Tamil Current Affairs 5th October 2018


Tamil Current Affairs 5th October 2018
1.அண்மையில் ‘ஸ்வச்சதா ஹி சேவா’ விருது வென்ற மத்திய அமைச்சகம் எது?


[A] சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
[B] தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
[C] பாதுகாப்பு அமைச்சகம்
[D] ரயில்வே அமைச்சகம்
ü  அரசாங்க அலுவலகங்களில் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஸ்வச்சதா ஹி சேவா’ திட்டத்தின் விருதுகள் பிரிவின்கீழ், ‘ஸ்வச்சதா பக்வாடா’வுக்கு அளிக்கப்பட்ட சிறந்த பங்களிப்புக்காக ரயில்வே அமைச்சகம் சிறந்த துறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தின் 4 ஆவது ஆண்டு விழாவில், ரயில்வே அமைச்சகத்திற்கு இவ்விருது வழங்கப்பட்டது.
ü  அனைத்துத்துறை மக்களையும் ஒன்றுதிரட்டி தூய்மைக்காகவும், கழிவறைகளைக்கட்டி திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லா சூழ்நிலையை உருவாக்கும் வகையில் அவர்களை உடலுழைப்பு அளிக்க வைப்பதே 2017’ல் தொடங்கப்பட்ட ‘ஸ்வச்சதா ஹி சேவா’ இயக்கத்தின் நோக்கமாகும்.


2.மேற்கு வங்க மாநிலத்தின் எந்தெந்த மாவட்டங்களில் தூய குடிநீர் வழங்குவதற்காக, ADB உடனான $240 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
[A] வடக்கு 24 பர்கானாஸ்
[B] பாங்குரா
[C] பர்பா மேதினிபூர்
[D] மேலே உள்ள அனைத்தும்
ü  ஆர்செனிக், ஃபுளோரைடு மற்றும் உப்புத்தன்மையால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தின் 3 மாவட்டங்களுக்கு (வடக்கு 24 பர்கானாஸ், பாங்குரா மற்றும் பர்பா மேதினிபூர்) தூய குடிநீர் வழங்குவதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியுடனான $240 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் வசிக்கும் 3,90,000 குடும்பங்களுக்கு குழாய் வழியே தொடர்ச்சியான குடிநீர் வழங்குவதன் மூலம், இந்த ஆபத்தில் இருந்து அவர்களை மீட்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ü  ஜப்பானிய அரசால் நிதியளிக்கப்பட்ட வறுமைக் குறைப்புக்கான ஜப்பான் நிதியிலிருந்து $3 மில்லியனும், ஆசிய வளர்ச்சி வங்கியின் நகர்ப்புற காலநிலை மாற்ற நிவாரண அறக்கட்டளை நிதியின் (UCCRTF) $2 மில்லியன் மானியமும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றன.


3.நிகழாண்டுக்கான தூய்மையான பல்கலைக்கழக தரவரிசையில், தூய்மையான அரசாங்க பல்கலைக்கழகம் என அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழகம் எது?
[A] மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம், ரோதக்
[B] குருநானக் தேவ் பல்கலைக்கழகம், அமிர்தசரஸ்
[C] கல்லீரல் மற்றும் பித்த அறிவியல் நிறுவனம், புது தில்லி
[D] ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக்கழகம், குண்டூர்
ü  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சமீபத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ், 2018 ஆம் ஆண்டுக்கான “தூய்மையான பல்கலைக்கழக தரவரிசை”யை அறிவித்தார். இதில், ஹரியானாவைச் சேர்ந்த மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம், ‘தூய்மையான அரசு பல்கலை’ என மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.
ü  அமிர்தசரசில் அமைந்துள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தை பெற்றது. ‘தூய்மை சேவை’ பரப்புரையின் கீழ் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் அடிப்படையில் இத்தரவரிசை தயார் செய்யப்பட்டுள்ளது. புது தில்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்த அறிவியல் நிறுவனம், அரசாங்க நிறுவனங்கள் பிரிவில் மூன்றாமிடத்தையும், அதைத்தொடர்ந்த இடங்களில் தமிழ்நாட்டின் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலையும், ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலையும் உள்ளது.


