தமிழ் நடப்பு நிகழ்வுகள்
Tamil Current Affairs 22nd 23rd October 2018
[A] கொச்சி
[B] சென்னை
[C] கொல்கத்தா
[D] புது
தில்லி
ü
வரும்
டிச.12 & 13 ஆகிய தேதிகளில் இந்திய அரசு 4 ஆவது உலகளாவிய பங்குதாரர்கள்
கருத்துக் களத்தை புது தில்லியில் நடத்தவுள்ளது. தனித்துவமிக்க இந்தக் கருத்துக்களம்
தாய், பச்சிளம் குழந்தை
மற்றும் குழந்தை நலன்களுக்கான கூட்டாண்மையின் (Partnership
for Maternal, New born
& Child Health – PMNCH) அர்ப்பணிக்கப்பட்ட 1000+ பங்காளர்களை ஒருங்கிணைக்கிறது.
இதனை சுகாதார மற்றும் குடும்ப நலன் அமைச்சகமும், PMNCH’யும் இணைந்து நடத்துகின்றன.
|
[A] சுரேஷ்
மாத்தூர்
[B] இஞ்செட்டி ஸ்ரீனிவாஸ்
[C] வினோத் பால்
[D] ராகேஷ் ஸ்ரீவஸ்தவா
ü
இந்தியக்
காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையானது (IRDAI) தவணைகளில் பொது மற்றும் சுகாதார
காப்பீட்டு கேட்புத்தொகைகளை செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஒரு
குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு, IRDAI’ன் செயற்குழு
உறுப்பினர் (சுகாதாரம்) சுரேஷ் மாத்தூர் தலைமையில் இருக்கும்.
ü
தனிப்பட்ட
விபத்து மற்றும் பயன் அடிப்படையிலான சுகாதார காப்பீட்டு கேட்புத்தொகைகளை தவணைகளில்
செலுத்த அனுமதிக்கப்பட வேண்டிய தேவையை இந்தக் குழு ஆராயும்.
|
[A] 1943
[B] 1942
[C] 1940
[D] 1941
ü
1943
ஆம் ஆண்டு அக்.21 அன்று, ‘ஆசாத் ஹிந்த்’ என்னும் நாடு கடந்த இந்திய அரசாங்கத்தை நேதாஜி சுபாஷ் சந்திர
போஸ் உருவாக்கினார். அவரே இந்த இடைக்கால இந்திய அரசின் தலைவராகவும் இருந்தார். பிரிட்டிஷ்
ஆட்சியில் இருந்து இந்தியாவை விடுதலை செய்வதற்காக அனைத்து முக்கிய ஆற்றல்களுடன்
இணைந்து செயல்படும் நோக்குடன், 1940 காலங்களில் இந்தியாவிற்கு வெளியில் தோன்றிய சுதந்திர
இயக்கத்தின் ஒரு பகுதியாக இது இருந்தது.
ü
இந்தியாவின்
விடுதலைப் போராட்டத்திற்கு மிகவும் தேவையான உத்வேகத்தை அளிப்பதில் இந்திய தேசிய
இராணுவத்தின் பாத்திரம் முக்கியத்துவத்தை கொண்டிருந்தது. அண்மையில் இதன் 75 ஆவது ஆண்டு நிறைவுவிழா, அக்.21 அன்று தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
4.எந்த மாநிலத்தில், நடப்பாண்டு விஸ்வ சாந்தி அகிம்சை சம்மேளனம்
தொடங்கப்பட்டது?
|
[B] மகாராஷ்டிரா
[C] குஜராத்
[D] உத்தரப்பிரதேசம்
ü
குடியரசுத்தலைவர்
ராம்நாத் கோவிந்த் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் மங்கி துங்கி என்ற
இடத்தில் விஸ்வ சாந்தி அகிம்சை சம்மேளனத்தை அக்.22 அன்று தொடங்கிவைத்தார். உலக அமைதி மற்றும் அகிம்சை மாநாடு
என்றழைக்கப்படும் இது, பகவான் ரிஷபதேவ் மூர்த்தி நிர்மான் சமிதி மூலம் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
ü
உ.பி
மாநிலம் மொராதாபாத் நகரத்தில் உள்ள தீர்தங்கர் மகாவீர் பல்கலைக்கு முதலாவது பகவான்
ரிஷபதேவ் விருதையும் குடியரசுத்தலைவர் வழங்குவார். ரூ. 11 லட்சம் ரொக்கப்பரிசு, நினைவுப்பரிசை
உள்ளடக்கிய இவ்விருதை அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சரேஷ் ஜெயின் பெற்றுக்கொள்வார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத், ‘சர்வோகா திகம்பர ஜெயின் பிரதிமா’
என்ற ஒரு நூலையும் அப்போது வெளியிடுவார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இம்மாநாட்டில் பங்கேற்பார்கள்
என எதிர்பார்க்கப்படுகிறது.
|
[A] தீபக் உன்னிகிருஷ்ணன்
[B] ஆஞ்சல் மல்கோத்ரா
[C] சுஜாதா
கித்லா
[D] சனம் மேஹர்
ü
“Ants Among Elephant: An Untouchable Family And The Making
Of Modern India” என்ற நூலுக்காக இந்திய – அமெரிக்க எழுத்தாளர் சுஜாதா
கித்லா, நடப்பாண்டின் ‘சக்தி பட் முதல் நூல்’ பரிசை பெற்றுள்ளார். இந்நூல், நவீன
இந்தியாவில் ‘தீண்டத்தகாத’ குடும்பத்தில் பிறந்து வளர்வதுபற்றி விவரிக்கிறது.
