Tamil Current Affairs 24th October 2018


Tamil Current Affairs 24th October 2018
1.பின்வருவனவற்றுள் இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் எது?
[A] துருவ்
[B] ஆங்ரியா (Angriya)
[C] பாரி
[D] தரங்கிணி
ü  இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பலான ‘ஆங்ரியா’, அக்.20 அன்று தனது சேவையை தொடங்கியது. மும்பை மற்றும் கோவா இடையே பயணிக்கவுள்ள இந்தக்கப்பல், வாரந்தோறும் 4 முறை இயக்கப்படவுள்ளது. ஒரு நபருக்கான பயணச்சீட்டு விலை ரூ. 7000 முதல் ரூ. 12000 ஆகும். சாதாரண அறைகள் முதல் ஆடம்பரமான அறைகள் என 8 விதங்களில் மொத்தம் 104 அறைகள் இக்கப்பலில் உள்ளன. ஒரேநேரத்தில் சுமார் 399 பேர் இதில் பயணிக்க முடியும்.
ü  நாட்டின் முதலாவது கப்பல் படைத்தளபதியான சர்கேல் கங்கோஜி ஆங்ரேவின் நினைவாக ‘ஆங்ரியா’ என இக்கப்பலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.


2.பிராண்ட் பைனான்சின் நடப்பாண்டு தேசிய பிராண்ட் அறிக்கையின்படி, மதிப்புமிக்க தேசிய பிராண்ட் பட்டியலில் இந்தியாவின் தரநிலை என்ன?
[A] 8ஆவது
[B] 9ஆவது
[C] 7ஆவது
[D] 6ஆவது
ü  அண்மையில் பிராண்ட் பைனான்ஸ் நிறுவனம்  வெளியிட்டுள்ள உலக நாடுகளின் பிராண்ட் மதிப்பு குறித்த நடப்பாண்டு ‘தேசிய பிராண்ட்’ பட்டியலில், இந்தியா 9ஆவது இடத்தில் உள்ளது. 2016ஆம் ஆண்டு இந்தியாவின் பிராண்ட் மதிப்பு $2,046 பில்லியன் டாலராக இருந்து வந்த நிலையில் 2018ஆம் ஆண்டு 5% உயர்ந்து $2159 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்தியாவின் பிராண்ட் மதிப்பு ‘AA' ஆக உள்ளது.
ü  இப்பட்டியலில் அமெரிக்காவின் பிராண்ட் மதிப்பு 23% உயர்ந்து $25899 பில்லியன் டாலர்களாக உள்ளது. சீனாவின் பிராண்ட் மதிப்பு 25% உயர்ந்து $12779 பில்லியன் டாலர் மதிப்புடன் 2ஆம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து, ஜெர்மனி ($5147 பில்லியன்), இங்கிலாந்து ($3750 பில்லியன்), ஜப்பான் ($3598 பில்லியன்) மற்றும் பிரான்ஸ் ($3224 பில்லியன்) ஆகிய நாடுகள் உள்ளன.
ü  உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை மதிப்பிடுவதற்காக ராயல்டி நிவாரண முறையை (Royalty Relief) அடிப்படையாகக்கொண்ட ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி 100 முன்னணி நாடுகளின் தேசிய வர்த்தகங்களின் வலிமையையும் மதிப்பையும் பிராண்ட் பைனான்ஸ் அளவிட்டுள்ளது.


3.பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியமைக்கான 19ஆவது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
[A] பாலி S. நரிமன்
[B] பிந்தேஸ்வர் பதக்
[C] DK ஸ்ரீவஸ்தவா
[D] அஜித் தோவல்
ü  அக்.22 அன்று புகழ்பெற்ற நீதிபதி பாலி S. நரிமன், நடப்பாண்டு பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியமைக்கான 19ஆவது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதுடன் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் M. வெங்கைய நாயுடுவால் கௌரவிக்கப்பட்டார். 1995ஆம் ஆண்டில் லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மை நிறுவனத்தின் பொது நிர்வாகம், கல்வியாளர்கள் மற்றும் மேலாண்மை துறை ஆகியவற்றால் இந்த விருது நிறுவப்பட்டது.
ü  மரியாதைக்குரிய மற்றும் புகழ்பெற்ற இந்திய வணிகத் தலைவர், மேலாண்மை பயிற்சியாளர், பொது நிர்வாகி, கல்வியாளர் அல்லது கல்வி நிறுவனருக்கு அவரது தொடர்ச்சியான தனிப்பட்ட பங்களிப்பிற்கு மதிப்பளிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.
4.சித்வே துறைமுகம், எந்த நாட்டில் அமைந்துள்ளது?


