தமிழ் நடப்பு நிகழ்வுகள்
Tamil Current Affairs 14th October 2018
|
[A] ஜெனீவா
[B] பாரிஸ்
[C] நியூயார்க்
[D] பெர்லின்
ü
ஐ.நா.
மனித உரிமைகள் ஆணையத்தின் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள 18 உறுப்பு நாடுகளில் ஒன்றாக 188 நாடுகளின்
ஆதரவுடன் இந்தியா மீண்டும் அதன் உறுப்பினராகியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள்
ஆணையத்தில் 2019 ஜனவரி தொடங்கி 2021 டிசம்பர் இறுதி வரை,
அதாவது மூன்றாண்டுகள் வரை இந்தியா உறுப்புநாடாக
இருக்கும்.
ü
இந்தியாவை
தொடர்ந்து ஃபிஜி (187), வங்கதேசம் (178), பஹ்ரைன் மற்றும் பிலிப்பைன்ஸ் (165) ஆகிய நாடுகள் உள்ளன. UNHRC’ன் தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது.
உலகில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக இது
உருவாக்கப்பட்டது.
|
[A] தமிழ்நாடு
[B] ஒடிசா
[C] கர்நாடகா
[D] கேரளா
ü
அக்.13 அன்று, கர்நாடகாவின் சிக்மங்களூருவில் உள்ள லால்பாக்
தோட்டத்திலிருந்து ‘The Coffee Day Malnad
Ultra Marathon 2018’ கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வு
50 கி.மீ., 80 கி.மீ., மற்றும் 110 கி.மீ., என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 22 இந்திய மாநிலங்களில் இருந்தும், 13 நாடுகளிலிருந்தும்
சுமார் 811 போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
ü
UK,
போலந்து, பிரான்ஸ், அமெரிக்கா, மாலத்தீவுகள்,
ஜெர்மனி, ஆஸ்திரேலியா,
கனடா, பெல்ஜியம், சிங்கப்பூர், கொலம்பியா, ஜப்பான், மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 43
போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். அதிகபட்சமாக அமெரிக்காவிலிருந்து 7 போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
|
[A] கூகுள்
[B] மைக்ரோசாப்ட்
[C] இன்ஃபோசிஸ்
[D] ஃபேஸ்புக்
ü
விவசாயம்,
சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள சவால்களை
எதிர்கொள்வதற்காக அத்துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் பயன்பாட்டை கொண்டுவருவதற்கு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான
ஒப்பந்தத்தில் NITI ஆயோக் கையெழுத்திட்டுள்ளது. இந்த
ஒப்பந்தத்தின்படி, மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு, ஆராய்ச்சி
மற்றும் நேரடி நிபுணத்துவத்தை இணைத்து NITI ஆயோக்கின் புதிய
முயற்சிகளுக்கு ஆதரவு தரும்.
ü
மேலும்
இதன்கீழ் விவசாய ஆலோசனை சேவைகள், முதன்மை சுகாதார மையங்களில் சுகாதார பிரித்தறிதல் மாதிரிகள்
போன்ற மேம்பட்ட AI அடிப்படையிலான
தீர்வுகளை NITI ஆயோக்கிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும்.
4.எந்த நகரத்தில், இந்தியாவின் முதல் இந்தியா – இஸ்ரேல் கண்டுபிடிப்பு மையம் (India-Israel
Innovation Centre – IIIC) தொடங்கப்பட்டுள்ளது?
|
[B] புது தில்லி
[C] புனே
[D] சென்னை
ü
இந்தியாவின்
முதலாவது தொழில்முனைவு தொழில்நுட்ப மையமான இந்தியா – இஸ்ரேல் கண்டுபிடிப்பு மையம்
(IIIC), அக்.10
அன்று பெங்களூருவில்
நடந்த 3 ஆவது IoT இந்திய
மாநாட்டில் தொடங்கப்பட்டது. இசுரேலிய நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதிக்க உதவும்
இந்நடவடிக்கை, இவ்விரு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கிடையே கூட்டு முயற்சிகளை
உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ü
தொழில்முனைவு,
விற்பனையாளர்களுடனான கூட்டுறவு,
வழிகாட்டல் மற்றும் முறைசாரா சமூக மேம்பாடு,
தொழினுட்பம்,
முதலீட்டாளர்கள் மற்றும்
வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு சூழலை இது வழங்கும். இம்மையத்தை அடல் புத்தாக்கக
திட்டத்தின் (AIM) திட்ட
இயக்குநர் ரமணன் ராமநாதன் தொடங்கிவைத்தார்.