4. SIDBI ஆல் தொடங்கப்பட்ட தேசிய அளவிலான தொழில்முனைவோர் பரப்புரை எது?
[A] Youth For Work
[B] SAFAR
[C] Udyam Abhilasha
[D] e-Udyam
ü  மகாத்மா காந்தியின் 149 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிறு தொழில் வளர்ச்சிக்கான தேசிய வங்கி (SIDBI), நாட்டின் 28 மாநிலங்களில் உள்ள 115 முன்னேற விரும்பும் மாவட்டங்களில் 15,000 இளைஞர்களை சென்றடையும் வகையில் ‘உதயம் அபிலாஷா’ என்ற தேசிய அளவிலான விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கியது. இந்த மாவட்டங்களில் மாற்றத்தை உருவாக்கும் இயக்கத்திற்கு SIDBI தொடர்ந்து பங்களிக்கும். அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நாடு முழுவதும் இந்தப் பரப்புரை நடைபெறும்.
ü  தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் உள்ள 800-க்கும் மேற்பட்ட இளையோர்களுக்கு பயிற்சி அளித்து தொழில்முனைவோராக மாற்ற இது ஊக்குவிக்கும். வங்கிகள், நபார்டு வங்கி, வங்கி அல்லா நிதி நிறுவனம், சிறு நிதி வங்கிகள், மாவட்டத் தொழில் மையங்கள், மாநில அரசுகள் இந்தப் பரப்புரையில் பங்கேற்பதற்கான முயற்சிகளை SIDBI எடுத்துள்ளது.
ü  இந்தப் பரப்புரையை அமல்படுத்துவதற்காக பொது சேவை மையங்கள், மின்னணு நிர்வாக சேவைகள் இந்தியா நிறுவனம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழினுட்ப அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஒரு சிறப்புப் பயன்பாட்டு வாகனம் ஆகியவை SIDBI உடன் இணைந்துள்ளது. SIDBI என்பது MSME துறையின் ஊக்குவிப்பு, நிதி மற்றும் மேம்பாட்டுக்கான நிதி நிறுவனமாகும்.


5.நிகழாண்டின் வேதியியலுக்கான நோபல்பரிசு பெற்ற பெண்மணி யார்?
[A] கிறிஸ்டியன் வால்ஹார்ட்
[B] அடா யோனத்
[C] பிரான்சிஸ் H அர்னால்ட்
[D] கரோல் W. கிரேடர்
ü  ராயல் சுவீட அறிவியல் நிறுவனம், வேதியியல் துறையில் புதியகண்டுபிடிப்புகளை மேற்கொண்ட பிரான்சிஸ் H அர்னால்ட் மற்றும் ஜார்ஜ் பி ஸ்மித் மற்றும் சர். கிரிகரி பி. வின்ட்டர் ஆகியோருக்கு 2018 ஆம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசை அறிவித்துள்ளது. இதில் பிரான்சிஸ் H அர்னால்ட் என்பவருக்கு “நொதியங்களின் (Enzymes) நெறிவழிப்படுத்தப்பட்ட பரிணாமம்” என்ற ஆய்வுக்காக நோபல்பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
ü  அறிவியல் விஞ்ஞானி ஜார்ஜ் பி ஸ்மித் மற்றும் மூலக்கூறியல் உயிரியல் ஆய்வாளர் சர். கிரிகரி பி வின்ட்டர் ஆகியோருக்கு கூட்டாக “நோய் எதிர்ப்பொருள் மற்றும் புரதங்களின் உண்ணிகள் அல்லது விழுங்கிகள்” பற்றிய முக்கிய ஆய்வுக்காக நோபல்பரிசு வென்றுள்ளனர். Dr. அர்னால்டு மற்றும் Dr. ஸ்மித் ஆகிய இருவரும் அமெரிக்க விஞ்ஞானிகளாவர்.
ü  வேதியியல் துறையில் நோபல்பரிசு பெற்றிருப்பவர்களில் பிரான்சிஸ் H அர்னால்ட் பெண் விஞ்ஞானி என்ற நிலையில், வேதியியல் துறையில் இவ்விருதைப் பெற்றுள்ள ஐந்தாவது பெண் என்ற சிறப்பை அடைந்துள்ளார். உயிரியலில் ரசாயன எதிர்வினைகளை அதிகரிக்க செய்கின்ற புதிய நொதிகளை உருவாக்க “இயக்கப்படும் பரிணாமம்” என்கிற தொழில்நுட்பத்தை இந்த நோபல் பரிசை வென்றவர்கள் பயன்படுத்தினர். இத்தகைய நொதிகள் புதிய மருந்துகள் மற்றும் பசுமை எரிபொருட்களை உற்பத்திசெய்ய பயன்படுத்தப்படுகின்றன.


