Tamil Current Affairs 10th October 2018


Tamil Current Affairs 10th October 2018
1.சமூகப்பணிகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக, ரூ.1.5 கோடி மதிப்பிலான ஆரோகன் சமூக கண்டுபிடிப்பு விருதுகளை அண்மையில் அறிவித்த இந்திய நிறுவனம் எது?


[A] டாடா மோட்டார்ஸ்
[B] மஹிந்திரா & மஹிந்திரா
[C] இன்ஃபோசிஸ்
[D] ரிலையன்ஸ் தொழிற்துறைகள்
ü  அரசாங்க விதிமுறைகளின் கீழ் நிதியை அதிகரிப்பதன் மூலம் சமூகப்பணிகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக, ரூ.1.5 கோடி மதிப்பிலான ஆரோகன் சமூக கண்டுபிடிப்பு விருதுகளை (ASIA) அண்மையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்தது.
ü  சமூகப் பணிகளுக்காக புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுவரும் தனிநபர்கள் அல்லது அரசு சாரா அமைப்புகளில் மூன்று பேரைத் தேர்வு செய்து தலா ரூ.50 லட்சத்தை வெகுமதியாக வழங்க இன்ஃபோசிஸ் தீர்மானித்துள்ளது. சுகாதாரம், ஊரக மேம்பாடு, ஆதரவற்றோர் நலன், பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, கல்வி, விளையாட்டு உள்ளிட்டவற்றில் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுவரலாம் என்று இன்ஃபோசிஸ் அறிவித்துள்ளது.


2. ‘ISSA GOOD Practice விருது, ஆசியா & தி பசிபிக் – 2018’ வென்ற இந்திய நிறுவனம் எது?
[A] SBI
[B] ESIC
[C] RBI
[D] NABARD
ü  அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான பிராந்திய சமூக பாதுகாப்பு மன்றத்தில், பணியாளர்களுக்கான அரசு காப்பீட்டு நிறுவனம் (ESIC) விரிவான காப்பீட்டு நிர்வாக தீர்வுக்காக “ISSA GOOD Practice, ஆசியா மற்றும் தி பசிபிக் – 2018” விருதை வென்றது. ESIC’ன் SPREE (முதலாளி மற்றும் பணியாளர்களின் பதிவுகளை ஊக்குவிப்பதற்கான திட்டம்) விரிவாக்கத்திற்கான நடவடிக்கைகளை இவ்விருது அங்கீகரிக்கிறது. ISSA (சர்வதேச சமூக பாதுகாப்பு சங்கம்) என்பது சமூக பாதுகாப்பு அமைப்புகள், அரசாங்கங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு துறைகளுக்கான ஒரு முதன்மையான சர்வதேச அமைப்பு ஆகும்.
ü  ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான பிராந்திய சமூகப் பாதுகாப்பு மன்றம் என்பது மூன்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மன்றமாகும், இது பிராந்தியத்தின் மிகமுக்கியமான சமூக பாதுகாப்பு நிகழ்வாகும். ISSA உறுப்பு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் & மேலாளர்கள், முக்கிய சமூக பாதுகாப்பு சவால்களைப்பற்றி விவாதிக்கவும், தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் இது தனித்துவமான வாய்ப்பினை வழங்குகிறது.
3.தேசிய பாதுகாப்பு விவகாரங்களை மீளாய்வு செய்வதற்காக தேசிய பாதுகாப்புக் குழுவுக்கு உதவுவதற்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட வல்லுநர் குழுவிற்கான தலைமை யார்?


[A] அஜித் தோவல்
[B] அமிதாப் காந்த்
[C] VK சரஸ்வத்
[D] சஞ்சய் மித்ரா
ü  தேசிய பாதுகாப்புக் குழுவிற்கு உதவுவதற்காக கொள்கைக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் பிரதமருக்கு ஆலோசனை வழங்கவுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உறுப்பினர்கள், NITI ஆயோக் துணைத்தலைவர், அமைச்சரவை செயலாளர், முப்படைத் தளபதிகள், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர், வெளியுறவு, உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர்கள் ஆகியோர் இக் குழுவில் இடம்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ü  பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மற்றும் விநியோகத்துறையின் செயலர், பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


