தமிழ் நடப்பு நிகழ்வுகள்
Tamil Current Affairs 6th October 2018
1. ‘Sahyog
HOP TAC-2018’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும்
இடையே நடைபெறும் பயிற்சியாகும்?
|
[B] தென்னாப்பிரிக்கா
[C] தாய்லாந்து
[D] வியட்நாம்
ü
அக்.4
அன்று, ‘Sahyog HOP TAC-2018’ என்ற இந்திய-வியட்நாம் கடலோர காவல்படை
கூட்டு பயிற்சியானது, வங்கக்கடலில் இருநாட்டு கடலோரக் காவல்படை இடையே நடைபெற்றது. இதில் வியட்நாம்
நாட்டின் கடலோரக் காவல்படை ரோந்துக் கப்பலான CSB
8001 உடன் இந்திய கடலோரக் காவல் படையின் செளர்யா,
அர்னேவேஷ், C-431 ஆகிய 3 ரோந்துக் கப்பல்கள்,
ஒரு சேதக் உலங்கூர்தி,
ஒரு டோர்னியர் ரோந்து விமானம்,
கடல்சார் தொழில்நுட்ப நிலையத்தின் சாகர்
மன்ஜுஷா என்ற கப்பல் உள்ளிட்டவை பங்கேற்றன.
ü
இப்பயிற்சியின்போது
கடலில் ஆபத்தில் சிக்கியவர்களை உலங்குவானூர்தி மூலம் மீட்பது,
வணிகக்கப்பல் ஒன்றைக் கடத்த முயன்ற
கடத்தல்காரர்களை அதிவேகப் படகுகளில் சென்று கைதுசெய்வது,
தீப்பிடித்த கப்பல் மீது தண்ணீரைப்
பீச்சியடித்து அணைப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்விளக்கங்களில் இருநாட்டு வீரர்களும்
ஈடுபட்டனர். இந்தப் பயிற்சியை வியட்நாம் கடலோரக் காவல்படை படைத்தளபதி நுகுயென்
வான்சன், கிழக்கு
பிராந்திய IG பரமேஷ் சிவமணி
உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டனர்.
|
[A] டெனிஸ்
முக்வேஜே (Denis Mukwege)
[B] ஈவ்லின் வார்னடோ
[C] தாரா ஜே. கோல்
[D] பிளான்கா டங்கன்
ü
போர்
நடைபெறும் பகுதிகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை
எதிர்த்துப் போராடியமைக்காக, சமூக
ஆர்வலர்களான காங்கோ நாட்டு மருத்துவர் டெனிஸ் முக்வேஜேவுக்கும், இசுலாமிய தேச (IS) பயங்கரவாதிகளால் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டி –ருந்த யாஜிதி இனப்பெண்
நாடியா முராடுக்கும் 2018 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
ü
IS பயங்கரவாதிகளுக்கு
எதிரான தனது போராட்டம் குறித்து நாடியா எழுதிய ‘Last Girl: My story of
Captivity and My Fight against Islamic state’ என்ற நூல் 2017 ஆம்
ஆண்டு வெளியானது. இந்தப் பரிசு வரும் டிசம்பர் 10 அன்று ஒஸ்லோவில் வழங்கப்படும். இதனை சுவீட நாட்டு தொழிலதிபர்
ஆல்ஃபிரட் நோபல், 1895
ஆம் ஆண்டில் நிறுவினார்.
3. ‘Academy
of Leadership – தலைமைத்துவத்துக்கான அகாடமி’யை
நிறுவவுள்ள ஐஐடி எது?
|
[B] ஐஐடி இந்தூர்
[C] ஐஐடி சென்னை
[D] ஐஐடி
கரக்பூர்
ü
அறிவியல்
மற்றும் பொறியியல் துறைகளின் முக்கிய பாடத்திட்டங்களை மெய்யியல் மற்றும்
பள்ளிக்கல்விக்கான பாடத்துறைகளுடன் இணைத்து புதுமையான பாடத்திட்டங்களை உருவாக்க
விரும்பும் ‘தலைமைத்துவக்கான அகாடமி’ ஒன்றை நிறுவ கரக்பூர் ஐஐடி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த
அகாடமி, அறிவியல் மற்றும் தொழினுட்ப பயிற்சியின் அடிப்படையில் மட்டுமல்லாமல், பண்டைய மெய்யியல்,
பகுத்தறிதல்,
அமைப்பு பொறியியல் மற்றும் மனித இனத்தின் கடந்தகால
வெற்றிகள் மற்றும் தோல்விகளை பற்றியும் போதிக்கும்.