[A] இலங்கை
[B] மியான்மர்
[C] இந்தியா
[D] வங்காளம்
ü  சித்வே துறைமுகமானது மியான்மரின் ராகினி மாநிலத்திலுள்ள சித்வேவில் பாயும் காலதன் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள ஓர்ஆழ்கடல் துறைமுகமாகும். இது 2016ஆம் ஆண்டு இந்தியாவால் கட்டப்பட்டது. சித்வே துறைமுகத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புக்கு தனியார் இயக்கிகளை நியமிப்பது, பலேத்வா உள்நாட்டு நீர் முனையம் மற்றும் இந்தியாவின் கிழக்கு நோக்கி செயல்படுதல் கொள்கையை அமல்படுத்தும் விதமாக அது தொடர்புடைய காலதன் பன்மாதிரி இடைவழி போக்குவரத்து திட்டம் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் இந்தியா மற்றும் மியான்மருக்கு இடையே கையெழுத்தானது.
ü  இதன் மூலம் உள்நாட்டு வேலைவாய்ப்புகள் பெருமளவில் பெருகும். சித்வே துறைமுகமானது இந்தியாவின் வடகிழக்கு பகுதியையும் வங்கக்டலையும் மிசோரம் வழியாக இணைக்கிறது. இது கொல்கத்தாவுக்கு ஒரு மாற்று வழியையும் வழங்குகிறது.


5.இந்தியாவின் கடலோரப் பகுதிவாழ் மக்களின் பாதுகாப்பிற்காக அண்மையில் $43.4 மில்லியன் டாலர் நிதியை வழங்க ஒப்புக்கொண்ட பசுமை பருவநிலை நிதியத்தை எந்த ஐ.நா அமைப்பு ஆதரிக்கிறது?
[A] UNHCR
[B] WHO
[C] UNCTAD
[D] UNDP
ü  காலநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் வாழும் இந்திய கடலோரப் பகுதி வாழ் சமூக மக்களின் பாதுகாப்பிற்காக அக்.21 அன்று, ஐ.நா. ஆதரவுடன் பசுமை பருவநிலை நிதியமானது $43.4 மில்லியனை வழங்க ஒப்புக்கொண்டது.
ü  பஹ்ரைன் தலைநகரம் மனாமாவில் நடந்த பசுமை பருவநிலை நிதியத்தின் 21ஆவது கூட்டத்தின்போது வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு உதவும் விதமாக, 19 புதிய திட்டங்களுக்கு $1 பில்லியன் மதிப்பிலான நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன் ஒருபகுதியாக இந்நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

6.அண்மையில் எந்தத் தேதியில், தேசிய காவல்துறை நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது?
[A] அக்டோபர் 22
[B] அக்டோபர் 21
[C] அக்டோபர் 24
[D] அக்டோபர் 23
ü  நாடு முழுவதும் காவல்துறை நினைவு தினம் அக்.21 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதே நாளில் 1959 ஆம் ஆண்டு சீனாவுடனான எல்லையைப் பாதுகாக்க 10 காவலர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இதுதவிர, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் அமைதியையும் பாதுகாப்பதில் சுதந்திரமடைந்த பிறகு 34,844 காவலர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். நடப்பாண்டில் மட்டும் 424 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
ü  பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கெளரவிக்கும் வகையில், சுபாஷ் சந்திர போஸ் பெயரில் விருது ஒன்றையும் பிரதமர் அறிவித்துள்ளார். பேரிடர் காலத்தில் மக்களின் உயிரை காப்பாற்றுவதில் வீரதீரத்துடன் செயல்படுபவர்களை கெளரவிக்க ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்படும். மேலும், தேசிய காவல் நினைவகத்தையும் அவர் திறந்துவைத்தார்.


7.நடப்பாண்டு விஜய் ஹசாரே கோப்பையை வென்ற கிரிக்கெட் அணி எது?
[A] மும்பை
[B] தில்லி
[C] பீகார்
[D] கொல்கத்தா
ü  பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பை போட்டியில், மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்தி 11 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது. இது அவர்களின் மூன்றாவது சாம்பியன் பட்டமாகும். மும்பை அணி இறுதியாக கடந்த 2006-07ஆம் ஆண்டில் ராஜஸ்தானை தோற்கடித்து விஜய் ஹசாரே கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
8.ஜப்பான் உயிரியலாளர் ஒசாமு சிமுமோரா அண்மையில் காலமானார். எதனை கண்டறிந் –ததற்காக 2008ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசை அவர் வென்றார்?


