தமிழ் நடப்பு நிகழ்வுகள்
Tamil Current Affairs 21st October 2018
|
[A] D V சதானந்த கெளடா
[B] நிதின் கட்காரி
[C] பியுஷ் கோயல்
[D] அருண் ஜெட்லி
ü
மத்திய
ரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சரான பியுஷ் கோயலுக்கு,
அமெரிக்காவின் பென்சில்வேனியா வடிவமைப்பு பல்கலைக்கழகம்,
எரிசக்தி கொள்கைக்கான கிளைன்மேன்
மையத்தின் 2018 கார்னட் பரிசு
(Carnot Prize) வழங்கியுள்ளது. நீடித்த ஆற்றல் தீர்வுகளுடன்
ஆற்றல் வறுமைகளை நீக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக கார்னட்
பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது ஆற்றல்துறையின் மதிப்புமிக்க விருதாகும்.
ü
இப்பரிசு,
நீராவி பொறியின் ஆற்றல் மனித வளர்ச்சியில் “ஒரு மாபெரும் புரட்சியை உருவாக்கும்”
என்று கூறிய பிரெஞ்சு இயற்பியலாளர் நிகோலஸ் சாடி கார்னட்டின் பெயரால் ஆண்டுதோறும் ஆற்றல்
கொள்கையில் முன்னணிப் புரட்சிகளை அடுத்த நிலை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்வோரை
கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
|
[A] பிரேசில்
[B] சீனா
[C] ஜப்பான்
[D] ரஷ்யா
ü
சர்ச்சைக்குரிய
பகுதிகளில் பதட்டங்களை குறைக்கும் ஒரு முயற்சியாக, சாஜியாங்கின் அருகே தென் சீனக்கடல்
பகுதியில் ASEAN மற்றும்
சீனாவிற்கும் இடையேயான முதலாவது கடல்சார் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன. ASEAN மற்றும் சீன கடற்படைகள் CUES (Code for Unplanned Encounters at Sea)
பயன்படுத்தி ஒன்றாக இணைந்து செயல்பட இந்தப் பயிற்சிகள் மிகவும் நல்ல வாய்ப்புகளை
வழங்கும்.
ü
புரூனை,
மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய 4 ASEAN உறுப்பினர்களும், தென் சீனக் கடல் பகுதியில் பீஜிங்குடன் முரண்பாட்டில் உள்ளன. சிறிய
நாடுகளின் கரையோரத்தில் கடல்பகுதி உட்பட, கிட்டத்தட்ட முழு நிலப்பகுதியிலும் சீனா
இறையாண்மையைக் கோருகிறது. கம்போடியா, இந்தோனேசியா,
லாவோஸ், மியான்மர், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகியவை ASEAN’ன் பிற உறுப்பினர்கள் ஆவர்.
|
[A] டிரக் பியூன்சம் சோகாபா
[B] மக்கள் ஜனநாயகக் கட்சி
[C] பூட்டான் குவென் – நியாம் கட்சி
[D] டிரக்
நியாம்ரப் சோகாபா
ü
47 இருக்கைகள்
கொண்ட நாடாளுமன்றத்தின் கீழவையான தேசிய அவையில் 30 இடங்களை வென்றதையடுத்து,
டிரக் நியாம்ரப் சோகாபா கட்சி (Druk
Nyamrup Tshogpa – DNT)
பூட்டானில் புதிய அரசை அமைக்கவுள்ளது.
மீதமுள்ள 17 இருக்கைகளை டிரக் பியூன்சம் சோகாபா கட்சி வென்றுள்ளது. பூட்டானின் பத்தாண்டுகால நாடாளுமன்ற குடியரசில்
முதன்முறையாக ஒரு புதிய கட்சி அரசமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ü
பூட்டான்
தேர்தல் ஆணையத்தின்படி, நடந்து முடிந்த மூன்றாவது பொதுத்தேர்தலில் 71.46 % வாக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
DNT தலைவர் Dr. லோட்டே செரிங், தென் திம்பு தொகுதியில் பெருவாரியான
வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
ü
இவர்
அதிகளவு வெளிநாட்டுக்கடன், (முக்கியமாக இந்தியவிடம் இருந்து) இளவயதினருக்கான வேலைவாய்ப்பு,
கிராமப்புற வறுமை மற்றும் குற்றவியல் குழுக்கள்
போன்றவைகளுக்கு எதிராக நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்று ஊடகங்களுக்குத்
தெரிவித்துள்ளார்.