வெற்றியாளர் ரூ.2 லட்சம் ரொக்கமும், ஒரு கோப்பையும்
பெறுவார். இதற்கான நிதியை சக்தி பட் அறக்கட்டளை வழங்குகிறது. 2008 ஆம் ஆண்டில்
இளம் எழுத்தாளர் சக்தியின் நினைவாக இப்பரிசு உருவாக்கப்பட்டது.
|
[A] லக்னோ
[B] காந்தி
நகர்
[C] ஜெய்ப்பூர்
[D] புது தில்லி
ü
27 ஆவது
IAEA அணுப்பிணைவு
ஆற்றல் மாநாடு, அக்.22 அன்று குஜராத் மாநிலம் காந்தி நகரில் தொடங்கியது. இந்த மூன்று
நாள் நிகழ்வு சர்வதேச அணுசக்தி முகமையால் ஏற்பாடு செய்யப்பட்டு, அணு ஆற்றல் துறை &
காந்திநகரில் உள்ள அயனிம ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.
ü
புதிய
முன்னுரிமைகள் மூலம் வடிவமைக்கப்பட்ட தேசிய மற்றும் பன்னாட்டு அணுப்பிணைவு ஆற்றல் சோதனைகளின்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முயற்சிகளின் முடிவுகளை பகிர்ந்துகொள் –வதற்கான ஒரு தளத்தை
வழங்குவதே இம்மாநாட்டின் நோக்கமாகும். அணுப்பிணைவு ஆற்றல் துறை எதிர்கொள்ளும்
புதிய சவால்கள் குறித்து துறைசார் வல்லுநர்கள் இதில் விவாதிப்பார்கள்.
|
[A] விக்ரம் உசேநதி
[B] கிரித் சோமையா
[C] ராதேஷ்யம்
பிஸ்வாஸ்
[D] சந்தோஷ்
குமார்
ü
பா.ஜ.க
நாடாளுமன்ற உறுப்பினர் கிரித் சோமையா தலைமையிலான தொழிலாளர் சார்பான நாடாளுமன்ற
நிலைக்குழு, ஓய்வூதிய
நிதியமைப்பான தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) செயல்பாட்டை ஆய்வுசெய்யும். மேலும் அதன்
பாதுகாப்பு மற்றும் நிலுவைத் தொகை மீட்டெடுப்பு ஆகியவற்றை ஆராயும்.
ü
இது
தொழிலாளர் சட்டங்கள், சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்புரி திட்டங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது
குறித்தும் ஆய்வுசெய்யும். சுரங்க தொழிலாளர்களின் பணிச்சூழல் மற்றும் நலன்கள்
குறித்தும், சுரங்கபாதுகாப்பு தலைமை இயக்குநரகத்தின் பணி முறையையும் இந்தக் குழு
ஆய்வுசெய்யும்.
8.வாடிக்கையாளர்களுக்காக விரிவான சொத்து வணிக சேவைகளை
(Wealth Business Services) அறிமுகப்படுத்தும்
இந்தியாவின் முதல் பொதுத்துறை வங்கி எது?
|
[B] பஞ்சாப் தேசிய வங்கி
[C] பரோடா வங்கி
[D] தேனா வங்கி
ü
SBI, வாடிக்கையாளர்களுக்காக
விரிவான சொத்து வணிக சேவைகளை அறிமுகப்படுத்தும் இந்தியாவின் முதல் பொதுத்துறை
வங்கியாகும். மங்களூரில் உள்ள லால்பாக் கிளையில் SBI தலைவர் ராஜ்னிஷ் குமார் இச்சேவையை தொடங்கிவைத்தார். SBI தனது சொத்து வணிகத்தின் பெயரை ‘SBI Wealth’ என பெயர்
மாற்றம் செய்துள்ளது. இது, உயர் நிகர மதிப்புடைய தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு உறவுசார்
மேலாளர்களின் ஒரு பிரத்யேக குழுவின் மூலம் சிறந்த தனிப்பயனாக்கப்பட்ட வங்கியியல் மற்றும்
முதலீட்டு சேவைகளை வழங்கிவருகிறது.
