Tamil Current Affairs 13th October 2018


Tamil Current Affairs 13th October 2018


1.இந்தியாவின் முதல் மிஸ் டிரான்ஸ் குயின்எனத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

[A] வீனா சென்ரே
[B] சன்யா சூத்
[C] நிடாஷா பிஸ்வாஸ்
[D] நமிதா அம்மு
ü  மும்பையில் நடந்த இந்தியாவின் முதல் திருநங்கை அழகிப்போட்டியில் சத்தீஸ்கரைச் சேர்ந்த வீனா சென்ரே, தமிழ்நாட்டைச் சேர்ந்த நமிதா அம்முவை தோற்கடித்து மிஸ் டிரான்ஸ் குயின்பட்டம் வென்றார். வீனா, ராய்ப்பூரின் மந்திர் ஹசுத் பகுதியில் வசித்துவருகிறார்.


2.இசை அகாடமியின் ‘சிறப்பு வாழ்நாள் சாதனையாளர்’ விருதை வென்றுள்ள இசைக் கலைஞர் யார்?
[A] லால்குடி G ஜெயராமன்
[B] விக்கு விநாயக்ராம்
[C] ஹரிபிரசாத் சௌராசியா
[D] கமலா லட்சுமிநாராயணன்
ü  தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள இசை அகாடமியின் ‘சிறப்பு வாழ்நாள் சாதனையாளர்’ விருது, அக்.10 அன்று ‘கடம்’ இசைக்கலைஞர் விக்கு விநாயகத்திற்கு வழங்கப்பட்டது. இவர் மண் குடத்தாலான கடத்தினை கர்நாடக இசைக் கச்சேரிகளில் பயன்படுத்துகிறார். இதன்மூலம் தமிழ்நாட்டின் கடத்தின் பெருமையை அனைவரும் அறியச் செய்தவராவார்.
ü  இசை அகாடமி மிக அரிதாக வழங்கும் விருது இது. இதற்கு முன்னால் கமலா லட்சுமி நாராயணன் (பரத நாட்டியம்), லால்குடி G ஜெயராமன் (வயலின்) இருவர் மட்டுமே வாழ்நாள் சாதனையாளர்களாக அகாடமியால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.

3. 2018 ஆசிய பாரா விளையாட்டுகளின் ஆண்கள் F46 பிரிவில், வெள்ளி வென்ற இந்திய வீரர் யார்?
[A] தேவேந்திர ஜஜாரியா
[B] ரிங்கு
[C] சுந்தர் சிங் குர்ஜார்
[D] சந்தீப் சௌத்ரி
ü  2018 ஆசிய பாரா விளையாட்டுகளில் கை பாதிப்பு, தசை செயலிழப்பு போன்றவர்களுக்கான ஆண்கள் F46 பிரிவில் ஈட்யெறிதலில் சுந்தர் சிங் 61.33 மீ., தூரம் எறிந்து வெள்ளி வென்றார். ரிங்கு 60.92 மீ., தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். இரண்டு முறை பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் தேவேந்திரா ஜஜாரியா நான்காவது இடம் பெற்றார்.
4.தரவுகளைக் கையாளும் ஆளுமைக்காக தமிழ்நாடு மின்னாளுகை முகமையுடன் (TneGA) எந்த IIT ஒப்பந்தம் செய்துள்ளது?


[A] ஐஐடி பம்பாய்
[B] ஐஐடி சென்னை
[C] ஐஐடி இந்தூர்
[D] ஐஐடி கான்பூர்
ü  தமிழ்நாடு மின்னாளுகை முகமை (TneGA) உடன் ஐஐடி சென்னை செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ராபர்ட் பாஷ் (Robert Bosch) தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் ஆனது மாநில அரசின் பல்வேறு வகையான தகவல்களுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்துள்ளது. மாநில அரசின் பல்வேறு அமைப்புகளான கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்டவற்றுடன் இம்மையம் ஒருங்கிணைந்து செயல்படும்.
ü  இதன் மூலம் குறிப்பிட்ட திட்டங்களின் தரவுகளை மேம்படுத்தி, திறன் வாய்ந்த முடிவுகள் எடுக்க, ஆழமான உள்பார்வை அளிக்க வகை செய்யும். இதற்காக சம்பந்தப்பட்ட துறை மாணவர்களுக்கு தரவு அறிவியல் மற்றும் ICT ஆகியவற்றில் பயிலரங்குகள் நடத்தப்படும். TneGA என்பது மாநில அரசின் அனைத்து மின்னாளுகை திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும், அவற்றை இயக்குவதற்கும் தகவல் தொழினுட்ப துறையின் கீழியங்கும் அரசின் மைய நிறுவனமாகும்.