|
[A] மீனா கந்தசாமி
[B] V பட்டாபி ராம்
[C] கிரண் தேசாய்
[D] J K ரமா
ü
மறைந்த
அனுமோலு ராமகிருஷ்ணாவின் ‘Building a Legacy’ என்ற தலைப்பிலான வாழ்க்கை வரலாற்று நூலை பட்டய கணக்காளர் V பட்டாபி ராம் எழுதியுள்ளார். அண்மையில் துணைக் குடியரசுத்தலைவர் வெங்கைய நாயுடு
இதனை வெளியிட்டார். L&T நிறுவனத்தின் முன்னாள் தலைவரும்,
மேலாண்மை இயக்குநருமான ராமகிருஷ்ணனுக்கு, 2014 ஆம் ஆண்டில்
அவர் மறைந்த பிறகு ‘பத்மபூஷன்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
ü
திருமலை
வரிசை வளாகம், ஹைடெக் நகரம் மற்றும் நேரு உள்விளையாட்டு அரங்கம் போன்ற பல கட்டமைப்புகளுக்கு
அவர் கருவியாக இருந்துள்ளார். 1939 ஆம் ஆண்டு டிசம்பரில் பிறந்த இவர், 2013 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் 20 அன்று ஹைதராபாத்தில் காலமானார்.
6.நோர்வேஜிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன்
ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையில் கையெழுத்திட்டுள்ள ஐஐடி நிறுவனம் எது?
|
[B] ஐஐடி
கரக்பூர்
[C] ஐஐடி சென்னை
[D] ஐஐடி பாம்பே
ü
அக்.11
அன்று புது தில்லியில் இரண்டு கல்வி நிறுவனங்களுக்கிடையே ஆராய்ச்சி மற்றும் கல்வி
ஆகியவற்றில் ஒத்துழைப்பு வழங்குவதற்கான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கரக்பூர்
ஐஐடி நிறுவனமும், நோர்வேஜிய அறிவியல் & தொழில்நுட்ப பல்கலையும் கையெழுத்திட்டன.
இப்பல்கலைக்கழகம் நீர்மின்னாற்றல், பெருங்கடல் ஒப்புருவாக்கம், ஆழ்கடல் வளங்கள் மற்றும்
கடல்சார் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்ததாகும்.
ü
பெருங்கடல்
பொறியியல் மற்றும் கப்பல் கட்டுமானக்கலை துறை, பெருங்கடல்,
ஆறுகள், வளிமண்டலம் மற்றும் நில அறிவியல் மையம்,
குடிமுறைப் பொறியியல் ஆகிய மூன்று துறைகள் மற்றும் மையங்களை கரக்பூர் ஐஐடி தன்னகத்தே
கொண்டுள்ளது. கரக்பூர் ஐஐடி & நோர்வேஜிய பல்கலை ஆகிய இரண்டும் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம்,
சமூக அறிவியல் மற்றும் நுண்கலைகள் போன்றவற்றுக்கான கல்வி மற்றும்
ஆராய்ச்சி திட்டங்களை கொண்டுள்ளன.
|
[A] பஞ்சாப்
[B] ராஜஸ்தான்
[C] சிக்கிம்
[D] கேரளா
ü
இயற்கை
விவசாயத்தில் உலகின் முன்னோடி மாநிலமாக விளங்கி வரும்,
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தை 100% இயற்கை
வேளாண்மை நடைபெறும் மாநிலமாக அறிவித்து ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு ‘எதிர்கால
கொள்கை – 2018’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.