4.புதன் கோளை ஆய்வுசெய்வதற்காக ‘Bepi Colombo’ என்ற ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக
ஏவியுள்ள விண்வெளி நிறுவனங்கள் எவை?
|
[B] ISRO மற்றும் NASA
[C] JAXA மற்றும் NASA
[D] ISRO மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
ü
ஐரோப்பிய
விண்வெளி ஆய்வு நிறுவனமும், ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனமும் (JAXA) இணைந்து தயாரித்த புதன் கோளை ஆய்வு
செய்யக்கூடிய பெபி கொலம்போ (Bepi Colombo) என்ற ஆளில்லா விண்கலம், பிரெஞ்சு கயானா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து
வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. புதன் கோளுக்கு அனுப்பப்படவுள்ள மூன்றாவது செயற்கைக் கோளான
இது ஏழு ஆண்டுகள் பயணித்து 2025 ஆம் ஆண்டு புதனின் சுற்று வட்டப்பாதையை
அடையவுள்ளது.
ü
இந்த
பெபி கொலம்போ விண்கலமானது Bepi மற்றும் Mio ஆகிய இரு ஆய்வு விண்கலங்களை புதனுக்குக் கொண்டு செல்கின்றது.
இந்த விண்கலத்தின் செயல்திட்டமானது புதன் கோளின் மின்காந்தப் புலம் மற்றும் அதன்
உட்கட்டமைப்பு, மேற்பரப்பு
ஆகியவை குறித்து முக்கியமாக ஆய்வு செய்யவுள்ளது. பெபி கொலம்போ பூமியைச் சுற்றி ஒரு
fly-by மற்றும் வெள்ளியைச்
சுற்றி இரு fly-by மற்றும் புதனைச்சுற்றி 6 fly-by ஆகியவற்றைக் கடந்தே புதன் கோளின் சுற்று வட்டப் பாதைக்குள் செல்லும்.
ü
புதன்
கோளின் வெப்பநிலை காரணமாக இந்த விண்கலமானது –180° தொடங்கி 450° C வரையிலான
வெப்பநிலையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1973 ஆம் ஆண்டில் புதன் கோளை
ஆய்வுசெய்வதற்கு முதன்முறையாக NASA’வின் Mariner 10 விண்கலம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|
[A] துருக்கி
[B] ரஷ்யா
[C] இஸ்ரேல்
[D] ஈரான்
ü
சிரியாவில்
நடந்த மோதல் குறித்து விவாதிக்க மற்றும் போருக்கான ஒரு நிலையான தீர்வை
கண்டறிவதற்காக, அக்டோபர் 27 அன்று
இஸ்தான்புல்லில், துருக்கி நான்கு நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த
உச்சிமாநாட்டில் துருக்கி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் தலைவர்கள்
பங்கேற்பார்கள்.
ü
சிரிய
அதிபர் பஷர் ஆசாத் அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளராக ரஷ்யா உள்ளது. அதேசமயம், ஆசாத்தை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்காக கிளர்ச்சியாளர்களுக்கு
துருக்கி உதவுகிறது.
ü
எனினும்,
2018 செப்டம்பரில்,
ரஷ்யாவும் துருக்கியும் சிரியாவின்
வடகிழக்கு மாகாணமான இட்லிப்பை சுற்றி ஒரு இராணுவம் நீக்கப்பட்ட மண்டலத்தை
அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டன. இட்லிப் மற்றும் அதனருகில்
உள்ள பகுதிகள் கிளர்ச்சியாளர்க –ளின் கோட்டையாக உள்ளன. எனவே, இட்லிப் உடன்படிக்கை மற்றும் மோதலுக்கான
ஒரு நீடித்த தீர்வு உட்பட, சிரிய போரின் அனைத்து அம்சங்களும் இந்த மாநாட்டில்
விவாதிக்கப்படும்.
|
[A] மேகாலயா
[B] அசாம்
[C] மேற்கு வங்கம்
[D] ஜார்க்கண்ட்
ü
‘காதி
பிஹு’ அல்லது ‘கங்காலி பிஹு’ என்றழைக்கப்படும் ‘பிஹூ’ விழாவின் மூன்றாவது பதிப்பு,
அசாமில் அமைதி நிலையையும், செல்வச்செழிப்பையும்
கொண்டுவருவதற்காக அண்மையில் கொண்டாடப்பட்டது. அக்டோபர் மாத இடையில் கொண்டாடப்படும்
இந்த விழாக்காலத்தின் போது, வயல்களில் நெல் வளர்ந்து வரும் நிலையில் உள்ளது. இந்த நாளில்,
மண் விளக்குகளை
களஞ்சியம், தோட்டம் மற்றும் நெல் வயல்களின்
அடிவாரத்தில் ஏற்றப்படும். மாலை வேளையில், சிறப்பாக தயாரிக்கப்பட்ட அரிசி பொருட்கள் கால்நடைகளுக்கு
வழங்கப்படுகிறது.
|
[A] ISRO
[B] JAXA
[C] NASA
ü
கோள்களின்
வளிமண்டலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இளஞ்சிவப்பு குறு விண்மீன்களின் நடுக்கத்தை
(Young Red Dwarf Stars Flares)
ஹப்பிள் தொலைநோக்கியை பயன்படுத்தி NASA அறிவியலாளர்கள்
கண்டறிந்துள்ளனர். HAZMAT–Habitable Zones (வசிக்கத்தக்க
மண்டலங்கள்) மற்றும் M குறுவிண்மீன்கள்
செயல்பாடுகள் கண்காணிப்பு என்ற பெருந்திட்டம் மூலமாக ஹப்பிள் தொலைநோக்கி இவ்வகை
நட்சத்திரங்களை கண்காணித்து வருகிறது.