ü
இது மேலாண்மை ஆலோசகர் / வியூகவாதி
மற்றும் மனிதநேயவாதியான பார்த்தா S கோஷ் என்பவரின் பெயரால்
‘பார்த்தா S கோஷ் தலைமைத்துவக்கான அகாடமி’ என்றழைக்கப்படும். இந்நிறுவனத்துக்கு கோஷ், $ 1 மில்லியனை
நன்கொடையாக வழங்கியுள்ளார்.
|
[A] Vigyan se
Vikas
[B] Science for
Transformation
[C] Building
Partnerships Impacting Society
[D] Making of a
New India
ü
4 ஆவது
இந்திய சர்வதேச அறிவியல் விழா (IISF – 2018) உத்தரப்பிரதேச மாநிலம்
லக்னோவில் உள்ள இந்திராகாந்தி பிரதிஸ்தானில் அக்.5 அன்று தொடங்கியது. 4 நாள் நடைபெறும் இந்த விழாவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார்.
இவ்விழாவை விஞ்ஞான பாரதியுடன் இணைந்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
அமைச்சகமும், புவி அறிவியல் அமைச்சகமும் நடத்திவருகின்றன.
ü
இந்நிகழ்வில்
ஐயாயிரம் மாணவர்கள், ஐநூற்றைம்பது ஆசிரியர்கள், வடகிழக்கு பிராந்தியத்தில் இருந்து 200 மாணவர்கள் உள்பட
சுமார் பத்தாயிரம் பேர் மற்றும் இருபது சர்வதேச பிரதிநிதிகள்,
பன்னாட்டு நிபுணர்கள் பத்து பேர்,
பெண் விஞ்ஞானிகள் எண்ணூறு பேர்
கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
[A] டேராடூன்
[B] சிம்லா
[C] கெளகாத்தி
[D] பாட்னா
ü
அக்.4-5 ஆகிய தேதிகளில், ‘Women in
Detention and Access to Justice’ என்னும் தலைப்பிலான முதலாவது
பிராந்திய மாநாடு சிம்லாவில் நடந்தது. காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயலகம்
(BPR & D) ஹிமாச்சலப்பிரதேசத்தின்
சிறைத்துறையுடன் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாடு அனைத்து
நிலை சிறைத்துறை ஊழியர்களுக்கும் தங்களின் பணி அனுபவங்களை வெளிப்படையாக எடுத்துக்
கூறுவதற்கும், சிறைத்துறையின் சீர்திருத்தத் –திற்கு தேவையான சிறந்த நடைமுறைகளை
கண்டறிவதற்குமான ஒரு தளத்தை வழங்கியது.
|
[A] BHIM Yatra
[B] Bharat Yatra
[C] Digi Yatra (டிஜி யாத்ரா)
[D] Aadhaar Yatra
ü
பயணிகள்
தங்கள் உயிரியளவு தகவலைப் பயன்படுத்தி விமான நிலையத்திற்குள் நுழையும் வகையில்,
‘டிஜி யாத்ரா’ என்ற திட்டத்தை மத்திய உள்நாட்டு
விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கிவைத்தார். ‘டிஜி யாத்ரா’
என்பது முகத்தை அடையாளம் காணும் தொழில் நுட்பத்தை (Facial
Recognation) அடிப்படையாகக்கொண்டது.
ü
இந்தத்
திட்டம் காகிதமற்ற பயணத்தை அளிப்பதற்கான முன்னெடுப்பாக அமையும். பயணிகள் விமான
நிலையத்துக்குள் நுழைவதற்கு உயிரியளவு (Biometricc) அடிப்படையிலான டிஜிட்டல் நடைமுறை பின்பற்றப்படும். இந்த ‘டிஜி யாத்ரா’ திட்டம் 2019
ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு,
ஹைதராபாத் விமான நிலையங்களில்
செயல்படுத்தப்படும்.