6.நிகழாண்டின் உலக வசிப்பிட தினத்துக்கான கருப்பொருள் என்ன?
[A] Cities and Climate Change
[B] Housing at the Centre
[C] Municipal Solid Waste Management
[D] Cities, magnets of hope
ü  அனைவருக்கும் போதுமான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் திங்கள்கிழமையன்று உலக வசிப்பிட நாள் கடைபிடிக்கப்படுகிறது. நமது நகரங்களில் அடிப்படை மனித உரிமைகளுடன் போதுமான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இந்நாளின் நோக்கமாகும். வசிப்பிடத்தின் அவசியம் குறித்து எதிர்கால சந்ததியினருக்கு ஞாபக –ப்படுத்தும் கூட்டுப்பொறுப்பையும் இது கொண்டுள்ளது.
ü  அனைவரையும் பாதிக்கும் உலகளாவிய பிரச்சனையாக விளங்கும் நகராட்சி திடக்கழிவு மேலாண்மையை முன்னிலைப்படுத்துவதற்காக, “Municipal Solid Waste Management – நகராட்சி திடக்கழிவு மேலாண்மை” என்ற கருப்பொருள் மற்றும் ‘Waste – wise Cities – கழிவு வாரியான நகரங்கள்’ என்ற முழக்கத்துடன் அக்.1 அன்று இந்த நாள் கொண்டாடப்பட்டது.


7.ஈராக்கின் புதிய அதிபர் யார்?
[A] பர்ஹாம் சாலி (Barham Salih)
[B] ஃபுவத் மசும்
[C] ஜலால் தலபானி
[D] மாஷால் அஜில் அல் – யாவர்
ü  மூத்த குர்திஸ்தான் அரசியல்வாதியான பர்ஹாம் அகமத் சாலி, அக்.2 அன்று ஈராக்கின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 219 வாக்குகளைப் பெற்று, 22 வாக்குகளைப் பெற்ற ஃபுவத் ஹுசைனை தோற்கடித்தார். சாலி, குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தின் முன்னாள் பிரதமரும், ஈராக்கிய கூட்டாட்சி அரசாங்கத்தின் முன்னாள் துணைப்பிரதமரும் ஆவார்.
ü  புதிய அதிபரான சாலி, ஈராக்கின் பிரதமர் பதவிக்கு ஷியா இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த அதேல் அப்துல் மாஹ்தியை தேர்வுசெய்துள்ளார். இஸ்லாமிய அரசின் ஜிஹாதிச குழுவுக்கு எதிரான 4 ஆண்டு யுத்தத்தைத் தொடர்ந்து ஈராக்கின் மறுசீரமைப்பை மாஹ்தி மேற்பார்வையிடுவார்.
ü  ஈராக்கில் உடன்பட்ட ஓர் உண்மையான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தின் கீழ், சதாம் உசைனை ஒழிப்பதற்காக 2003 ஆம் ஆண்டு அமெரிக்கத் தலைமையில் நடந்த போருக்குப் பின்னர், ஈராக்கின் தலைமைப் பொறுப்பு ஒரு குர்தியால் நடத்தப்படுகிறது, அதேநேரத்தில் பிரதமராக சியா பிரிவினரும், நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சுன்னிப்பிரிவை சேர்ந்தவரும் உள்ளனர்.
8.சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பின் முதலாவது மாநாடு நடந்த நகரம் எது?


[A] புனே
[B] புது தில்லி
[C] சென்னை
[D] கொல்கத்தா
ü  பிரதமர் மோடி, சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் (ISA) முதலாவது மாநாட்டை அக்டோபர் 2 அன்று விஞ்ஞான் பவனில் தொடங்கிவைத்தார். சூரியனை வழங்கும் பேராற்றலை கையாள்வத –ற்காக அவர் “ஓர் உலகம், ஒரு சூரியன், ஒரு கட்டமைப்பு” என்பதை வழங்கினார்.
ü  இது தவிர, பிரதமர் மோடி, இந்தியாவை தலைமையிடமாகக்கொண்ட முதல் ஒப்பந்த அடிப்படையிலான சர்வதேச அரசாங்க அமைப்புக்கான “உலகமயமாக்கலை – Universalization” அறிவித்தார், இது காலநிலை நீதிக்கான ஒரு தளத்தை வழங்க உதவும்.
ü  இந்தியப்பெருங்கடல் எல்லைப்பகுதி நாடுகள் கூட்டமைப்பின் (IORA) புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அமைச்சர்கள் கூட்டம் மற்றும் 2’வது சர்வதேச ரீ-இன்வெஸ்ட் (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி) ஆகியவையும் இதன்போது தொடங்கப்பட்டது.
ü  15 நாடுகளைச் சேர்ந்த 55 சர்வதேச பேச்சாளர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்தியா மற்றும் பிரான்ஸ் தலைமையிலான ISA என்பது அதன் கூட்டமைப்பில் உள்ள உறுப்புநாடுகளில் சூரிய ஆற்றளை ஊக்குவிப்பதற்கான ஓர் அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்த அடிப்படையிலான அமைப்பாகும்.



9.நிகழாண்டின் அகில இந்திய ரயில்வே சதுரங்க போட்டி, எந்த நகரத்தில் தொடங்கியது?


[A] சேலம்
[B] மதுரை
[C] திருச்சிராப்பள்ளி
[D] கோயம்புத்தூர்
ü  அக்டோபர் 3 அன்று 2018 ஆம் ஆண்டின் 31 ஆவது அகில இந்திய ரயில்வே சதுரங்க போட்டி திருச்சிராப்பள்ளியில் தொடங்கியது. இந்தப் போட்டியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஸ்ரெஸ்தா தொடங்கிவைத்தார். சுவிஸ் லீக் முறையில் குழு மற்றும் தனிப்பிரிவுகளில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்திய ரயில்வேயில் உள்ள 14 மண்டலங்களை சேர்ந்த 87 வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
ü  இப்போட்டியில் வெற்றிபெறுபவர்கள், 2018 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெறவிருக்கும் தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப்பில் இந்திய ரயில்வேயின் சார்பாக பங்கேற்பார்கள்.


10.உலகின் மிகப்பெரிய குவிமாடம் சமீபத்தில் எந்த நாட்டில் திறந்துவைக்கப்பட்டது?
[A] இஸ்ரேல்
[B] ஈரான்
[C] இந்தியா
[D] வங்கதேசம்
ü  மகாத்மா காந்தியின் 149 ஆவது பிறந்தநாள் விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு, புனேவின் லோனி கல்போரில் உள்ள மகாராஷ்டிரா தொழில்நுட்ப நிறுவன வளாகத்தின் உலக அமைதி பல்கலையில் (MIT-WPU) உலகின் மிகப்பெரிய குவிமாடத்தை திறந்துவைத்தார். இக்குவிமாடம் 160 அடி விட்டமும், 263 அடி உயரமும் உடையது. பரப்பளவில் இது வாட்டிக்கான் நகரத்தில் உள்ள  புனித பீட்டர் பேராலயத்தின் குவிமாடத்தை (Dome) விடவும் (விட்டம் 136 அடி மற்றும் உயரம் 448 அடி) பெரியதாகும்.
ü  சுமார் 3,500 மக்கள் பிரார்த்தனை செய்யும் விதமாக மண்டபம் மற்றும் இந்தியா மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட துறவிகள், தத்துவஞானிகள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோரின் சிலைகளை இது கொண்டுள்ளது.
ü  புகழ்பெற்ற கலைஞரான ராம் V சுடாரால் உருவாக்கப்பட்ட சிலைகள் ஒவ்வொன்றும் 4 மீட்டர் உயரம் கொண்டவை மற்றும் இரண்டு டன் வரை எடையுள்ளதாக உள்ளது. இது துறவி தன்யனேஸ்வரா உலக அமைதி நூலகம் என்றழைக்கப்படும் இந்தியாவின் முதல் நூலகத்தை தன்னகத்தே கொண்டிருக்கும்.


            தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்
ü  திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தை, உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தரமுயர்த்தும் ஐந்தாண்டுத் திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தொடங்கிவைத்தார். இதே வளாகத்தில், 120 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் சீமென்ஸ் உற்பத்தி மையத்தையும் தொடங்கிவைத்தார்.
ü  சென்னை – திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு மண்டலங்களை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே மண்டலங்களில் 1054 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் மாற்று ஏற்பாடுகள் மூலம் அகற்றப்பட்டு ஆளில்லா லெவல் கிராசிங்குகள் அற்ற மண்டலமாக மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ü  இந்திய மற்றும் வியட்நாம் கடற்படை வீரர்கள் சென்னை கடல் பகுதியில் ‘Sahyog HOP TAC -2018’ என்ற போர் பயிற்சி மற்றும் கடல் திருடர்களிடம் இருந்து எவ்வாறு கடற்படை வீரர்களை மீட்பது போன்ற பல்வேறு ஒத்திகைகளில் ஈடுபட்டனர். வியட்நாமில் இருந்து ‘CSB8001’ என்ற கடற்படை கப்பல் இதற்கென சென்னை வந்தது.
ü  ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆளில்லா குட்டி விமானப்பயிற்சி போட்டியில், நடிகர் அஜித் குமாரின் ‘தக்ஷா’ குழுவுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
ü  நாட்டிலேயே முதன்முறையாக பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையில் மெய்நிகர்க் காட்சியாக்கம் (Virtual Reality – VR), மெய்நிகர்க் காட்சி மிகுதியாக்கம் ஆகிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன. இதற்காக, சென்னை ஸ்கோப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ü  நாட்டிலேயே முதன்முதலாக 1 கோடியே 80 லட்சம் நூல்கள் அடங்கிய மின்னணு நூலகத்தை பயன்படுத்தும் வகையில், இ – கிளப் விருதுநகரில் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் ஐஐடி கரக்பூர் இணைந்து இதனை செயல்படுத்தியுள்ளன.



No comments:

Post a Comment