையின் (RPF) புதிய இயக்குநராக அருண் குமார் (உத்தரப்பிரதேசம் : 1985) நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை அவர் இந்தப் பதவியில் இருப்பார். இவருக்கு முன் தர்மேந்திர குமார் இப்பதவியில் இருந்தார். இந்த நியமனத்துக்கு முன், அருண் குமார், எல்லை பாதுகாப்புப் படைப் பிரிவின் சிறப்பு தலைமை இயக்குநராக இருந்தார்.
ü  மத்திய புலனாய்வுத் துறையில் (CBI) இணை இயக்குநர் பதவி உட்பட பல பதவிகளை அவர் வகித்துள்ளார். ரயில்வே பாதுகாப்புப் படை என்பது இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய ரயில்வேயின் பாதுகாப்பிற்கும், பயணிகளின் பாதுகாப்பிற்கும் உருவாக்கப்பட்ட படையாகும்.சேவை மற்றும் நேர்மை தவறாமை என்பது இந்தப் படையின் குறிக்கோளுறை ஆகும்.

6.இந்தியாவின் முதல் வெள்ள முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை முறையை (Flood Forecasting and Early Warning System) அறிமுகப்படுத்தியுள்ள நகரம் எது?
[A] சென்னை
[B] கொச்சி
[C] ஹைதராபாத்
[D] கொல்கத்தா
ü  பேரிடர்களுக்கு முன்னரும் பேரிடர்களின்போதும் சேதங்களின் அளவை குறைக்கும் பொருட்டு அதிகாரிகளும், பொதுமக்களும் தெளிவுற செயல்படுவதற்காக இந்தியாவின் முதல் வெள்ள முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை முறையை கொல்கத்தா நகரத்திற்காக அம்மாநகர மன்றத்தின் தலைவர் அறிமுகம் செய்துவைத்துள்ளார்.
ü  இந்தியாவின் முதல் விரிவான நகர அளவிலான இந்த முறைமை, வாழ்வாதாரங்களை பாதித்து ஏற்படும் பொருளாதார இழப்பை குறைக்கும் மற்றும் சமுதாய அளவில் வெள்ள விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும். இதன் வடிவமைப்புக்கான நிதியை ஆசிய வளர்ச்சி வங்கி அளித்துள்ளது. இதன் நிறுவலுக்காக கொல்கத்தா நகர நகர்ப்புற காலநிலை மாற்றம் நிவாரண அறக்கட்டளை நிதியிலிருந்து $1 மில்லியன் அளவுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கப்பட்டுள்ளது.


7.அண்மையில் உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட மது கட்டுப்பாடு முயற்சி எது?
[A] SAFER
[B] TRUST
[C] UNITE
[D] HAWK
ü  உலக சுகாதார அமைப்பு, அண்மையில் மதுவால் ஏற்படும் இறப்பு மற்றும் ஊனமுறுதலை தடுக்க மற்றும் குறைக்க ‘SAFER’ என்ற ஒரு புதிய மது கட்டுப்பாடு முயற்சியை தொடங்கியுள்ளது. தீங்கு விளைவிக்கும் மது மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார, சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை குறைக்க உதவும் 5 உயர்தாக்கங்களுடைய உத்திகளை இம்முயற்சி வழங்குகிறது. WHO தலைமையிலான முயற்சிகளும் நடவடிக்கைகளும் 2025-ம் ஆண்டளவில் அபாயகரமான மது பயன்பாட்டை 10% என்ற அளவுக்கு குறைப்பதற்கான இலக்கை ஆதரிக்கின்றன.
8. 2018 ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு, எந்தப் புற்றுநோய் மருத்துவ சிகிச்சையை கண்டுபிடித்ததற்காக ஜேம்ஸ் P அல்லிசன் மற்றும் தசுக்கு ஹோஞ்சோ ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது?


