தமிழ் நடப்பு நிகழ்வுகள்
Tamil Current Affairs 26th October 2018
1. “Impactful Policy Research in Social Sciences (IMPRESS)” திட்டத்தின் செயல்பாட்டு நிறுவனம் எது?
[A] TRAI
[B] NDMA
[C] ICSSR
[D] ICCR
ü
அக்.25 அன்று
புது தில்லியில், நாட்டில் சூழல்மண்டல ஆராய்ச்சியை வலுப்படுத்துவதற்காக,
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,
“Impactful Policy Research in
Social Sciences (IMPRESS)” திட்டத்துக்கான வலைத்தளத்தை தொடங்கிவைத்தார்.
நிர்வாகம் மற்றும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக அறிவியல் ஆராய்ச்சி
திட்டங்களை அடையாளங்கண்டு அவற்றுக்கு நிதியுதவி அளிப்பதே இந்த IMPRESS திட்டத்தின் நோக்கமாகும்.
ü
அனைத்து
பல்கலைக்கழகங்கள் (மத்திய மற்றும் மாநிலங்கள்), UGCஆல் 12 (B) தகுதிநிலை
வழங்கப்பட்ட தனியார் நிறுவனங்களை உள்ளடக்கிய நாட்டின் எந்தவொரு நிறுவனத்தை சேர்ந்த
சமூக அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் இது வாய்ப்பளிக்கும். 2021 மார்ச் வரை இத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.414
கோடியாகும். இந்திய சமூக அறிவியல் ஆய்வுக்கழகம் (ICSSR) இத்திட்ட
அமலாக்க நிறுவனமாகும். இதன் கீழ் ஆய்வுப்பணி 2019
ஜனவரி முதல் தொடங்கும்.
|
[A] புது
தில்லி
[B] ஜெய்ப்பூர்
[C] கொச்சின்
[D] திருவனந்தபுரம்
ü
அக்.24 அன்று புது தில்லியில், “Connecting
Farmers to Market” என்ற கருப்பொருளுடன் 11ஆவது
உலக வேளாண் தலைமைத்துவ உச்சிமாநாடு நடைபெற்றது. கொள்கை சீர்திருத்தம் மற்றும்
கூட்டு முயற்சி மூலம் இந்திய விவசாயிகளுக்கு சிறந்த சந்தை மாதிரிகள் மற்றும்
இணைப்புகளை வழங்குவதற்காக தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளின் நிலை மற்றும் வெற்றிகர
மாதிரிகள் குறித்து விவாதிப்பதே இந்த 2 நாள் உச்சிமாநாட்டின் நோக்கமாகும். இதில், விவசாய அமைச்சர் சோமிரெட்டி சந்திரமோகன்
ரெட்டி, முதலமைச்சர் N. சந்திரபாபு
நாயுடு சார்பில் ‘கொள்கை தலைமைத்துவம்’ பிரிவில் உலக வேளாண் தலைமைத்துவ விருதை பெற்றுக்கொண்டார்.
ü
விவசாயிகள்
மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு பணியாற்றிய தனிநபர் அல்லது அமைப்புகளின்
முயற்சிகளை அங்கீகரிக்கும் பொருட்டு, 2008ஆம் ஆண்டு வேளாண் தலைமைத்துவ விருதுகள் உருவாக்கப்பட்டன. இந்திய வேளாண்
அறிவியலறிஞர் பேராசிரியர் MS சுவாமிநாதன், இந்த விருதுகள் வழங்கும் நடுவர் குழுவின் தலைவராவார்.
|
[A] துர்க்மேனிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான்
[B] ஈரான், பாகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான்
[C] பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஈரான்
[D] இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான்
ü
சாபகார்
ஒப்பந்தத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இந்தியா,
ஆப்கானிஸ்தான்,
ஈரான், இடையே தெஹ்ரானில் நடந்தது. இந்தியத் தரப்புக்கு,
பொருளாதார உறவுகள் துறை செயலாளர் TS திருமூர்த்தி தலைமையேற்றிருந்தார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் குழுவினருக்கு அந்த நாடுகளின் துணை போக்குவரத்து அமைச்சர்கள்
தலைமையேற்றிருந்தனர்.
ü
தெஹ்ரான்
மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில்,
வளமிக்க ஈரானின் தெற்குக் கடற்கரையோரமாக
பயனளிக்கும் வகையில் அமைந்துள்ள சாபகார் துறைமுகம் குறித்த இந்தக் கூட்டம், முக்கியத்துவம்
வாய்ந்ததாக கருதப்படுகிறது. கூட்டத்தின் முடிவுகளை செயல்படுத்தும் குழு ஒன்றை
அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இக்குழுவின் கூட்டம் இன்னும் 2 மாதங்களில் சாபகார் துறைமுகத்தில் நடைபெறும்.
