Tamil Current Affairs 12th October 2018


Tamil Current Affairs 12th October 2018


1. 2018 உலக மனநல தினத்துக்கான கருப்பொருள் என்ன?
[A] Mental health in the workplace
[B] Psychological First Aid
[C] Dignity in Mental Health
[D] Young people and mental health in a changing world
ü  மனநலப் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்.10 அன்று ‘உலக மனநல தின’மாக அனுசரிக்கப்படுகிறது. நிகழாண்டில் வரும் இந்நாளுக்கான கருப் பொருள், “மாறிவரும் உலகில் இளைய தலைமுறையினரின் மனநல ஆரோக்கியம்”.


2. ‘மெட் வாட்ச்’ என்ற புதுமையான அலைபேசி சுகாதார செயலியை அறிமுகம் செய்துள்ள இந்திய ஆயுதப்படை எது?
[A] இந்திய விமானப்படை
[B] இந்தியக் கடற்படை
[C] இந்திய இராணுவம்
[D] இந்தியக் கடலோரக் காவல்படை
ü  பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களான ‘டிஜிட்டல் இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மற்றும் இந்திரா தனுஷ் இயக்கம்’ ஆகியவற்றை மனதில் நிறுத்தி, இந்திய விமானப்படையானது தனது 86 ஆவது ஆண்டுவிழாவின்போது, ‘மெட் வாட்ச் – MedWatch’ என்ற புதுமையான அலைபேசி சுகாதார செயலியை அறிமுகம் செய்தது. இந்திய விமானப்படை மருத்துவர்களின் சிந்தனையில் உருவான இந்தச் செயலியை, சுழிய நிதி செலவினத்துடன் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது.
ü  மெட்வாட்ச்சரியான, அறிவியல்பூர்வமான மற்றும் நம்பகமான சுகாதார தகவலை விமானப் படை வீரர்களுக்கும், இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கும். இச்செயலியை, ‘www.apps.mgov.gov.in’ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனை, விமானப்படை தலைமை தளபதி BS தனோவா, புது தில்லியில் அறிமுகம்செய்துவைத்தார்.


3. 2018 ஆம் ஆண்டின் உலக பெண் குழந்தை நாளுக்கான மையக்கருத்து என்ன?
[A] With Her: A Skilled Girl Force
[B] Empower Girls: Before, during and after crises
[C] Girls’ Progress = Goals’ Progress: What Counts for Girls
[D] The Power of Adolescent Girl: Vision for 2030
ü  பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்ட, அவர்களுக்கான அதிகாரத்தை பெற மற்றும் அவர்களின் சாதனைகளை கொண்டாடுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் உலக பெண் குழந்தை நாள் அக்.11 அன்று கொண்டாட்டப்பட்டு வருகிறது. நிகழாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “With Her: A Skilled Girl Force–அவளுடன்: ஒரு திறன்மிகு பெண் படை என்பதாகும்.
4.எந்த மாநிலத்தில், வைக்கோல் இழை மூலம் எத்தனால் உற்பத்தி மேற்கொள்ளப்படும் இந்தியாவின் முதல் 2G எத்தனால் உயிரி – சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது?


[A] அசாம்
[B] ஒடிசா
[C] ராஜஸ்தான்
[D] பஞ்சாப்
ü  வைக்கோல் இழை மூலம் எத்தனால் உற்பத்தி மேற்கொள்ளப்படும் இந்தியாவின் முதல் 2 ஆம் தலைமுறை (2G) எத்தனால் உயிரி – சுத்திகரிப்பு நிலையம், ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது. 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாரத் பெட்ரோலிய (BPCL) நிறுவனம் இதனை அமைக்கும். வைக்கோலை மூலப்பொருளாகக்கொண்டு, ஆண்டொன்றுக்கு 3 கோடி லிட்டர் வரை எரிபொருள் தரத்திலான எத்தனாலை தயாரிக்கும் திறனை உடையது இவ்வாலை.
ü  ஆண்டுக்கு 2 லட்சம் டன் வரையிலான வைக்கோல் இழையை இந்த ஆலை பயன்படுத்தும். சுழிய திரவ வெளியேற்ற தொழினுட்பத்தின் அடிப்படையிலான இந்த ஆலை, வெளியேற்றப்படும் நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும். புதைப்படிவ எரிபொருள்களுடன் ஒப்பிடுகையில், பெட்ரோல் உடன் எத்தனால் கலப்பதன் மூலம் பைங்குடில் வாயுக்கள் உமிழ்வை பெருமளவு குறைக்கலாம்.
ü  ஒடிசா தவிர மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவிலும் BPCL இந்த ஆலையை நிறுவும். நிகழாண்டின் தேசிய உயிரி – எரிபொருள் கொள்கையின்படி, பெட்ரோலுடன் எத்தனால் சேர்க்கப்படும் திறனளவை 2022-க்குள் 10 சதவீதமாகவும், 2030-க்குள் 20 சதவீதமாகவும் அதிகரிக்க அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், எத்தனால் கிடைக்காமையின் காரணமாக இந்த கலப்பு சதவீதம் தற்போது 3-4 % என்ற அளவில் உள்ளது.