|
[A] தோலில்
பூசப்படும் களிம்பு (A Skin Gel)
[B] பூச்சிக்கொல்லி
[C] மிக வலுவான நானோ பொருள்
[D] குளிர்விப்பான்
ü
மிகப்
பொதுவான பூச்சிக்கொல்லி மருந்துகளில் பயன்படுத்தப்படும் கரிம பாஸ்பரஸ் சேர்மங்கள் (Organophosphorous) போன்ற உடல்நலனில் மோசமான
விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் சில சமயங்களில் அதுமாதிரியான பூச்சிக்கொல்லியை
கையாளும் விவசாயிகளுக்கு மரணத்தைக் கூட தருவிக்கும் ஆபத்தான இவ்வகை சேர்மங்கள்,
தோலினால் உறிஞ்சப்படுவதில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக, அண்மையில் இந்திய
ஆராய்ச்சியாளர்கள் “பாலி–ஆக்சைம்” என்ற புதிய தோலில் பூசப்படும் களிம்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
ü
இந்த
“பாலி–ஆக்சைம்”, கரிம பாஸ்பரசுகளை செயலிழக்கச் செய்யும் ஒரு வினையூக்கி (Catalyst) போன்று செயல்படும். இந்தக் களிம்பை
பெங்களூரில் உள்ள முதல்நிலை உயிரணு அறிவியல் மற்றும் மீட்டாக்க மருத்துவ நிறுவனத்தின்
(InStem) ஆராய்ச்சியாளர்கள் ஒரு நியூக்ளியோபிலிக் பாலிமரைகொண்டு
உருவாக்கியுள்ளனர்.
ü
Dr. பிரவீன்
குமார் வெமுலா தலைமையிலான 13 உறுப்பினர்கள் கொண்ட குழு, இரசாயண
முறையில் மாற்றம் செய்யப்பட்ட சிடோசனால் செய்யப்பட்ட “பாலி-ஆக்சைம்” களிம்பை உருவாக்கி
காப்புரிமை பெற்றுள்ளது. இந்த சிடோசான் (Chitosan) கடல்நண்டு,
நண்டுகள் மற்றும் இறால்கள் போன்ற வெளி ஓடுடைய
உயிரினங்களின் ஓடுகளில் காணப்படுகிறது.
10. “Nehru and Bose: Parallel Lives” என்னும்
நூலின் ஆசிரியர் யார்?
|
[B] சுமித் சர்கார்
[C] ருத்ரங்ஷு
முகர்ஜி
[D] உமா சக்ரவர்த்தி
ü
“Nehru and Bose:
Parallel Lives” என்னும் நூலை ருத்ரங்ஷு முகர்ஜி எழுதியுள்ளார்.
நவீன இந்தியாவை வரையறுத்த சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகிய 2
முரண்பட்ட பிரபலங்களின் கதையை இந்த நூல் விவரிக்கிறது.
ü
இந்திய
விடுதலையின் பின்னணியில் இருவரின் வளர்ச்சிகளையும், அரசியல் நகர்வுகளையும் இது
காட்டுகிறது. காந்தி தனது அரசியல் வாரிசாக நேருவை தெரிவு செய்ததையும், போசை வேண்டா
மகனாக அவர் நினைத்ததையும் இந்நூல் கூறுகிறது.
தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்
ü
தமிழ்நாடு
அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையானது,
பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர்
தலைமையில் 10 பேர்கொண்ட துணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
o இந்தத் துணைக்குழுவானது முல்லைப் பெரியாறு
அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர்பிடிப்பு
பகுதிகளில் பெய்யும் மழையளவு அணை திறந்து விடப்படும்போது மேற்கொள்ள வேண்டிய
பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கிறது. இந்தக் குழுவின்
தலைவராக பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாளரும், துணைத்தலைவராக தேனி மாவட்ட ஆட்சியரும்
இருப்பார்கள்.
ü
‘பயிற்றாசிரியர் – 365’ என்ற புதிய மின்னணு கற்றல்
பகுப்பாய்வு மென்பொருளை திருச்சியில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு அதன் தலைமை கல்வி
அதிகாரி தொடங்கிவைத்துள்ளார்.
ü
மதுரை
விமான நிலையத்தில் இணையம் மூலம் நுழைவாணை பெறுவதற்கான ‘e-Visa’ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இவ்வகைச்
சேவையைப் பெறும் தமிழ்நாட்டின் நான்காவது விமான நிலையமும், இந்தியாவின் 26 ஆவது விமான நிலையமுமாக இது உள்ளது.
ü
அர்ஜெண்டினாவின்
பியூனஸ் ஏர்சில் நடந்த இளையோர் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான மும்முறை தாண்டல் போட்டியில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த தடகள வீரர் பிரவீன் சித்ரவேல் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
ü
திருச்சிராப்பள்ளி
அருகே உத்தமசீலியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வின்போது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறைக் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அதில் மகிசாசுரமர்த்தினி என்ற பெண் கடவுளின் உருவம் மிகச்சிறிய அளவில்
பொறிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment