Current AffairsWinmeen Tamil News

டைட்டன் நிலவை ஆராய்கிறது நாசாவின் டிராகன்ஃபிளை ரோட்டார்கிராஃப்ட்

டிராகன்ஃபிளை ரோட்டர்கிராஃப்ட் சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி நிறுவனத்தால் 2027 இல் ஏவப்படும்.

முக்கிய தகவல்கள்:

டிராகன்ஃபிளை ரோட்டர்கிராஃப்ட் 2027 இல் ஏவப்பட்டு 2034 ஆம் ஆண்டில் டைட்டனில் உள்ள செல்க் க்ரேட்டர் பகுதியை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

1,000 பவுண்டுகளுக்கும் குறைவான எடையுள்ள இந்த விண்கலம், ஒரு இராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டரைப் போலவே இருக்கும்.

டைட்டனின் கனிம கலவையைப் புரிந்துகொள்வதற்கும் பூமியில் உயிரினங்களின் தோற்றத்தைப் புரிந்துகொள்வதற்கும் முயன்று ஆராயும்.

இது சனி கிரகத்தின் நிலவில் ஏவப்பட்ட முதல் விமானம் ஆகும். வானில் ஏவப்பட்ட வேறெந்த விண்கலங்கள் போலல்லாத, முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட வளிமண்டல விமானம் ஆகும்.

வெளி சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு வானத்தை குறிவைத்து பறக்கும் முதல் இயந்திரம் இதுவாகும்.

 நாசாவின் டிராகன்ஃபிளை ரோட்டார்கிராஃப்டின் இலக்காக டைட்டன் உள்ளது, ஏனெனில் இது உயிர்கள் தோன்றுவதற்கு முன்பிருந்த வேதியியல், வானியல் உயிரியல் மற்றும் வேற்று கிரக உலகின் சாத்தியமான வாழ்விடத்தை ஆராய்ச்சி செய்வதற்கான சிறந்த இடமாகும்.

13 ஆண்டுகளுக்கும் மேலாக காசினி விண்கலம் எடுத்த அனைத்து ரேடார் படங்களையும் பயன்படுத்தி விஞ்ஞானிகள் செல்க் க்ரேட்டர் பகுதியை டிராகன்ஃபிளை ரோட்டர்கிராஃப்டின் எதிர்கால இலக்காகவகைப்படுத்தியுள்ளனர் – .

மேற்பரப்பின் பண்புகளை துல்லியமாக தீர்மானிக்க ஆராய்ச்சியாளர்கள் கோண நிழல்கள் மற்றும் ரேடார் பிரதிபலிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தினர். அவர்கள் தளத்தில் 6 நிலப்பரப்புகளை வரைபடமாக்க முடிந்தது, இது செல்க் பள்ளத்தின் விளிம்பு உயரத்தை அளவிட உதவியது.

இது நாசா ரோட்டர்கிராஃப்ட் சுமூகமாக தரையிறங்குவதற்கும் டைட்டனை துல்லியமான ஆய்வு செய்வதற்கும் உதவும்.

டிராகன்ஃபிளை சனி கிரகத்தின்  நிலவின் பூமத்திய ரேகை, வறண்ட பகுதியில் தரையிறங்க உள்ளது, இது ஹைட்ரோகார்பன் கொண்ட குளிர் மற்றும் அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது.

டைட்டனில் திரவ மீத்தேன் மழை அடிக்கடி நிகழ்கிறது. இந்த நிலவு பூமியில் காணப்படும் பாலைவனம் போன்றது, குன்றுகள், சிறிய மலைகள் மற்றும் விண்கற்கள் தாக்கி உண்டான பள்ளம் கொண்டுள்ளது.

காசினி விண்கலத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் டைட்டனின் மேற்பரப்பில் 10 சதவீதத்திற்கும் குறைவான பகுதியை ஆய்வு செய்ய முடிந்தது. இதன் பொருள் கவனிக்கப்படாமல் இருக்கும் சிறிய ஆறுகள் மற்றும் நிலப்பரப்புகள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

NASA’s Dragonfly rotorcraft

Dragonfly rotorcraft will be launched by the American space agency in 2027 to study Titan – the largest moon of Saturn.

Key facts

 • Dragonfly rotorcraft is scheduled to be launched in 2027 and reach the Selk Crater region on Titan in the year 2034.
 • The spacecraft, weighing less than 1,000 pounds, will look similar to a military transport helicopter.
 • It will operate like a drone to understand the composition of Titan and conduct research to understand the origin of life on Earth.
 • This would be the first aircraft on the Saturn’s moon and the first-ever fully controlled atmospheric flight on any moon.
 • It will be the first flying machine targeting a celestial body in the outer solar system.
 • Titan is the target of NASA’s Dragonfly rotorcraft since it is an ideal destination to research prebiological chemistry, astrobiology and the potential habitability of an extra-terrestrial world.
 • Using all the radar images from Cassini spacecraft for over 13 years, scientists have successfully characterized Selk Crater region – the future destination of the Dragonfly rotorcraft.
 • Researchers used angled shadows and radar reflectivity to accurately determine the surface’s properties. They were able to map 6 terrains in the site, which helped them measure the rim height of the Selk Crater.
 • This will enable the smooth landing of the NASA rotorcraft and help in its accurate exploration of Titan.
 • Dragonfly is set to land on an equatorial, dry region of the Saturn’s moon, which has frigid and thick atmosphere having hydrocarbon.
 • While liquid methane rain frequently occurs in Titan, it is more like a desert seen on the Earth, with the presence of dunes, small mountains and an impact crater.
 • Using the data obtained from the Cassini spacecraft, scientists were able to analyse less than 10 per cent of Titan’s surface. This means that there is a possibility of the presence of small rivers and landscapes that remain unnoticed.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!