[A] பசுமை ஒளிரும் புரதம்
[B] குவாசி படிகங்கள்
[C] கிரையோ – மின்னணு நுண்ணோக்கி
[D] யுபிகுவிதின் – நடுத்தர புரத சீரழிவு
ü  பசுமை ஒளிரும் புரதத்தை கண்டறிந்தமைக்காக 2008ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற ஜப்பானிய கடல்சார் உயிரியலாளர் ஒசாமு சிமுமோரா (90), அக்.19 அன்று நாகசாகியில் காலமானார்.


9.எந்த நாடு, உலகின் மிக நீண்ட கடல் பாலத்தை திறந்துள்ளது?
[A] ரஷ்யா
[B] சீனா
[C] இந்தோனேசியா
[D] ஜப்பான்
ü  உலகின் மிக நீண்ட கடல் பாலத்தை சீனா அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது. இது சீனத்தின் சூஹாய் நகரத்தையும் ஹாங்காங்கின் மக்கா நகரத்தையும் இணைக்கிறது. சீன உற்பத்தித் துறையின் மையமான பேர்ல் ஆற்றின் கழிமுகம் வழியாக கப்பல்கள் கடந்துசெல்வதற்கு வசதியாக கடலுக்கடியில் ஒரு சுரங்கப்பாதையையும் இந்தப் பாலம் கொண்டுள்ளது.
ü  34 மைல் நீளங்கொண்ட இப்பாலம், சீனப்பெருநிலத்தையும், பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்து 1997இல் மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஹாங்காங்கையும் இணைக்கிறது. இப்பாலம் பயன்பாட்டிற்கு வருவதன் மூலமாக சீனா – ஹாங்காங் இடையேயான பயணநேரம், 4 மணியிலிருந்து 30 நிமிடங்களாக குறையும். ‘கிரேட்டர் வளைகுடா’ என்ற அழைக்கப்படும் இந்த பிராந்தியத்திற்கான சீன வளர்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாக இந்தப் பாலம் கருதப்படுகிறது.
ü  சுமார் 68 மில்லியன் மக்களை இணைக்கும் இந்தப் பாலம், சுற்றுலாப் பயணிகளுக்கு வரப் பிரசாதமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டமைப்பதற்காக சுமார் $20 பில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டுள்ளது.
10. 2018 காமரூனிய அதிபர் தேர்தலில் வென்றவர் யார்?


[A] தியான் கூட்
[B] கிளமெண்ட் அடங்கனா
[C] மாரிஸ் கம்டோ
[D] பால் பியா (Paul Biya)
ü  அண்மையில் ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான காமரூன் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில், பால் பியா (85) 71.3% வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சி வேட்பாளர் கம்டோ வெறும் 14% வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியடைந்தார். இதன் மூலம் தொடர்ந்து 7ஆவது முறையாக பால் பியா கேமரூன் நாட்டின் அதிபராக பதவியேற்க உள்ளார்.
ü  கடந்த 1975ஆம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பால் பியா, 1982 ஆம் ஆண்டில் முதல் முறையாக காமரூன் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின், பியா தொடர்ந்து 36 ஆண்டுகள் அந்நாட்டின் அதிபராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்
ü  திருச்சியில் 2.5 MW சூரிய ஒளி மின்னாற்றல் பூங்கா அமைக்க பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் ஒப்புதல் கிடைத்துள்ளது. பஞ்சப்பூரில் 15 ஏக்கர் நிலம் தகுதியானது என கண்டறியப்பட்டுள்ளது.
ü  சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் சீரமைப்பு ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை, ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகேசில் பல்கலை, குளோபல் கேர் அமைப்பு சார்பில், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான CleanUp 3 நாள் சர்வதேச மாநாடு கோயம்புத்தூரில் அக்.22 அன்று தொடங்கியது.
ü  உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் 2ஆவது மாநாடு சென்னையில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 23-24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
ü  2016ஆம் ஆண்டு டிசம்பரில் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்காவின் வண்ணத்துப்பூச்சி பூங்கா பராமரிப்பு பணிகள் முடிவடைந்தநிலையில் பார்வையாளர்களுக்காக அக்.21 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.No comments:

Post a Comment