ü
சிக்கிம்
மாநிலத்தின் அனைத்து பண்ணை நிலங்களும், இயற்கை வேளாண்மைக்கான சான்று பெற்றுள்ளன. இம்மாநில
மக்கள் வேதி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் விவசாயம் செய்து
வருகின்றனர். வேதி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் உற்பத்தி மற்றும்
விற்பனைக்கு அம்மாநில அரசு முற்றாக தடை விதித்துள்ளது. சிக்கிம் மாநில அரசின் இம்முயற்சியால்
66000 விவசாயிகள்
பயன் பெற்றுள்ளதுடன், சுற்றுலாவும் விரிவடைந்துள்ளது.
ü
கடந்த
2014 முதல் 2017
ஆம் ஆண்டு வரை சிக்கிமில் சுற்றுலா
பயணிகளின் எண்ணிக்கை 50% வரை அதிகரித்துள்ளது. இந்த விருதுக்கு 51 நாடுகள் போட்டியிட்டன. பிரேசில், டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் தங்களது இயற்கை விவசாயக் கொள்கைகளுக்காக வெள்ளி
விருதுகளை பெற்றன. ‘சிறந்த கொள்கைகளுக்கான ஆஸ்கர்’ எனப் பெயரிடப்பட்ட இவ்விருதை FAO உடன் இணைந்து உலக எதிர்கால மன்றமும், IFOAM வழங்கியுள்ளன.
|
[A] 135 ஆவது
[B] 125 ஆவது
[C] 115 ஆவது
[D] 145 ஆவது
ü
உலக
வங்கி அண்மையில் அதன் முதலாவது மனிதகுல மூலதன குறியீட்டை வெளியிட்டது. இது குழந்தை
இறப்பு, சுகாதாரம்
மற்றும் கல்வி போன்ற அளவுருக்கள் மீது 157 பொருளாதாரங்களை மதிப்பிட்டது. இதில்
இந்தியா 0.44 மதிப்பெண் பெற்று 115 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இது தெற்காசியாவிற்கான சராசரியையும் விடக்
குறைவானது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், உலக வங்கியின் இந்தக் குறியீட்டை
புறக்கணிப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ü
இந்தியாவின்
அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவை முறையே 106, 102 மற்றும் 74 ஆவது என்ற சிறப்பான இடங்களைப் பெற்றுள்ளன.
சிங்கப்பூர் அதன் உலகளாவிய சுகாதார அமைப்பு, கல்வி, தேர்வுகள், முடிவுகள் மற்றும் ஆயுட்கால எதிர்பார்ப்பு
புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் மதிப்பிடலுக்குப் பின்னர் முதலிடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து
தென்கொரியா, ஜப்பான்,
ஹாங்காங் & பின்லாந்து ஆகிய நாடுகள்
உள்ளன.
9.அண்மையில் காலமான அன்னபூர்ணா தேவி, எவ்வகை ஹிந்துஸ்தானி
இசைக்கலைஞர் ஆவார்?
|
[B] கிரானா வகை
[C] குவாலியர் வகை
[D] மைகார்
வகை
ü
புகழ்பெற்ற
மைகார் வகை ஹிந்துஸ்தானி இசைக்கலைஞரான அன்னபூர்ணா தேவி (91),
அக்.13 அன்று மும்பையில் காலமானார்.
|
[A] மேற்கு வங்கம்
[B] அசாம்
[C] உத்தரகாண்ட்
[D] ஒடிசா
ü
தேசிய
பங்குச்சந்தை நிறுவனம் சமீபத்தில் உத்தரகாண்ட் மாநில அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறு, சிறு
மற்றும் நடுத்தர தொழிற்துறைகளுக்கு மூலதனம் வழங்குவதற்கும்,
மாநிலத்தில் அத்தகைய நிறுவனங்களின் வளர்ச்சியை
அதிகரிப்பதற்கும் உதவும்.
ü
குறு,
சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளை மாநிலத்தில் வளர்த்தெடுப்பதில் பங்குச் சந்தை
நிறுவனம் முக்கியப்பங்கு வகிக்கும். ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அந்நியச்
செலாவணி, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியளிப்பு வாய்ப்புகளை அதிகரிக்கும்
அரசின் முயற்சிகளை பங்குச்சந்தை ஆதரிக்கிறது.
No comments:
Post a Comment