ü
தாழ்நிலை
நட்சத்திரங்களை சுற்றியுள்ள கோள்களின் வாழத்தகுமை பற்றி புரிந்துகொள்ள உதவுவதே HAZMAT திட்டத்தின் நோக்கமாகும். ‘M
Dwarf’ என்பது சிவப்பு குறு விண்மீன்களின் வானியல் பெயராகும். இளமை,
இடைநிலை & முதுமை என 3 வெவ்வேறு காலகட்டங்களில்
சிவப்பு குறு விண்மீன்களின் புறவூதா பற்றிய ஆய்வுதான் இந்தத் திட்டம். சிவப்பு குறு
விண்மீன் என்பது நமது அண்டத்தில் உள்ள மிகச்சிறிய, அதிக எண்ணிக்கையிலான மற்றும்
நீண்டகாலம் வாழும் ஒரு நட்சத்திர வகையாகும்.
8.நடப்பாண்டின் சிறந்த வனவுயிரி புகைப்படக்கலைஞர்
விருது பெற்றுள்ளவர் யார்?
|
[B] மைக்கேல்
நிக்கோல்ஸ்
[C] மார்செல் வான்
ஓஸ்டென்
[D] பால் ஹெர்மான்சென்
ü
சீனாவின்
சின்லிங் மலைப்பகுதியில் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சப்பை
மூக்குக்குரங்கும், அதன் குட்டியையும் புகைப்படமெடுத்த டச்சு புகைப்படக் கலைஞர் மார்செல் வான்
ஓஸ்டன், நடப்பாண்டுக்கான
‘சிறந்த வனவுயிரி புகைப்படக்கலைஞர்’ விருது பெற்றுள்ளார். இந்த வகை குரங்குகளின்
பழக்க வழக்கங்களை புரிந்து கொள்வதற்காக பல நாட்கள் அவற்றை பின்
தொடர்ந்திருக்கிறார் மார்செல் வான். அந்த சப்பை மூக்கு குரங்கின் முடியையும்,
அதன் நீலநிற முகத்தையும் ஒரே படத்தில்
கொண்டுவர அவர் மெனக்கெட்டுள்ளார்.
ü
இது
மிகவும் மதிப்புமிக்க மற்றும் உலகின் மிகப்பெரிய வனவுயிரி புகைப்படப் போட்டிகளில்
ஒன்றாகும். 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இது, 1992 முதல் ஒவ்வோர் ஆண்டும் முதல் மற்றும் இரண்டாம் இடம் வென்ற உள்ளீடுகளுடன்
நூல் வடிவில் வெளியிடப்படுகின்றன.
|
[A] ராஜேஷ் பேடி
[B] சஞ்சாய் மோங்கா
[C] A K ராஜு
[D] அர்ஷ்தீப்
சிங்
ü
பத்து
வயதிற்கும் கீழுள்ள சிறுவர்களுக்கான பிரிவில் நடப்பாண்டின் சிறந்த இளம் வனவுயிரி
புகைப்படக்கலைஞர் விருது (ஆசியா) ஜலந்தரை சேர்ந்த சிறுவன் அர்ஷ்தீப் சிங்கிற்கு
வழங்கப்ப –ட்டுள்ளது. பஞ்சாப் கபூர்தலா பகுதியில் அவரெடுத்த ஆந்தை
புகைப்படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. லண்டன் இயற்கை வரலாற்று
அருங்காட்சியகத்தில் அக்.15 அன்று
நடந்த நிகழ்வொன்றில் இந்த விருது வழங்கப்பட்டது.
|
[A] மினல்
படேல் டேவிஸ்
[B] நீல் ஜெயின்
[C] விவேக் R சின்ஹா
[D] ஜக்தீப் ராஜ்புத்
ü
ஆட்கடத்தலை
எதிர்த்து போராடியதற்காக, இந்திய – அமெரிக்கர் மினல் படேல் டேவிசுக்கு அமெரிக்க
செயலாளர் மைக் பாம்பியோ அமெரிக்க ஜனாதிபதி விருதினை வழங்கியுள்ளார். மினலின் செயல்பாடுகளைப்
பாராட்டி, ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைக்கான ஹூஸ்டன் நகர மேயர் சில்வஸ்டர் டர்னரின் சிறப்பு ஆலோசகராக கடந்த 2015 ஆம் ஆண்டு மினல்
நியமிக்கப்பட்டார்.
No comments:
Post a comment