முத்தரப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்த கூட்டம் இந்தியாவில் அடுத்த ஆண்டு
நடைபெறும்.
ü
2016ஆம்
ஆண்டு மே மாதத்தில் இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான்
ஆகிய நாடுகளுக்கு இடையே சாபகார் ஒப்பந்தம் கையெழுத்தானது. பிராந்திய மையங்களில்
ஒன்றாக சாபகார் துறைமுகத்தைப் பயன்படுத்தி 3 நாடுகளுக்கிடையே
சரக்குப் போக்குவரத்து மற்றும் பெருவழிப் போக்குவரத்திற்கான பாதைகளை அமைப்பதற்காக
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தானில் உள்ள சீனாவால் கட்டப்பட்ட குவாடர் துறைமுகத்திலிருந்து
100 கடல்
மைல்களுக்கு அப்பால் சாபகார் துறைமுகம் அமைந்துள்ளது.
4.நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தேசிய சுட்டிக்காட்டும்
கட்டமைப்பை ஆய்வுசெய்யும் உயர்மட்ட வழிநடத்தும் குழுவின் தலைவர் யார்?
|
[B] நிதித்துறை செயலாளர்
[C] உள்துறை செயலாளர்
[D] தலைமை பொருளாதார ஆலோசகர்
ü
பிரதமர்
மோடி தலைமையில் புதுதில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நீடித்த
வளர்ச்சி இலக்குகள் குறித்து அவ்வப்போது மறு ஆய்வுசெய்யவும்,
மேம்படுத்தவும்,
தேசிய அளவில் சுட்டிக்காட்டும் கட்டமைப்பை
உருவாக்குவதற்கான உயர்மட்ட வழிகாட்டுதல் குழுவை ஏற்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தியாவின் தலைமை புள்ளியியலாளர் மற்றும் புள்ளிவிவரங்கள்,
திட்ட அமலாக்க மத்திய அமைச்சகத்தின்
செயலாளர் தலைமையில் இந்த உயர்மட்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுகிறது.
ü
தகவல்
விவர அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஆகியவை தகவல்கள் மற்றும் திட்ட அமலாக்க
அமைச்சகத்திற்கு அவ்வப்போது தகவல்களைத் தெரிவிக்கும். அதிநவீன தகவல் தொழினுட்பக்
கருவிகள் திறமையான கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும்.
|
[A] ஐ.நா கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது
[B] ஐ.நா
சாசனம் நடைமுறைக்கு வந்தது
[C] ஐ.நா பாதுகாப்பு அவை நிறுவப்பட்டது
[D] ஐ.நா பொதுச்சபைக்கான முதல் தேர்தல்
ü
ஐக்கிய
நாடுகளின் நோக்கங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும்
நோக்கோடு, ஒவ்வோர் ஆண்டும் அக்.24 அன்று ஐக்கிய நாடுகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா
சாசனத்தின் 73ஆவது ஆண்டு நிறைவையும் இந்நாள் குறிக்கிறது, இது 1945ஆம் ஆண்டில்
நடைமுறைக்கு வந்தது.
ü
ஐ.நா
என்பது சர்வதேச அளவில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பது, ஒழுங்கை உருவாக்குவது மற்றும் பராமரிப்பதை
நோக்கமாகக்கொண்ட அரசுகளுக்கிடையேயான ஓரமைப்பாகும். தேசங்களின் அணி இரண்டாம்
உலகப்போர் நடக்காமல் தடுக்கத் தவறியதால், 1945ஆம் ஆண்டு அக்.24 ஆம் தேதியில் ஐ.நா
உருவாக்கப்பட்டது. ஐ.நா.வின் தலைமையகம் நியூயார்க்கில் அமைந்துள்ளது.
|
[A] கெளகாத்தி
[B] புது
தில்லி
[C] புனே
[D] அகர்தலா
ü
மத்திய
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சர் மேனகா சஞ்சை காந்தி, அக்டோபர் 26 அன்று,
5ஆவது இந்திய பெண்கள் இயற்கை விழாவை (Women
of India Organic Festival) புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி
தேசிய மையத்தில் தொடங்கிவைத்தார்.