ü
கொல்கத்தா,
வாரணாசி, புனே, விஜயவாடா விமான நிலையங்களில் ஏப்ரல் மாதத்திலிருந்து
செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்தில் பயணிகளுக்கான
மையப்ப –டுத்தப்பட்ட பதிவுமுறை திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன் மூலம் ஒவ்வொரு
பயணிக்கும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும்.
ü
பயணத்துக்கு
முன்னதாக, விமான சேவை
வழங்கும் நிறுவனங்கள் பயணிகளின் விவரங்கள் மற்றும் அடையாள எண்ணை,
பயணிகள் செல்ல வேண்டிய விமான
நிலையத்துக்கு அளிக்கும். பெயர், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், ஏதேனும் ஓர் அடையாள அட்டையின் விவரம் & ஆதார் எண்
ஆகியவற்றைப் பயன்படுத்தி அடையாள எண்ணைப் பெற்றுக்கொள்ள முடியும்.
|
[A] ஆபரேஷன் டிரைடன்ட்
[B] ஆபரேஷன்
சமுத்திர பராக்கிரம்
[C] ஆபரேஷன்
மைத்ரி
[D] ஆபரேஷன்
சமுத்ரா மைத்ரி
ü
இந்தோனேசியாவில்
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருமளவில் மனிதாபிமான உதவிகளை
வழங்குவதற்காக ‘ஆபரேஷன் சமுத்ரா மைத்ரி’ என்னும் உதவி நடவடிக்கையை இந்திய அரசாங்கம்
தொடங்கியுள்ளது. இந்த உதவி நடவடிக்கையின் கீழ், இந்தியாவிலிருந்து C
– 130J
& C – 17 ஆகிய 2 விமானங்கள் முறையே மருத்துவப் பணியாளர்கள்
மற்றும் நிவாரணப் பொருள்களுடன் அங்கு அனுப்பப்பட்டுள்ளது.
ü
இவைதவிர,
INS திர், சுஜாதா மற்றும் ஷர்துல் ஆகிய 3 கப்பல்களும் உதவி நடவடிக்கைகளுக்காக
சென்றுள்ளன. இக்கப்பல்கள் அக்டோபர் 6 வாக்கில் இந்தோனேசியாவின் மத்திய சுலோவேசி
மாகாணத்தை அடையும். இந்தோனேசியாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கம்-சுனாமி பேரழிவு ஆகியவை மத்திய
இந்தோனேசியாவின் சுலோவேசியின் பகுதிகளை சேதப்படுத்தியுள்ளது.
இதில் 1400 பேர் உயிரிழந்துள்ளனர். 2.4
மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர், 61867 இடம் பெயர்ந்தனர் மற்றும் 66,000 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
|
[A] ஆசிய
வளர்ச்சி வங்கி
[B] ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி
[C] உலக வங்கி
[D] சர்வதேச நாணய நிதியம்
ü
ஆசிய
வளர்ச்சி வங்கியானது போபாலில் இந்தியாவின் முதல் பல்–திறன் பூங்காவை அமைக்க $150
மில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தின் தொழில் நுட்ப
மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி அமைப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கான சர்வதேச
பயிற்சி வசதிகளுடன் இந்தப் புதிய உலகளாவிய திறன்கள் பூங்கா அமைக்கப்படும்.
ü
இது
மாநிலத்தின் தொழிலாளர் சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக மிகவும்
திறமையான தொழிலாளிகளை உருவாக்கும். பிற தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும்
பயிற்சி நிறுவனங்களுக்கான மாநிலத்தின் மத்திய மையமாக செயல்படும் இப்பூங்கா
உற்பத்தி, சேவை மற்றும்
மேம்பட்ட வேளாண் பணிகள் ஆகியவற்றிற்கான திறன்களை மையமாகக் கொண்ட பயிற்சி வசதிகளை
வழங்கும்.