5.2018 ஆக்ஸ்ஃபாம் உலக சமத்துவமின்மை தரவரிசையில், இந்தியாவின் தரநிலை என்ன?
[A] 155 ஆவது
[B] 135 ஆவது
[C] 147 ஆவது
[D] 165 ஆவது
ü  UK-வைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபாம் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள “சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை குறைக்க முற்படும் நாடுகள்” பட்டியலில், 157 நாடுகளுள், இந்தியா கடைசியி –லிருந்து பத்தாவது இடமான 147 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தென் கொரியா, நமிபியா, உருகுவே ஆகிய நாடுகள் சமத்துவமின்மையைக் குறைக்க வலுவான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகள் சமத்துவமின்மையைக் குறைக்க மிக மோசமான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ü  இந்தியாவைப் பொறுத்தவரையில், வரிக்கட்டமைப்பு உயர்ந்துகொண்டே போவதாகவும், செல்வந்தர்களிடமிருந்து வருமான வரிகள் சரியாக வசூலிக்கப்படுவது கிடையாது எனவும்  இந்த நிறுவனம் கூறியுள்ளது. பணியாளர் உரிமைகள் மற்றும் பணிசூழலில் பெண்ணுக்கு கிடைக்கும் மரியாதை ஆகியவற்றிலும் இந்தியா குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப்பட்டியலில் டென்மார்க், ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரியா, நார்வே, பெல்ஜியம், சுவீடன், பிரான்ஸ், ஐஸ்லாந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகள் முதல் பத்து இடத்தைப் பிடித்துள்ளன.
6. 17 ஆவது பழைய உலக நாடகத் திருவிழா நடைபெறும் இடம் எது?


[A] கெளகாத்தி
[B] புனே
[C] கொல்கத்தா
[D] புது தில்லி
ü  17 ஆவது பழைய உலக நாடகத் திருவிழாவானது அக்.20 அன்று புது தில்லியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் நடைபெறும். இந்நாடக விழாவை “மனிதநேயத்தின் வாய்மொழி மற்றும் உள்ளார்ந்த பாரம்பரியத்தின் தலைசிறந்த கலை” என UNESCO அங்கீகரித்துள்ளது. 9 நாள் நடைபெறும் இந்த நாடகத் திருவிழா, மிகப்பழமையான சமற்கிருத நாடக வகைகளுள் ஒன்றான ‘கூடியாட்டம்’ என்ற நாடகத்துடன் தொடங்கப்படும்.


7. 2018 இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில், 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ நிகழ்வில் தங்கம் வென்ற இந்தியர் யார்?
[A] அனில் பன்வாலா
[B] சர்துல் விஹன்
[C] சௌரவ் சௌத்ரி
[D] ருஷிராஜ் பரோட்
ü  பியூனஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் செளரவ் செளத்ரி, துப்பாக்கி சுடுதல் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் 244.2 புள்ளிகள் குவித்து தங்கம் வென்றார். முன்னதாக, பெண்கள் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் 236.5 புள்ளிகள் குவித்து மானு பாக்கர் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இந்தியாவின் முதலாவது யூத் ஒலிம்பிக் தங்கத்தை பளுதூக்கும் வீரர் ஜெரேமி லால்ரினுங்கா வென்றதும் குறிப்பிடத்தக்கது.