5.2022 இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள ஆப்பிரிக்க நாடு எது?
[A] செனகல்
[B] நைஜீரியா
[C] மொராக்கோ
[D] கென்யா
ü  2022 ஆம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை ஆப்பிரிக்க செனகல் நடத்தவுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. ‘தாகர் 2022’ என பெயரிடப்பட்டுள்ள யூத் ஒலிம்பிக் போட்டியானது தாகர், புதிய நகரம் தியாம்நதியோ, மற்றும் கடற்கரை நகரம் சால் ஆகிய மூன்று இடங்களில் நடந்தப்படவுள்ளது. வறண்ட பருவகாலத்தின் இறுதியில் ஏற்படும் வெப்பமண்டல நோய்களின் தாக்கத்தை பெரிதும் குறைப்பதற்காக மே அல்லது ஜூன் மாதங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
ü  200-க்கும் மேற்பட்ட நாடுகளிளைச் சேர்ந்த 15-18 வயதிற்குட்பட்ட ஆயிரக்கணக்கான தடகள வீரர்கள் வழக்கமாக கோடைக்காலங்களில் விளையாடப்படும் பூப்பந்து, குத்துச்சண்டை, வாள் சண்டை, டேபிள் டென்னிஸ், ரக்பி போன்ற 40-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
6.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தின் 17 ஆவது CHG நடைபெற்ற இடம் எது?


[A] துசான்பே
[B] சோச்சி
[C] புது தில்லி
[D] மாஸ்கோ
ü  17 ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இரண்டு நாள் கவுன்சில் கூட்டம், அக்.11-12 ஆகிய தேதிகளில் தஜிகிஸ்தானில் உள்ள துசான்பேவில் நடைபெற்றது. இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்றார். இது SCO உறுப்புநாடுகள் மற்றும் பார்வையாளர்களான ஆப்கானிஸ்தான், ஈரான், பெலாரசு & மங்கோலியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு உதவுகிறது.
ü  இவ்வமைப்பின் தலைவராக கிர்கிஸ்தான் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது. தலைவர்கள் SCO’வின் விரிவாக்கத்திற்கான வாய்ப்பைப்பற்றி விவாதித்தனர், தற்போதைய சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். 2017 ஜூனில் இந்த அமைப்பில் முழு உறுப்பினராக இந்தியா இடம்பெற்றபிறகு, நடைபெறும் 2 ஆவது கூட்டம் இதுவாகும். கடந்த ஆண்டு ரஷ்யாவின் சோச்சியில் இம்மாநாடு நடந்தது.


7. ‘நீலப்புரட்சி: ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மீன்வளத்துறைகளின் மேலாண்மை’ என்ற புதிய திட்டத்தை தொடங்கவுள்ள மாநில அரசு எது?
[A] கோவா
[B] அருணாச்சலப்பிரதேசம்
[C] மகாராஷ்டிரா
[D] மேகாலயா
ü   ‘நீலப்புரட்சி: ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மீன்வளத்துறைகளின் மேலாண்மை’ என்ற புதிய திட்டத்தை மேகாலயா மாநில அரசு வரும் 26 அன்று தொடங்கவுள்ளது. மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர்கள் பொருளாதார செழிப்பை அடைவதற்காகவும், உயிரி–பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் அக்கறையை கருத்தில் கொண்டு நீர் வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு பங்களிப்பதற்காகவும் இந்த நீலப்புரட்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ü  நீலப்புரட்சியின் கீழ், 1000 ஹெக்டேர் நிலத்தில் புதிய குளங்களை அரசு உருவாக்கும். இந்தத் திட்டத்திற்கு ரூ.51 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.


8.ஏர் ஏசியா இந்தியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரி & மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
[A] தீரஜ் ஷர்மா
[B] சுனில் பாஸ்கரன்
[C] வர்ஷா ஜெயின்
[D] ராதிகா ஜா
ü  ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநராக டாடா குழுமத்தைச் சேர்ந்த சுனில் பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 15 ஆம் தேதி, சுனில் பாஸ்கரன் இப்புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார். நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து அவர் மேற்பார்வை செய்வார்.
ü  டாடா எஃகு நிறுவனத்தின் துணைத்தலைவராக தற்போது பணிபுரிந்து வரும் பாஸ்கரனுக்கு டாடா குழுமத்துடனான உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் 30 ஆண்டு கால அனுபவம் உள்ளது. ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான சந்தை மதிப்பையும், 19 விமானங்களையும் கொண்டுள்ளது.
9.விண்வெளி அறிவியலுக்காக சதீஷ் தவான் மையம் ஒன்றை அமைப்பதற்கு, எந்த மாநில பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தத்தில் ISRO கையெழுத்திட்டுள்ளது?


