Current AffairsWinmeen Tamil News

இலங்கையில் இந்திய காட்டெருமைகளை மீண்டும் அறிமுகம் செய்வதற்கான கோரிக்கை முன்மொழிவு- இந்திய அரசு பரிசிலனை

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கவராக்கள் அழிந்துவிட்ட தீவு தேசமான இலங்கையில் கௌர் இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இந்திய காட்டெருமைகளை இடமாற்றம் செய்வதற்கான இலங்கையின் முன்மொழிவை இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

முக்கிய தகவல்கள்:

இந்திய காட்டெருமைகளை அதன் சனத்தொகையை மீட்டெடுக்க தீவு நாட்டிற்கு மாற்றுமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த முன்மொழிவுக்கு இந்திய அரசு சம்மதித்தால், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் ஒப்பந்தம் இதுவாகும்.

இது வனவிலங்கு அல்லது விலங்கியல் பண்ணுறவாண்மை (zoological diplomacy) அரசியல் போக்குக்கு ஏற்ப உள்ளது.

குறைந்தது 6 இந்திய காட்டெருமைகளையாவது அளிக்குமாறு இலங்கை கேட்டுள்ளது, அவை ஐந்து ஆண்டுகளுக்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் வளர்க்கப்பட்டு பின்னர் அவை காட்டுக்குள் விடப்படும்.

சர்வதேச அளவில் கட்டாயப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மீண்டும் அறிமுகம் செய்யப்படும்.

அதன் நீண்ட கால வெற்றியானது கௌர்களின் அழிவுக்கு காரணமான நிலைமைகளை நீக்குவதைப் பொறுத்தது.

இந்திய காட்டெருமை பற்றி 

இந்திய காட்டெருமை அல்லது கவுர் சிங்களத்தில் கவரா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு காலத்தில் இலங்கையில் பரவலாக இருந்தது ஆனால் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அழிந்து விட்டது. இருப்பினும், கவரா இன்னும் இலங்கையில் புராண கதைகளில் பிரபலமாக உள்ளது. இந்திய கௌர் உலகிலேயே மிகப்பெரிய காட்டுப் மாடு.. IUCN சிவப்பு பட்டியலில் இந்திய கௌர் “அழியக்கூடியது” என்று பட்டியலிடப்பட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் அட்டவணை I இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது. உலகில் 13,000 முதல் 30,000 வரை கௌர் இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 85 சதவீதம் இந்தியாவில் உள்ளன. இவை மியான்மர் மற்றும் தாய்லாந்திலும்  தொகை நிறைந்துள்ளன.

விலங்கியல் பண்ணுறவாண்மை (zoological diplomacy) என்றால் என்ன?

விலங்கியல் பண்ணுறவாண்மை உலகெங்கிலும் உள்ள நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இது விலங்குகளுக்கு கடன் கொடுப்பது அல்லது பரிசளிப்பதில் இருந்து வேறுபட்டது. மாறாக, நாடுகளுக்கிடையே உயிரினங்களின் இடமாற்றம் மற்றும் மறு அறிமுகம் ஆகியவை அடங்கும். இது குறிப்பாக அண்டை நாடுகளில் நடைபெறுகிறது. உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள அனைத்து காட்டெருமை மந்தைகளும் அழிந்து போன பிறகு, அமெரிக்க காட்டெருமை மந்தைகள் கனடாவிலிருந்து விலங்குகளுடன் கூடுதலாக சேர்க்கப்பட்டன. தென்னாப்பிரிக்கா நிறவெறி சகாப்தம் முடிவுக்கு வந்த பிறகு பண்ணுறவு மேம்பாடுக்காக மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு சிறுத்தைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. சமீபத்தில், கம்போடியா இந்தியாவிலிருந்து புலிகளை இடமாற்றம் செய்ய கோரியது.

Reintroduction of Gaurs in Sri Lanka

The Indian Government is considering Sri Lanka’s proposal to translocate Indian bison to the island nation, where the gavaras have become extinct several centuries ago.

Key facts

The Sri Lankan government has requested India to transfer Indian bisons to the island nation to revive its population.

If the Indian Government agrees to this proposal, this will be the first of its kind agreement between India and Sri Lanka.

It is in line with the global trend of wildlife or zoological diplomacy.

Sri Lanka has asked for the transfer of at least 6 Indian bisons, which will be bred in captive situation for five years before being released into the wild.

The reintroduction will take place based on the internationally mandated guidelines.

Its long-term success depends on the elimination of conditions that caused the extinction of gaurs.

About Indian bison

Indian bison or gaur is known as gavara in Sinhala. It was once widespread in the Sri Lanka but became extinct by the end of the 17th century. However, gavara still remains popular in iconography and mythological fables in Sri Lanka. The Indian gaur is the largest wild bovine in the world. The Indian Gaur is listed as “vulnerable” in the IUCN Red List and protected under Schedule I of the Wildlife Protection Act, 1972. There are an estimated 13,000 to 30,000 gaurs in the world. Of these, 85 per cent are in India. The population is also concentrated in Myanmar and Thailand.

What is zoological diplomacy?

Zoological diplomacy is practiced by countries across the world. It is different from loaning or gifting the animals. Rather, it involves translocation and reintroduction of species between countries. It takes place especially among neighbouring countries. For instance, the American bison herds were supplemented with animals from Canada after almost all herds in the US were lost. South Africa has been exporting cheetahs to other African countries as a diplomatic tool after the end of Apartheid era. Recently, Cambodia has requested translocation of tigers from India.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!