Tamil Current Affairs 4th October 2018


Tamil Current Affairs 4th October 2018
1.தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் தவறவிடப்பட்ட ஏழை மக்களுக்காக, மாநிலத்துக்கு என சொந்த உணவுப் பாதுகாப்பு திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?



[A] ஒடிசா
[B] அசாம்
[C] மகாராஷ்டிரா
[D] கோவா
ü  149 ஆவது காந்தி ஜெயந்தி விழாவின்போது, 2013 ஆம் ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில், தகுதியிருந்தும் தவறவிடப்பட்ட 25 லட்சம் ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மாநிலத்துக்கு என ஒரு உணவுப் பாதுகாப்பு திட்டத்தை ஒடிசா மாநில அரசாங்கம் தொடங்கியது. புவனேசுவரில் உள்ள மாநில தலைமைச்செயலகத்தில் இருந்து இந்தத் திட்டம் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கால் தொடங்கிவைக்கப்பட்டது.
ü  கிலோ ரூ.1 என்ற விலையில் பயனாளி ஒருவருக்கு மாதத்திற்கு 5 கிலோ அரிசி வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக மாநில அரசு ஓராண்டுக்கு ரூ. 443.5 கோடியை செலவு செய்யும். நடப்பு நிதியாண்டில் இந்தச் செலவு ரூ.221.75 கோடியாக உள்ளது.


2.கனடிய புற்றுநோய் சமூகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, சிகரெட் பேக்கட்டுகளில் எச்சரிக்கை வாசகங்களை அச்சடிக்கும் நாடுகளின் பட்டியலில், எந்தெந்த நாடுகளுடன் இணைந்து இந்தியா ஐந்தாவது இடத்தை பகிர்ந்துள்ளது?
[A] இந்தோனேசியா மற்றும் மலேசியா
[B] நேபாளம் மற்றும் வனுவாட்டு
[C] ஹாங்காங் மற்றும் தாய்லாந்து
[D] திமோர் லெஸ்டே மற்றும் பிரேசில்
ü  கனடிய புற்றுநோய் சமூகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, புகைபிடிப்பதால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகங்களை சிகரெட் பேக்கட்டுகளில் அச்சடிக்கும் நாடுகளின் பட்டியலில், சிகரெட் பேக்கட்டுகளின் இரு பக்கங்களிலும் 85 % அளவுக்கு எச்சரிக்கை வாசகங்களைக்கொண்ட ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் 5-வது இடத்தை இந்தியா பகிர்ந்துகொண்டுள்ளது.
ü  206 நாடுகளுள் சிகரெட் பேக்கட்டுகளின் இரு பக்கங்களிலும் 92.5 சதவீத அளவுக்கு எச்சரிக்கை வாசகங்களைக்கொண்ட திமோர் லெஸ்டே முதலிடத்திலும், 90 சதவீத அளவுக்கு எச்சரிக்கை வாசகங்களைக்கொண்ட நேபாளம், வனுவாட்டு ஆகிய நாடுகள் முறையே 2 & மூன்றாமிடத்திலும் உள்ளன. 87.5 % அளவுக்கு எச்சரிக்கை வாசகங்களுடன் நியூசிலாந்து 4 ஆம் இடத்தில் உள்ளது.
ü  உலகளவில் 118 நாடுகள் சிகரெட் பேக்கட்டுகளில் எச்சரிக்கை வாசகங்கள் அச்சடிப்பதை  கட்டாய –மாக்கியுள்ளதாக நிகழாண்டின் சிகரெட் பேக்கட் ஆரோக்கிய எச்சரிக்கை: உலகளாவிய நிலை அறிக்கை கூறுகிறது. இது கனடிய புற்றுநோய் சமூகம் வெளியிட்டுள்ள 6 ஆவது அறிக்கையாகும்.


3.சராசரி நகர உயரத்திலிருந்து இந்தியாவின் மிக உயரமான தேசியக்கொடி சமீபத்தில் எந்த நகரத்தில் நிறுவப்பட்டது?
[A] புது தில்லி
[B] கெளகாத்தி
[C] காந்தி நகர்
[D] கொல்கத்தா
ü  மகாத்மா காந்தியின் 149 ஆவது பிறந்தநாளன்று, அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனுவால் கெளகாத்தியில் உள்ள காந்தி மண்டபத்தில், சராசரியான நகர உயரத்திலிருந்து இந்தியாவின் மிக உயரமான தேசியக்கொடியை ஏற்றினார். அசாமின் பிரதான நகரத்தின் மையத்தில், சரனியா குன்றில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவுச்சின்னமான காந்தி மண்டபத்தில், 319.5 அடி உயர கொடிக்கம்பத்தில், 9600 சதுர அடியிலான இந்தக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
ü  மலையின் அடிவாரத்திலிருந்து கம்பத்தின் முனைவரை சுமார் 300 மீ., ஆகும். அது சராசரி கடல் மட்டத்திலிருந்து இந்தக் கொடியை மிக உயரமானதாக ஆக்கியுள்ளது. இக்கொடி, 120*80 அடி என்கிற அளவை கொண்டுள்ளது.
ü  கொடிக்கம்பத்தின் உயரத்தை மட்டும் கருத்தில்கொண்டால், பஞ்சாபின் அட்டாரி எல்லை (360 அடி) மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பக்தி சக்தி சௌக், புனே (351 அடி) ஆகிய இடங்களில் உள்ள கொடிகளுக்குப்பின், காந்தி மண்டபத்தில் உள்ள தேசியக்கொடி மூன்றாவது மிக உயரமானதாக உள்ளது. இத்தேசியக்கொடியை நிறுவுவதற்கான மொத்த செலவுத்தொகை ரூ.2.92 கோடியாகும்.