[A] அசாம்
[B] ஒடிசா
[C] ஜம்மு
[D] மேற்கு வங்கம்
ü  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது இருப்பை இந்தியாவின் வடகோடி மாநிலம் வரை விரிவுபடுத்தும் நோக்கோடு, விண்வெளி அறிவியலுக்காக சதீஷ் தவான் மையம் ஒன்றை அமைப்பதற்கு, மத்திய ஜம்மு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 1150 சதுர மீட்டரில் இந்த மையம் அமைக்கப்படவுள்ளது. இது இயற்கை வளங்களை நீடித்த முறையில் பயன்படுத்தவும், நிலப்பயன்பாடு திட்டமிடலுக்கும் உதவும் புவியிடஞ்சார்ந்த தரவு (Geospatial Data) பகுப்பாய்வைக் கொண்டிருக்கும்.
ü  வளிமண்டல ஆய்வுகளுக்கான தரையமை ஆய்வகங்கள், வட இந்தியாவின் ஆறுகளில் பருவ காலங்களில் உருவாகும் பனிக்கட்டி மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றில் சேமிக்கப்படும் நீரின் சிறந்த பயன்பாட்டிற்கான ஆய்வுகளுக்காக வளிமண்டல உணர்திறன் மற்றும் பனிக்கட்டி ஆய்வகங்களையும் இது கொண்டிருக்கும்.
ü  இது தவிர, வெள்ளம், நிலச்சரிவு, காட்டுத்தீ, வறட்சி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு பேரிடர்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இங்கு பேரிடர் மேலாண்மை மையமும் அமைக்கப்படவுள்ளது.10.இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம், அசாமின் நீமட்டியிலிருந்து எதுவரை ரோ – ரோ சேவையை தொடங்கியுள்ளது?


[A] ஜோர்கட்
[B] திப்ருகார்
[C] மாஜூலி
[D] தேஸ்பூர்
ü  அக்.11 அன்று இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் (IWAI) அசாமின் நீமட்டியிலிருந்து மாஜூலி தீவு வரையிலும் ரோ – ரோ சேவையை (Roll onRoll off (RoRo) தொடங்கியுள்ளது. நீமட்டியிலிருந்து மாஜூலி தீவு வரை தேஸ்பூர் பாலம் வழியாக சரக்குந்தில் செல்ல சுமார் 423 கி.மீ., ஆகும். அதனை வெறும் 12.7 கி.மீ., தூரமாக இந்த ஆற்றுவழிப் பாதை குறைத்துள்ளது. இந்தப் புதிய சேவைக்காக, MV புபென் ஹசாரிகா என்ற புதிய கப்பலை ரூ.9.46 கோடி செலவில் IWAI வாங்கியுள்ளது.
ü  46.50 மீ., நீளமும், 13.30 மீ., அகலமும் கொண்ட இக்கப்பல் 8 சரக்குந்தையும், 100 பயணியரையும் சுமந்துகொண்டு மணிக்கு 22 கிமீ வேகத்தில் செல்லும் திறன்கொண்டது. பிரம்மபுத்திரா ஆற்றில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஆற்றுத்தீவுகளில் மாஜூலி தீவும் ஒன்றாகும். இதில் 1,50,000 மக்கள் வசிக்கின்றனர். 144 கிராமங்களை இது கொண்டுள்ளது. IWAI மற்றும் அசாம் அரசுக்கு இடையேயான ஒத்துழைப்பிள் இந்த ரோ – ரோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்
ü  சென்னையின் முதலாவது அடுக்குதள பேருந்து நிலையம், மாதவரத்தில் திறக்கப்பட்டது. 8 ஏக்கர் நிலப்பரப்பில், பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
ü  கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர், புரட்சித்தலைவர் Dr. எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ü  நெய்வேலியில் இயங்கிவரும் மத்திய பொதுத்துறை நிறுவனமான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 36 ஆவது தலைவராக அந்நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர் ராகேஷ்குமார் பொறுப்பேற்றுள்ளார்.
ü  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பர்கூர் கால்நடை ஆராய்ச்சி நிலையத்திற்கு மத்திய அரசின் ‘தேசிய காமதேனு விருது – 2018’ மற்றும் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
ü  ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை, சிட்னி தமிழ் இலக்கியக்கலை மன்றம் சார்பில் அனைத்துலகச் சிலப்பதிகார ஆய்வு மாநாடு அண்மையில் நடைபெற்றது.No comments:

Post a Comment