Tamil Current Affairs 3rd October 2018


Tamil Current Affairs 3rd October 2018
1.எந்த நகரத்தில், இந்தியாவின் முதல் AICTE பயிற்சி மற்றும் கற்றல் அகாடமி (ATAL) அமைக்கப்படவுள்ளது?


[A] ஜெய்ப்பூர்
[B] திருவனந்தபுரம்
[C] பரோடா
[D] கெளகாத்தி
ü  இந்தியாவின் முதல் AICTE பயிற்சி மற்றும் கற்றல் அகாடமி (ATAL), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) மூலமாக ஜெய்ப்பூரில் நிறுவப்படவுள்ளது. தொழில்நுட்பக் கல்வியை மிகவும் பயனுள்ளதாகவும், பொறுப்புமிக்கதாகவும் மாற்றுவதற்கு, மேம்பட்ட கற்பித்தல் முறைகள் மற்றும் தொகுதிகளை அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியாக, 8 தொகுதிகளைக்கொண்ட பாடத்திட்டத்தில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் பயிற்சி மையங்களை AICTE நிறுவி வருகிறது.
ü  2019 ஆம் ஆண்டிலிருந்து புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி கட்டாயமாகும். ஏற்கனவே பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும், பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கும் உதவி ஆசிரியர்களுக்கும் இந்தப் பயிற்சி கட்டாயமாகும். ஜெய்ப்பூரைத் தவிர, பரோடா (குஜராத்), திருவனந்தபுரம் (கேரளா) & கெளகாத்தி (அசாம்) ஆகிய இடங்களில் 2019 ஆம் ஆண்டிற்குள் 3 கல்விக்கூடங்கள் அமைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளன.


2.பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு மீதான உயர்மட்டக் குழுவிற்கு தலைவர் யார்?
[A] ரஞ்சனா பிரகாஷ் தேசாய்
[B] இஞ்செட்டி ஸ்ரீநிவாஸ்
[C] அருந்ததி தாஸ்
[D] அமித் சாகர்
ü  ஏற்கனவேயுள்ள கட்டமைப்பு மற்றும் வழிகாட்டிகளை மீளாய்வு செய்யவும், நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுக்கு ஒத்திசைகின்ற கொள்கைகளுக்கான வழிகாட்டலை உருவாக்குவதற்கும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமானது சமீபத்தில், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு மீதான 11 பேர்கொண்ட உயர்மட்டக்குழுவை அமைத்தது.
ü  பெருநிறுவன விவகார செயலர் இஞ்செட்டி ஸ்ரீநிவாஸ் தலைமையிலான இக்குழு, பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள், திட்டங்கள், பெருந்திட்டங்களின் விளைவுகளை ஆய்வு செய்து, நிறுவனங்களின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வை திறம்பட கண்காணிக்கவும், மதிப்பீடு செய்வதற்குமான நடவடிக்கைகளை பரிந்துரை செய்யும். புதுமையான தீர்வுகள், பங்குதாரர்கள் மற்றும் சமூக தணிக்கையை இணைக்க தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவற்றிலும் பரிந்துரைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ü  நிறுவனங்கள் சட்டம் 2013-இன் படி, ரூ.500 கோடி நிகர மதிப்பு கொண்ட நிறுவனங்கள் அல்லது ரூ. 1000 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் அவர்களது லாப மதிப்பிலிருந்து 2 சதவீதத்தை இதற்கு செலவழிக்க வேண்டும். தவிர ரூ. 5 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருக்கும் நிறுவனங்க –ளும் கட்டாயமாக 2% தொகையை சமூக நடவடிக்கைகளுக்கு செலவிட வேண்டும் என்கிறது இச் சட்டம். 2014 ஏப்ரல் 01 முதல் இந்தச் சட்டம் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.
ü  இந்தியாவில், நிறுவனங்கள் சட்டம் பிரிவு 135’இன் கீழ், பல்வேறு சமூக திட்டங்களுக்கு 14,000 நிறுவனங்கள் செலவிடவேண்டும். நிறுவனங்கள் தங்கள் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியை செலவிடவேண்டிய நடவடிக்கைகளை வரையறுக்கும் சட்டத்தின் 7 ஆவது அட்டவணையை இக் குழு மீளாய்வு செய்யும்.