4.சமீபத்தில் காலமான தம்பி கண்ணன்தானம், எந்த மொழித் திரைத்துறையை சார்ந்தவர்?


[A] தமிழ்
[B] மலையாளம்
[C] தெலுங்கு
[D] ஒடியா
ü  மலையாள திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநரான தம்பி கண்ணன்தானம் (64), அக்.2 அன்று கேரள மாநிலம் கொச்சியில் காலமானார்.


5.எந்நாட்டில், “IBSAMAR 2018” என்ற சர்வதேச கூட்டு கடற்படைப் பயிற்சி தொடங்கியுள்ளது?
[A] இந்தியா
[B] பிரேசில்
[C] தென்னாப்பிரிக்கா
[D] தென் கொரியா
ü  இந்திய, பிரேசிலிய மற்றும் தென்னாப்பிரிக்க கடற்படைகள் இடையேயான “IBSAMAR 2018” என்ற பன்னாட்டு கூட்டு கடற்படைப் பயிற்சியின் 6 ஆவது பதிப்பு அக்.1 அன்று தென்னாப்பிரிக்   –காவின் சைமன் நகரத்தில் தொடங்கியது. கடற்படைகளிடையே ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கான கூட்டுப் பயிற்சியை மேற்கொள்வதே 13 நாள் நடைபெறும் இந்தப்பயிற்சியின் நோக்கமாகும்.
ü  இந்தியக் கடற்படையின் சார்பாக தர்காஷ் பீரங்கி ஏவுகனை, கொல்கத்தா அழிகலன், P8I ரோந்துப் போர் விமானம், கடலரசன் மற்றும் சேதக் உலங்குவானூர்திகள் மற்றும் MARCOS படைப்பிரிவு ஆகியவை இதில் பங்கேற்றுள்ளன.
6.நிகழாண்டின் சர்வதேச முதியோர் தினத்துக்கான கருப்பொருள் என்ன?


[A] Tapping the Talents of Older Persons in Society
[B] Take a Stand Against Ageism
[C] Celebrating Older Human Rights champions
ü  அனைத்து மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் முதியோர்களுக்கு முழுமையாகவும், சமமாகவும் கிடைப்பதை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் அக்.1 அன்று சர்வதேச முதியோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “Celebrating Older Human Rights Champions”.
ü  முதியோர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் சிக்கல்களை ஆராய்வதே இந்நாளின் நோக்கமாகும். ஐ.நா.வின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 700 மில்லியன் மக்கள் தற்போது 60 வயதிற்கு மேலானவர்களாக உள்ளனர், 2050 ஆம் ஆண்டு அளவில், 2 பில்லியன் மக்கள், அதாவது உலக மக்கட்தொகையில் 20%-க்கும் மேலானவர்கள் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருப்பார்கள்.


7.சரக்கு மற்றும் சேவைகள் வரியின் (GST) கீழ், ‘பேரிடர் வரி’ விதிமுறைகளை ஆய்வுசெய்யும் அமைச்சரவைக் குழுவின் தலைவர் யார்?
[A] ரவி சங்கர் பிரசாத்
[B] நரேந்திர சிங் தோமர்
[C] சுரேஷ் பிரபு
[D] சுஷில் மோடி
ü  இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களை திரட்ட வரியை திருத்துவதற்கான சட்டசிக்கல்களை ஆய்வுசெய்ய பீகார் துணை முதலமைச்சர் சுஷில்மோடியின் தலைமையில் ஏழுபேர்கொண்ட அமைச்சர்கள் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
ü  இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட கேரளா போன்ற மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களை திரட்டுவதற்காக வரி வருவாயை உயர்த்துவதற்கான நடைமுறை சாத்தியக்கூறுகள் பற்றி இந்தக் குழு ஆய்வு செய்யும். இக்குழு, 5 அம்சங்களை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும். அதாவது, புதிய வரியை மாநில அளவில் விதித்தால் போதுமா? அல்லது அகில இந்திய வரியாக விதிக்கலாமா? என்று ஆலோசனை நடத்தும். ஆடம்பர மற்றும் புகையிலை பொருட்கள் மீது மட்டும் புதிய வரி விதிக்கலாமா? என்று விவாதிக்கும்.
ü  அதேபோல், எந்தெந்த பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்பதையும் பரிந்துரைக் –கும். அதுமட்டுமன்றி, தேசிய பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில நிதிகளைத் தாண்டி கூடுதல் வரி விதிக்க வேண்டிய அவசியம் உள்ளதா? என்பது குறித்தும் அந்தக் குழு ஆய்வு செய்யவுள்ளது. இக்குழு, தனது ஆய்வறிக்கையை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சரக்கு மற்றும் சேவைகள் வரி கழகத்தில் சமர்ப்பிக்கும்.
8.மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாடு, சமீபத்தில் எந்த நகரத்தில் முடிவுற்றது?