4. 2018 கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பங்குதாரர் மாநிலமாக உள்ள மாநிலம் எது?
[A] ஜார்கண்ட்
[B] ஹிமாச்சலப்பிரதேசம்
[C] அசாம்
[D] மிசோரம்
ü  நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ள கோவா சர்வதேச திரைப்பட விழாவின் (GIFF-2018) பங்குதாரர் மாநிலமாக ஜார்கண்ட் உள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அமித் கரே மற்றும் ஜார்கண்ட் தலைமைச் செயலாளர் சுதிர் திரிபாதி ஆகியோருக்கு இடையே ராஞ்சியில் நடந்த சந்திப்பில் இது முடிவுசெய்யப்பட்டது.
ü  இது ஜார்கண்ட் மாநில அரசின் கலாச்சாரத்தை வெளிப்படுத்த உதவும். மேலும், ஜார்கண்டின் அனைத்து மாவட்டங்களிலும் சமூக வானொலி நிலையம் திறக்கவும் அப்போது முடிவெடுக்கப்ப –ட்டது. அடுத்தாண்டு ஜனவரியில், ஜார்கண்டில் உள்ள இருநகரங்களில், இந்திய பனோரமாவின் கீழ், ஜார்கண்ட் திரைப்பட விழாவை நடத்தவும் அப்போது முடிவு செய்யப்பட்டது.


5.மனிதநேயத்திற்காக இந்தியா என்றவொன்றை அறிமுகம் செய்துள்ள அமைச்சகம் எது?
[A] கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்
[B] ரயில்வே அமைச்சகம்
[C] வெளியுறவு அமைச்சகம்
[D] பாதுகாப்பு அமைச்சகம்
ü  அக்டோபர் 9 அன்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் புது தில்லியில் மனிதநேயத்திற்காக இந்தியா என்றவொன்றை அறிமுகப்படுத்தினார். அதன்கீழ் ‘ஜெய்ப்பூர் கால்’ என்றழைக்கப்படும் செயற்கை கால்கள், உலகம் முழுவதும் தேவைப்படுவோர்க்கு இலவசமாக வழங்கப்படும். மனித நேயத்திற்கு மகாத்மா காந்தி வழங்கிய உன்னத சேவையை கௌரவிக்கும் பொருட்டு, தொண்டு நிறுவனமான “பகவான் மகாவீர் விக்லாங் சஹாயத்த சமிதி (BMVSS)” உடன் இணைந்து இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
ü  மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் நீட்சியாக, பல நாடுகளில் ஓராண்டுக்கு நடைபெறும் செயற்கை உறுப்பு பொருத்து முகாம் நடத்தப்பட்டுவருகிறது. 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட BMVSS, அதன் ‘ஜெய்ப்பூர் கால்’ தயாரிப்புக்காக அறியப்படுகிறது. செயற்கைக் கால் உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுள் இதுவும் ஒன்றாகும்.
6.எந்தத் தேதியில் அண்மையில் உலக அஞ்சல் தினம் அனுசரிக்கப்பட்டது?


[A] அக்டோபர் 8
[B] அக்டோபர் 7
[C] அக்டோபர் 9
ü  1874 ஆம் ஆண்டு அக்.9 அன்று சுவிச்சர்லாந்திலுள்ள பெர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே ஒவ்வோர் ஆண்டும் உலக அஞ்சல் தினமாக (World Post Day) உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடந்த சர்வதேச அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இத்தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ü  இந்தியப் பிரதிநிதிகளின் உறுப்பினரான ஆனந்த் மோகன் நருலாவால் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. நிகழாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “Imagine you are a letter travelling through time. What message do you wish to convey to your readers? – நீங்கள் காலத்தின் ஊடே பயணிக்கும் ஒரு கடிதம் என உங்களை கற்பனை செய்துகொள்ளுங்கள். என்ன செய்தியை உங்கள் வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறீர்கள்?” என்பதாகும்.


7.நிகழாண்டின் கோடைகால இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் தங்கத்தை வென்றவர் யார்?
[A] ஸ்ரீஹரி நடராஜ்
[B] மெஹுலி கோஷ்
[C] ஜெரேமி லால்ரின்னுங்கா
[D] மானவ் தாக்கர்
ü  அக்.9 அன்று அர்ஜென்டினாவில் நடந்த கோடைகால இளையோர் ஒலிம்பிக்கின் ஆண்கள் பளு தூக்குதலில், ஆண்கள் 62 கி.கி., எடைப்பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் ரேமி லால்ரின்னுங்கா, ஸ்நாட்ச் முறையில் 124 கி.கி., மற்றும் கிளீன் & ஜெர்க் முறையில் 150 கி.கி., என மொத்தம் 274 கி.கி பளுவை தூக்கி முதலிடம்பிடித்து தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் இளையோர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.