3.வங்கதேசத்தின் 47 ஆண்டுகால வரலாற்றில், முதல் பெண் படைத்துறைப் பணித்தலைவ –ராக (Major General) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
[A] நஸ்ரீன் ஜஹன்
[B] செலினா ஹொசைன்
[C] மோனிகா அலி
[D] சூசேன் கிட்டி (Susane Giti)
ü  வங்கதேசத்தின் 47 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் படைத்துறைப் பணித்தலைவராக சூசேன் கிட்டி நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 30 அன்று வங்கதேச ராணுவத் தளபதி அஜிஸ் அகமது மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் முகமது சாம்சுல் ஹக்கின் ஆகியோர் அவருக்கு மேஜர் ஜெனரல் தரவரிசைப் பட்டையை  வழங்கினர். தற்போது, ​​அவர் ஆயுதப்படைகள் மருத்துவக் கல்லூரி நோயியல் துறையின் தலைவராக உள்ளார்.
ü  உட்சேவை மக்கள் தொடர்பின்படி கிட்டி, 1986 ஆம் ஆண்டில் ஒரு தலைவராக வங்கதேசப் படைகளின் மருத்துவப்பிரிவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டில் ரத்தவியலில் FCPS பட்டம் பெற்ற முதல் பெண் இவராவார்.
4.சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் யார்?


[A] சசி செல்லையா
[B] சந்த் பனேசா
[C] கீதா கோபிநாத்
[D] குருசுவாமி ஜெயராமன்
ü  சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய தலைமைப் பொருளாதார நிபுணராக ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் கீதா கோபிநாத் (46) நியமிக்கப்பட்டுள்ளார். IMF அமைப்பின் தற்போதைய தலைமைப்பொருளாதார நிபுணர் மெளரி ஆப்ஸ்ஃபெல்ட், இந்த ஆண்டு இறுதியில் ஓய்வுபெறவுள்ளார். அதன் பிறகு கீதா கோபிநாத் பொறுப்பேற்பார். இதன் மூலம் இப்பொறுப்பை வகிக்கும் 2 ஆவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இப்பொறுப்பை வகித்துள்ளார்.
ü  தற்போது கீதா, ஹார்வர்ட் பல்கலையில் உள்ள சர்வதேச கல்வி மற்றும் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அமெரிக்க பொருளியல் பகுப்பாய்வு இதழ் இணை ஆசிரியராகவும், தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் சர்வதேச நிதி மற்றும் பெரு நிதி திட்டத்தில் இணை இயக்குநராகவும் உள்ளார். தற்போதைய சர்வதேச பொருளியல் கையேட்டின் இணை ஆசிரியராகவும் கீதா உள்ளார்.
ü  ஹார்வர்ட் பல்கலை வரலாற்றில் பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னுக்கு பிறகு நிரந்தர பேராசிரியராக நியமிக்கப்படும் இந்தியர் என்ற பெருமையும் உலக அளவில் மூன்றாவது பெண் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார்.


5.எந்த மாநிலத்தில், 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஊந்த் கடல்’ பாலம் அமைந்துள்ளது?
[A] பஞ்சாப்
[B] உத்தரப்பிரதேசம்
[C] ஹிமாச்சலப்பிரதேசம்
[D] ஜம்மு மற்றும் காஷ்மீர்
ü  ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள அழகிய தால் ஏரியின் மத்தியில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஊந்த் கடல் – Oonth Kadal’, முகலாய காலத்தை சேர்ந்த ஒரு வளைவு வடிவுடைய பாலமாகும். ஒட்டக முதுகின் கூன் வடிவிலான இந்தப்பாலத்தை பாதுகாப்பதற்காக சமீபத்தில், ஜெர்மானிய அரசாங்கம் ரூபாய் 32 லட்சத்தை வழங்கியுள்ளது.
ü  இந்தப் பாலத்தின் மறுசீரமைப்பு, உலகளாவிய கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக தால் ஏரிக்கு முக்கியத்துவத்தை அளிக்கும். 1670-களில் கட்டப்பட்ட இப்பாலம், UNESCO-வின் உலக பாரம்பரிய தளங்களின் தற்காலிக பட்டியலில் இடம்பெற்றுள்ளது.