8. 2018 ஜகார்த்தா ஆசிய பாரா-விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் தனிநபர் ‘ரீகர்வ்’ வில் வித்தைப்போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?
[A] ஹர்விந்தர் சிங்
[B] மாரியப்பன் தங்கவேலு
[C] முகமது யாசர்
[D] மோனு கங்காஸ்
ü  அக்.10 அன்று நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் தனிநபர் ‘ரீகர்வ்’ வில்வித்தைப் போட்டியில் W2 / ST பிரிவு (உடலின் கீழ்ப்பகுதிப் பக்கவாதம்) மாற்றுத் திறனாளிகளுக்கான இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் 6-0 என்ற புள்ளிக்கணக்கில் சீனாவின் ஜாவ் லிக்ஸை வீழ்த்தி தங்கம் வென்றார்.
ü  ஆடவருக்கான வட்டெறிதலில் இந்தியாவின் மோனுகங்காஸ் F11 பிரிவில் (பார்வைக் குறைபாடு உடையோர்), தனது 3 ஆவது முயற்சியில் 35. 89 மீ., தூரம் எறிந்து வெள்ளி வென்றார். இதேபோல், ஆடவருக்கான குண்டு எறிதலில் F46 பிரிவில் (மூட்டு குறைபாடு, குறைந்த தசை வலிமையுடைய) இந்தியாவின் முகமது யாசர் 14.22 மீ., தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். தற்போது 7 தங்கம் உட்பட 37 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
9.திறந்தவெளி சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் மற்றும் தங்கியுள்ளோருக்காக ‘ஸ்மார்ட் வீடியோ அழைப்பு’ வசதியை அறிமுகம் செய்துள்ள மாநில சிறைத்துறை எது?


[A] உத்திரப்பிரதேசம்
[B] சத்தீஸ்கர்
[C] மகாராஷ்டிரா
[D] ஒடிசா
ü  மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறைகளில் உள்ள பெண் கைதிகள், தங்களது குடும்பத்தினருடன் ‘காணொளி அழைப்பு’ மூலம் பேசும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக முதலில் புனேவில் உள்ள ஏரவாடா மத்திய சிறையில் இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மாநிலம் முழுதுவதுமுள்ள பெண் கைதிகள் மற்றும் திறந்தவெளி சிறைச்சாலை கைதிகளுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ü  இதற்காக சிறைக்கைதிகள் நல நிதியிலிருந்து ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் குறிப்பிட்ட நாளில் 5 நிமிடத்துக்கு கைதிகள் தங்களது குடும்பத்தாரோடு பேசலாம். 5 நிமிடம் பேச ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும்.
ü  கைதிகள் காணொளி மூலம் பேசும்போது சிறைக்காவலர்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் குடும்ப விவகாரங்கள் தவிர்த்து வேறெதுவும் பேச அனுமதியில்லை என்றும் அம்மாநில சிறைத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவின் 13 திறந்தவெளி சிறை மற்றும் 2 பெண்கள் சிறை உட்பட 54 சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் உட்பட சுமார் 28,000 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.





10. ‘கவச்’ என்ற தீவிரவாத எதிர்ப்புப் படையை அமைக்க தீர்மானித்துள்ள மாநில அரசு எது?
[A] அருணாச்சலப்பிரதேசம்
[B] அசாம்
[C] ஹரியானா
[D] ஒடிசா
ü  ஹரியானா அரசு, மாநிலத்தின் தற்போதைய பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக ‘கவச்’ என்ற தீவிரவாத எதிர்ப்புப் படையை அமைக்க தீர்மானித்துள்ளது. தெரிவு செய்யப்படும் ஹரியானா காவலர்களுக்கு தேசிய பாதுகாப்புப் படை பயிற்சியளிக்கும். ‘கவச்’சின் தலைமை அலுவலகம் குருகிராமில் இருக்கும் மற்றும் இதன் தலைவராக IG அல்லது DIG இருப்பார்கள். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ‘கவச்’சில் 150 காவலர்கள் இருப்பார்கள், அவர்களுக்கு மானேசரில் 14 வாரங்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.



1 comment:

  1. IEEE Final Year projects Project Centers in Chennai are consistently sought after. Final Year Students Projects take a shot at them to improve their aptitudes, while specialists like the enjoyment in interfering with innovation. For experts, it's an alternate ball game through and through. Smaller than expected IEEE Final Year project centers ground for all fragments of CSE & IT engineers hoping to assemble. Final Year Projects for CSE It gives you tips and rules that is progressively critical to consider while choosing any final year project point.

    Spring Framework has already made serious inroads as an integrated technology stack for building user-facing applications. Spring Framework Corporate TRaining the authors explore the idea of using Java in Big Data platforms.
    Specifically, Spring Framework provides various tasks are geared around preparing data for further analysis and visualization. Spring Training in Chennai


    The Nodejs Training Angular Training covers a wide range of topics including Components, Angular Directives, Angular Services, Pipes, security fundamentals, Routing, and Angular programmability. The new Angular TRaining will lay the foundation you need to specialise in Single Page Application developer. Angular Training

    ReplyDelete