[A] வேதிச்சிகிச்சை
[B] கதிரியக்கம்
[C] அறுவைசிகிச்சை
[D] நோயெதிர்ப்பியச் சிகிச்சை (Immunotherapy)
ü  புற்றுநோய் சிகிச்சையில் ‘Immune Checkpoint Therapy’ (நோயெதிர்ப்பு ஆற்றல் தடை உடைப்பு சிகிச்சை) என்ற புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டமைக்காக அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் P அல்லிசன் மற்றும் ஜப்பானின் தசுக்கு ஹோஞ்சோ ஆகியோருக்கு 2018 ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ü  நோயெதிர்ப்பு முறைமையில் உள்ள T செல்களில், குறிப்பிட்ட சில புரதங்கள் எவ்வாறு தடை விசையாக செயல்படுகிறது எனவும், மேலும் அவை புற்றுநோய் செல்களை தாக்கும் திறனை எவ்வாறு குறைக்கிறது எனவும், மேலும் அந்தப் புரதங்களை ஒடுக்குவதன் மூலம் புற்றுநோயை எதிர்த்துப் போராட வல்லதாக உடலினை எவ்வாறு  மாற்றலாம் என இவ்விரு மருத்துவர்களும் 1990-களில் தனித்தனியாக ஆராய்ந்தனர்.
ü  புற்றுநோய் செல்களை உணர்ந்து அவற்றை தாக்கி அழிப்பதற்கு நோயெதிர்ப்பு மண்டலத்தின் செல்களுக்கு உதவுவதற்காக அவர்கள் நோயெதிர்ப்பியச் சிகிச்சையைப் பயன்படுத்தினர். அவர்களின் இக்கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்படும் வரை வேதிச்சிகிச்சை, கதிரியக்கம் மற்றும் அறுவைச்சிகிச்சை ஆகியவை புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளாக இருந்தன.
ü  அவர்களின் இப்பணி 4 ஆவது வகை சிகிச்சைக்கு வழிவகுத்தது. நோயெதிர்ப்பு முறைமையைக் கட்டுப்படுத்தும் இதனை, கரோலின்ஸ்கா நிறுவனத்தில் உள்ள நோபல் குழு “புற்றுநோய் சிகிச்சைக்கான முற்றிலும் ஒரு புதிய கொள்கை” என கூறியுள்ளது.
9.ஏர்டெல் தில்லி அரை தொடரோட்ட நிகழ்வுக்கான தூதராக சாய்னா ரிச்சர்ட்ஸ்-ரோஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?


[A] ஜெர்மனி
[B] அமெரிக்கா
[C] பிரான்ஸ்
[D] இத்தாலி
ü  அக்.21 அன்று நடைபெறவுள்ள ஏர்டெல் தில்லி அரை தொடரோட்ட நிகழ்வின் தூதராக 4 முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற தடகள வீராங்கனை சாய்னா ரிச்சர்ட்ஸ்-ரோஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டு IAAF உலகக்கோப்பையில் 400 மீ., வரலாற்றில் 48.70 வினாடிகளில் மிக விரைவாக கடந்த அமெரிக்க பெண் இவராவார்.
ü  400 மீ., ஓட்டப்பந்தய வீராங்கனைகளுள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறந்த வீராங்கனையாக இருந்துள்ளார். 2005-2009 வரை உலகின் முதல் நிலை வீராங்கனையாக இவர் இருந்தார். பிறகு 2012 ஆம் ஆண்டிலும் #1 இடத்தைப் பெற்றார். கூடுதலாக, அவர் தடகள வீரர்களுக்கான உலக சாம்பியன்ஷிப்பில் 7 முறை பதக்கம் பெற்றுள்ளார் (இதில் ஐந்து தங்கம்).


10. UNCTAD’ன் அண்மைய “வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அறிக்கை”யின்படி, 2018 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி முன்கணிப்பு என்ன?
[A] 6.7%
[B] 7.2%
[C] 7.0%
[D] 7.4%
ü  2017 ஆம் ஆண்டில் 6.2 சதவீதமாக இருந்த GDP’யை ஒப்பிடும்போது, 2018 ஆம் ஆண்டில் அது 7.0 சதவீதமாக அதிகரிக்கும் என்று வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா கூட்டமைப்பு (UNCT     AD) எதிர்பார்க்கிறது. இந்த அறிக்கையின்படி, பொருளாதாரத்தில் உள்ள தனியார் நுகர்வு போக்குகளில் பணமதிப்பிழப்பின் விளைவு இன்னும் அப்படியே உள்ளது. இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள், அந்நிய முதலீட்டாளர்களின் மிகுந்த ஆதரவில் இருப்பதாகவும், சொத்துக்களின் விலையில் மிகப்பெரிய உச்சத்தை அனுபவித்துவருவதாகவும், அது மூலதன வெளிப்போக்கிற்கு மிகவும் பாதிப்பானதாக இருக்கும் எனவும் இவ்வறிக்கை கூறியுள்ளது.
ü  மேலும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை (CAD) கையாள்வதற்கு இந்தியா போன்ற நாடுகளில் இறக்குமதிகளை குறைக்கும் போக்கு உள்ளது. இது இந்தியாவின் எழுச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மற்றும் இது உயரும் CAD மற்றும் மூலதன வெளிப்போக்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்.No comments:

Post a comment