9.கோதுமை தானியத்தில் எந்த நுண்ணூட்டச்சத்தின் அடர்த்திக்கு
பொறுப்பான கோதுமை மரபணுத் தொகுதிக் கூறை அறிவியலாளர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர்?
|
[B] துத்தநாகம்
[C] கால்சியம்
[D] நைட்ரஜன்
ü
கோதுமை
தானியத்தில் துத்தநாக நுண்ணூட்டச்சத்தின் செறிவுக்குப் பொறுப்பான கோதுமை மரபணுத்
தொகுதிக் கூறை அறிவியலாளர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கோதுமையிலுள்ள
துத்தநாக செறிவுகளில் ஈடுபட்டுள்ள வேட்பு மரபணுக்களையும் அடையாளம் கண்டுள்ளனர்.
இக்கண்டுபிடிப்புகள், மேம்பட்ட அளவிலான நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்த கோதுமை
வகைகளை உருவாக்க உதவும்.
ü
ஆராய்ச்சியாளர்கள்
39 புதிய மூலக்கூறுக் குறிகள் மற்றும் இரு மரபணுப்பிரிவுகளைக் கண்டறிந் –துள்ளனர். இந்தியா மற்றும் மெக்சிகோவில் பல்வேறு சூழல்களில்
மொத்தம் 330 கோதுமை வகைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. மனித நோய் ஆராய்ச்சியில்
பயன்படுத்தப்பட்ட மரபணுத் தொகுதி பரவலான தொடர்பு அணுகுமுறை, இந்த ஆய்வில் துத்தநாகம் சம்பந்தப்பட்ட மரபணு பிரிவுகளை
கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.
ü
இந்த
ஆய்வை பன்னாட்டு சோளம் & கோதுமை மேம்பாட்டு மையம் (CIMMYT);
லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம்;
கர்னலில் உள்ள இந்திய கோதுமை மற்றும் பார்லி
ஆராய்ச்சி நிறுவனம்; மற்றும் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து
நடத்தியுள்ளன. இந்திய மக்கள்தொகையில் சுமார் 30 சதவீதம் பேருக்கு துத்தநாகப்
பற்றாக்குறை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு ஐந்து
வயதிற்கும் குறைவான குழந்தைகளும், கர்ப்பிணி பெண்களும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
|
[A] மீனாட்சியம்மன் திருக்கோவில், மதுரை
[B] ஜகந்நாதர் கோவில், பூரி
[C] மாதா
வைஷ்ணவி தேவி கோவில், ஜம்மு & காஷ்மீர்
[D] காசி விஸ்வநாதர் கோவில், வாரணாசி
ü
ஜம்மு
& காஷ்மீர் மாநிலத்தின் ரேசி மாவட்டத்தில் உள்ள குகைக்கோவிலான மாதா வைஷ்ணவி
தேவி கோவில், மும்பையில் இந்தியா டுடே குழுமத்தால் நடத்தப்பட்ட நிகழாண்டின் சஃபாய்கிரி
உச்சிமாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில் நாட்டின் ‘தூய்மையான வழிபாட்டுத்
தலம்” என அறிவிக்கப்பட்டுள்ளது. திரிகுடா மலைகளில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு 2017 ஆம் ஆண்டில் 81.78-க்கும்
மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
ü
இந்திய
அரசாங்கத்தின் ‘தூய்மை சேவை’ பரப்புரையின் கீழ், 2017 ஆம் ஆண்டுக்கான ‘சிறப்பு தூய்மையான வழிபாட்டுத் தலம்’ விருதையும்
இக்கோவில் பெற்றது.
IEEE Final Year projects Project Centers in Chennai are consistently sought after. Final Year Students Projects take a shot at them to improve their aptitudes, while specialists like the enjoyment in interfering with innovation. For experts, it's an alternate ball game through and through. Smaller than expected IEEE Final Year project centers ground for all fragments of CSE & IT engineers hoping to assemble. Final Year Projects for CSE It gives you tips and rules that is progressively critical to consider while choosing any final year project point.
ReplyDeleteSpring Framework has already made serious inroads as an integrated technology stack for building user-facing applications. Spring Framework Corporate TRaining the authors explore the idea of using Java in Big Data platforms.
Specifically, Spring Framework provides various tasks are geared around preparing data for further analysis and visualization. Spring Training in Chennai
The Nodejs Training Angular Training covers a wide range of topics including Components, Angular Directives, Angular Services, Pipes, security fundamentals, Routing, and Angular programmability. The new Angular TRaining will lay the foundation you need to specialise in Single Page Application developer. Angular Training