Current AffairsWinmeen Tamil News

அக்டோபர் 14: உலக தரநிலைகள் தினம்

அக்டோபர் 14: உலக தரநிலைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

முக்கிய தகவல்கள்:

உலக தரநிலைகள் தினம், தரப்படுத்தப்பட்ட அளவீடுகள், தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்களின் முக்கியத்துவம் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

அளவீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் தன்னார்வ உலகளாவிய தரநிலைகளின் வளர்ச்சியில் விஞ்ஞானிகளின் சாதனைகளுக்கு இது அங்கீகாரம் அளிக்கிறது.

இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “ஒரு சிறந்த உலகத்திற்கான பரந்த பார்வை”(“Shared Vision for a Better World”.).

இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஐஎஸ்ஓ (தரப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு), IEC- (International Electrotechnical Commission) (சர்வதேச மின் தொழில்நுட்ப ஆணையம்), மற்றும் ITU (சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்) ஆகியவற்றின் பிரச்சாரங்களின் ஒரு பகுதியாகும் (Sustainable Development Goals-SDGs).

2022 உலக தரநிலைகள் தினத்தையொட்டி, இந்திய தரநிலைகள் பணியகம் ( Bureau of Indian Standards-BIS) “மனக் மஹோத்சவ்” என்ற தரநிலை மாநாட்டை ஏற்பாடு செய்தது.

“நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தரநிலைகள் – ஒரு சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட பார்வை” என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னணி

1946 ஆம் ஆண்டு, 25 நாடுகளின் பிரதிநிதிகள் தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பை – உலகளாவிய தரநிலைகளை மேம்படுத்துவதற்கான ஒரு சர்வதேச அமைப்பினை அமைக்க ஒப்புக்கொண்டதன்ஐஎஸ்ஓ அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி 23, 1947 முதல் செயல்படத் தொடங்கியது. உலக தரநிலைகள் தினம் முதல் முறையாக அக்டோபர் 14, 1970 அன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நாள் ISO வின் முன்னாள் தலைவரான ஃபரூக் சுந்தர் அவர்களால் தொடங்கப்பட்டது.

முக்கியத்துவம்

அளவீடுகள், தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களின் அலகுகளின் தரப்படுத்தல் உலகமயமாக்கல் காலத்தில் மிகவும் முக்கியமானது. சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குவதிலும், தொழில்நுட்ப தடைகளை நீக்குவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இது உலகளாவிய சந்தைக்கான அணுகலை அதிகரிக்கிறது, புதுமைகளை ஊக்குவிக்கிறது, சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது, செயல்திறனை அதிகரிக்கிறது மற்றும் விரயங்களைக் குறைக்கிறது. சர்வதேச தரத்தின் அடிப்படையில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதன் மூலம் சிறந்த உலகத்தை உருவாக்குவதையும் இது உறுதி செய்கிறது.

தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு பற்றி

தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு (ISO) என்பது அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத துறைகளிலும் தரநிலைகளை உருவாக்கி வெளியிடும் ஒரு சர்வதேச தரநிலை மேம்பாட்டு அமைப்பாகும். இது நிறுவப்பட்டதிலிருந்து, இது வணிகம் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான 24,261 சர்வதேச தரநிலைகளை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பில் உறுப்பு நாடுகளின் தேசிய தரநிலை அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர். 2022 வரை, இது 167 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

 

October 14: World Standards Day – Update (October, 2022)

 

14th October is observed as the World Standards Day.

Key facts

World Standards Day raises global awareness about the importance of standardized measurements, technologies and industries.

It gives recognition of scientists’ achievements in the development of voluntary universal standards used for measurements.

The theme for this year is “Shared Vision for a Better World”.

This year’s theme is part of the campaigns of ISO (the International Organization for Standardization), IEC (International Electrotechnical Commission), and ITU (International Telecommunication Union) towards creating global awareness about the role of standardization in achieving the United Nation’s 2030 Sustainable Development Goals (SDGs).

On the occasion of World Standards Day 2022, the Bureau of Indian Standards (BIS) organized a standards conclave called “Manak Mahotsav”.

The event was organized based on the theme “Standards for Sustainable Development Goals – A Shared Vision for a Better World”.

Background

World Standards Day commemorates the day in 1946, when representatives from 25 countries agreed to set up the International Organization for Standardization – an international body to promote global standards. The ISO officially started operations from February 23, 1947. World Standards Day was observed for the first time on October 14, 1970. This day was inaugurated by Faruk Sunter, the former President of the ISO.

Significance

Standardization of units of measurements, technology and equipment is critical in the age of globalization. It plays a major role in facilitating international trade and removing technical hurdles. It increases access to global market, promotes innovation, international collaboration, increases efficiency and minimises wastages. It also ensures the creation of a better world by building smart cities based on international standards.

About International Organization for Standardization

The International Organization for Standardization (ISO) is an international standard development organization that develops and publishes standards in all technical and non-technical fields. Since it was established, it has published over 24,261 international standards for business and technologies. This Geneva-headquartered organization has representatives from national standards organizations of the member countries. As of 2022, it has 167 member states.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!