8.நிகழாண்டின் ஜாகர்த்தா ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில், இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றவர் யார்?
[A] பரம்ஜீத் கெளர்
[B] சந்தீப் செளத்ரி
[C] ஃபர்மன் பாஷா
[D] தேவன்ஷி சத்திஜாவான்
ü  அக்.8 அன்று ஜகார்த்தாவில் நடந்த ஆசிய பாராலிம்பிக்கின் ஆடவர் ஈட்டியெறிதலில் இந்திய வீரர் சந்தீப் செளத்ரி 60.01 மீ., தூரம் ஈட்டியெறிந்து தங்கம் வென்றார். 49 கி.கி., பளுதூக்குதல் பிரிவில் ஃபர்மன் பாஷா வெள்ளியும், பரம்ஜீத் கெளர் வெண்கலத்தையும் வென்றனர்.
ü  பெண்கள் 100 மீ., பட்டர்பிளை S 10 பிரிவில் தேவன்ஷி வெள்ளியும், ஆடவர் 200 மீ., தனிநபர் மெட்லே பிரிவில் சுயாஷ் ஜாதவ் வெண்கலமும் வென்றனர். நீச்சலில், ஆடவர் 50 மீ பட்டர்பிளை பிரிவில் இந்திய வீரர் நாராயணன் தங்கம் வென்றார். பாட்மிண்டன் அரையிறுதியில், 1-2 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோற்று இந்தியா வெண்கலம் பெற்றது.
9.எந்த மாநிலத்தில், ஆசியாவின் முதல் டால்பின் ஆராய்ச்சி மையம் வரவுள்ளது?


[A] பீகார்
[B] சத்தீஸ்கர்
[C] ஒடிசா
[D] உத்தரப்பிரதேசம்
ü  பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாட்னா பல்கலை வளாகத்தில், கங்கையாற்றின் கரையில் தேசிய டால்பின் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது. இது இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் டால்பின் ஆராய்ச்சி மையமாகும். அழிவின் விளிம்பிலுள்ள உயிரினமான டால்பின்களை பாதுகாப்பதற்காக பீகாரில் அக்டோபர் 5 அன்று அனுசரிக்கப்பட்ட டால்பின் தினத்தன்று இது அறிவிக்கப்பட்டது. டால்பின்களை பாதுகாக்கும் முயற்சிகளிலும், அவற்றின் ஆராய்சியிலும் இந்த மையம் முக்கியப்பங்குவகிக்கும்.


10.அண்மையில் காலமான MN பாலூர், எந்த மொழியின் நவீனக்கவிஞராவார்?
[A] தமிழ்
[B] தெலுங்கு
[C] மலையாளம்
[D] ஒடியா
ü  MN பாலூர் என்று பொதுவாக அறியப்படும் புகழ்மிக்க மலையாளக் கவிஞரான பாலூர் மாதவன் நம்பூதிரி (86), அக்.9 அன்று கோவூரில் காலமானார். 2013 ஆம் ஆண்டில் ‘கதையில்லாதவண்டே கதை’ என்ற தனது சுயசரிதைக்காக இவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.

1 comment:

  1. IEEE Final Year projects Project Centers in Chennai are consistently sought after. Final Year Students Projects take a shot at them to improve their aptitudes, while specialists like the enjoyment in interfering with innovation. For experts, it's an alternate ball game through and through. Smaller than expected IEEE Final Year project centers ground for all fragments of CSE & IT engineers hoping to assemble. Final Year Projects for CSE It gives you tips and rules that is progressively critical to consider while choosing any final year project point.

    Spring Framework has already made serious inroads as an integrated technology stack for building user-facing applications. Spring Framework Corporate TRaining the authors explore the idea of using Java in Big Data platforms.
    Specifically, Spring Framework provides various tasks are geared around preparing data for further analysis and visualization. Spring Training in Chennai


    The Nodejs Training Angular Training covers a wide range of topics including Components, Angular Directives, Angular Services, Pipes, security fundamentals, Routing, and Angular programmability. The new Angular TRaining will lay the foundation you need to specialise in Single Page Application developer. Angular Training

    ReplyDelete