[A] காந்தி நகர்
[B] புது தில்லி
[C] கான்பூர்
[D] அகமதாபாத்
ü  மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாடு, சமீபத்தில் புது தில்லியில் அக்.2 அன்று முடிவுற்றது. பங்கேற்கும் நாடுகளிடம், வெற்றிகரமான தூய்மை கதைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதே 4 நாள் நடந்த இம்மாநாட்டின் நோக்கமாக இருந்தது. பிரதமர் மோடி மற்றும் ஐ.நா. அவையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் இதில் உரையாற்றினர்.
ü  மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில், மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 4 ஆம் ஆண்டு விழாவும், இம்மாநாட்டுடன் நடந்தது. உலகெங்கிலும் இருந்து 53 துப்புரவு அமைச்சர்களும், 68 நாடுகளைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர். இம்மாநாடு, சுகாதார அமைச்சர்களையும் WASH எனப்படும் தண்ணீர், சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான தலைவர்களையும் திரட்டியது.
9.நிகழாண்டில் இயற்பியல் துறைக்கான நோபல்பரிசு பெற்ற பெண் இயற்பியலாளர் யார்?


[A] லிசா ரேன்டால்
[B] அல்லிசன் ஸ்கார்லெட்
[C] டோனா ஸ்டிரிக்லான்ட்
[D] கேப்ரியலா கோன்சலஸ்
ü  லேசர் இயற்பியல் பிரிவில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்ட அமெரிக்க இயற்பியலாளர் ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஜெரார்டு மோரோ, கனட நாட்டின் பெண் விஞ்ஞானி டோனா ஸ்டிரிக்லான்ட் ஆகியோருக்குக் கூட்டாக 2018 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ü  கண்ணாடி இழையில் (Optical Tweezers) புதிய கண்டுபிடிப்புகளைச் செய்ததற்காக அமெரிக்க இயற்பியலாளர் ஆர்தர் ஆஷ்கினுக்கு நோபல் பரிசின் பாதித்தொகை வழங்கப்பட்டது. கனடா நாட்டு பெண் விஞ்ஞானி டோனா ஸ்டிரிக்லான்ட், பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஜெரார்டு மோரா ஆகியோருக்கு லேசர் கற்றை மிக, மிக, நுண்ணிய அளவில் உருவாக்கியதற்காக பாதியளவு பரிசு வழங்கப்பட்டது.
ü  மேரி கியூரி, மரியா ஜோபர்ட்டுக்கு பின் எந்தப்பெண் விஞ்ஞானிக்கும் இயற்பியலில் நோபல் பரிசு வழங்கப்படவில்லை. ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்குப் பின் இயற்பியல் பிரிவில் நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் விஞ்ஞானி ஸ்டிரிக்லாண்ட் ஆவார்.


10.3 ஆவது பாராலிம்பிக் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய அணியின் கொடியை ஏந்தி வரவுள்ளவர் யார்?
[A] தேவேந்திர ஜஜாரியா
[B] தங்கவேலு மாரியப்பன்
[C] அமித்குமார் சரோஹா
[D] கிரிஷா நாகராஜகெளடா
ü  அக்.6 முதல் 13 ஆம் தேதி வரை ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி தமிழ்நாட்டு வீரர் தங்கவேலு மாரியப்பன் கொடியேந்தி தலைமை தாங்கிச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கவேலு மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
ü  பாராலிம்பிக்கில் இந்திய அணி சார்பில் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என 302 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க அக்.1 அன்று இந்திய வீரர்கள் இந்தோனேசியா சென்றனர். அங்கே போட்டிகளை நடத்தும் நிர்வாகிகள் தங்கும் அறைகள் இருக்கும் விளையாட்டு கிராமத்தின் உள்ளே இந்திய வீரர்களை அனுமதிக்கவில்லை. இதனால், சிறிது குழப்பம் ஏற்பட்டது.
ü  குழப்பத்திற்கு காரணம், வழக்கம் போல விளையாட்டு அமைச்சகத்தின் அலட்சியம் தான் என பிறகு தெரிய வந்தது. இந்திய விளையாட்டு அமைச்சகம் சுமார் $2.5 லட்சம் டாலர் பாக்கி பணத்தை, போட்டிகளை நடத்தும் நிர்வாகத்திடம் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது. பணம் செலுத்திய பின்னர், இந்திய வீரர்கள் மற்றும் குழுவினர் தங்கும் அறைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.



No comments:

Post a Comment