ü
இயற்கை
முறையில் விவசாயம் செய்யும் பெண்கள்
& தொழிற்முனைவோரை ஊக்கப்படுத்துவதே இவ்விழாவின் நோக்கமாகும். இந்தியாவின்
26 மாநிலங்களிலிருந்து 500-க்கும்
மேற்பட்ட பெண் தொழில்முனைவோர்கள் தங்களின் விவசாய உற்பத்திப் பொருட்களுடன் இவ்விழாவில்
கலந்து கொள்ளவுள்ளனர்.
|
[A] இந்தியா
[B] இலங்கை
[C] அமெரிக்கா
[D] இஸ்ரேல்
ü
புது
தில்லியில் அக்.25 அன்று
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், 2018 சர்வதேச ஆரிய மகா சம்மேளனத்தை
தொடங்கிவைத்தார். ஆரிய மகா சம்மேளனம் என்பது ஆரிய சமாஜிற்கு சாதி தொடர்பான பிரச்சனைகள்
மற்றும் சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவினரின் பிரச்சனைகள் குறித்த அதன்
கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு தரும் ஒரு தளமாக அமைந்துள்ளது.
ü
வேதத்திலிருந்து
தோன்றிய மக்கள் நலத்தின் செய்தியை பரப்புவதற்கும், உலகளவில் சகோதரத் –துவத்தை ஊக்குவிக்கவும்,
சமூக ஒழுக்கங்களை பாதுகாக்கப்படுவதை
உறுதிப்படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
8. SPARC (Scheme for Promotion of Academic and Research
Collaboration) திட்டத்தை செயல்படுத்தும் தேசிய ஒருங்கிணைப்பு
நிறுவனம் எது?
|
[B] ஐஐடி பாம்பே
[C] ஐஐடி மெட்ராஸ்
[D] ஐஐடி இந்தூர்
ü
அக்.25
அன்று, மத்திய மனிதவள
மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புது தில்லியில், (SPARC – Scheme for Promotion of Academic and Research
Collaboration – கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் கூட்டு
முயற்சியை ஊக்குவித்தல் திட்டத்திற்கான” வலைத்தளத்தை தொடங்கி வைத்தார். இந்திய
மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டு
முயற்சிகளுக்கு உதவுவதன் மூலம் இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி
சூழலை மேம்படுத்துவதே SPARC திட்டத்தின் நோக்கமாகும்.
ü
இந்தத்
திட்டத்தின் கீழ், 600 கூட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு 418 கோடி ரூபாய் நிதி வழங்கும்.
இத்திட்டத்தை செயல்படுத்தும் தேசிய ஒருங்கிணைப்பு நிறுவனம் ஐஐடி கரக்பூர் ஆகும்.
|
[A] சிகர் தவான்
[B] விராத்
கோலி
[C] ரோகித் சர்மா
[D] ரஷீத் கான்
ü
205
இன்னிங்சில் 10000 ஒரு நாள் சர்வதேச ரன்களை மிக விரைவாக எடுத்த கிரிக்கெட் வீரர் விராத்
கோலி ஆவார். 259 இன்னிங்சில்
இந்தச் சாதனையை புரிந்த சச்சினின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் அவர் இந்தச் சாதனையை புரிந்தார்.
10.அண்மையில் எத்தேதியில், உலக வளர்ச்சிக்கான தகவல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது?
|
[B] அக்டோபர் 25
[C] அக்டோபர் 26
[D] அக்டோபர் 23
ü
வளர்ச்சிக்கான
பிரச்சனைகளை நோக்கி உலகின் கவனத்தை ஈர்க்கவும் அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச
ஒத்துழைப்பை வலுப்படுத்துவதின் அவசியத்தையும் உணர்ந்துகொள்வத –ற்காக ஒவ்வோர்
ஆண்டும் அக்.24 அன்று உலக வளர்ச்சிக்கான தகவல் தினம் (Development
Information Day) கடைப்பிடிக்கப்படுகின்றது.
1972ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்பு நாள், ஐ.நா
தினத்துடன் இணைந்து கொண்டாடப்படுகிறது.
IEEE Final Year projects Project Centers in India are consistently sought after. Final Year Students Projects take a shot at them to improve their aptitudes, while specialists like the enjoyment in interfering with innovation. A IEEE Domain project Final Year Projects for CSE system development life cycle is essentially a phased project model that defines the organizational constraints of a large-scale systems project.
ReplyDeleteIT Company Employess Productivity usually increases when a company implements corporate training courses on latest technologies.
corporate training in chennai
It Companies need of Corporate training programme arises due to improvement in technology, need for getting better performance or as part of professional development. corporate training companies in chennai Corporate Training refers to a system of professional development activities provided to educate employees.
corporate training companies in india