6.அழுத்தப்பட்ட உயிரி வாயு பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு, எந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது?
[A] CBG-U
[B] SATAT
[C] STAAR
[D] AMOKSH
ü  மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புது தில்லியில் அக்டோபர் 1 அன்று போக்குவரத்து வாகனங்களுக்கான உயிரி எரிவாயு உற்பத்திக்கான ஆலைகளை அமைக்கும் SATAT (Sustainable Alternative Towards Affordable Transportation) என்ற புதியதிட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார். இந்தத் திட்டம் தொடர்பாக ஆர்வமுள்ள தொழில்முனைவோரிடம் இருந்து விருப்பங்களை கேட்டுப்பெறுமாறு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் (இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம்) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
ü  உயிரிவாயு என்பது கழிவுப்பொருட்கள் ஆக்சிஜன் கிடைக்காத நிலைமையில் உயிரியல் ரீதியில் சேதமாக்கப்படுவதன் மூலம் விளைவிக்கப்படும் வளியாகும். இது உயிர்க்கூற்றுப் பொருளில் இருந்து பிறப்பிக்கப்படுவதல் இது ஒரு உயிரி எரிபொருள் ஆகும்.
ü  உயிரிவாயு உயிரிமுறையில் சேதனமடையும் கூறுகளான உயிர்த்திணிவு, சேதனப்பசளை, நகரக்கழிவுகள், பசுந்தாட் பசளை முதலானவற்றின் காற்று இன்றிய நொதிப்பு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 95 சதவீதத்திற்கும் மேல் தூய மீத்தேன் இருக்கும். இது வணிகரீதியாக கிடைக்கக்கூடிய இயற்கை வாயுவை ஒத்திருக்கிறது. இதனால், இந்த நடவடிக்கை வாகன பயனாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் தொழில்முனைவோர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.

7.கிராமப் பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்தின் நாடு தழுவிய ஆராய்ச்சி நடவடிக்கை திட்டம் எந்த நகரத்திலிருந்து தொடங்கப்பட்டுள்ளது?
[A] ஆக்ரா
[B] புது தில்லி
[C] ஜெய்ப்பூர்
[D] குவாலியர்
ü  அக்.1 அன்று மத்தியப்பிரதேசத்தின் குவாலியரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கிராமப் பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்தின் நாடு தழுவிய ஆராய்ச்சி நடவடிக்கை திட்டத்தை தொடங்கிவைத்தார். நாட்டிலுள்ள கிராமப்புற பகுதிகளின் நீடித்த மற்றும் முழுமையான வளர்ச்சிக்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ü  அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, தற்போது நாட்டின் 19 மாநிலங்களில் உள்ள 467 கிராமப் பஞ்சாயத்துகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், சமுதாயத்தில் உள்ள ஏழைமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் மனிதவளத்தை அதிகரிக்கவும் சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் திறன் வளர்ச்சி, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு ஆகியவற்றை கூட்டாக மேம்படுத்துவதாகும்.
8.அண்மையில் காலமான பண்டிட் துளசிதாஸ் போர்கர், எந்த இசைக்கருவி வாசிப்பில் புகழ் மிக்கவராக இருந்தார்?


[A] ஆர்மோனியம்
[B] புல்லாங்குழல்
[C] வீணை
[D] வயலின்
ü  புகழ்மிக்க ஆர்மோனிய இசைக்கலைஞரான பண்டிட் துளசிதாஸ் போர்கர் (83), செப்.29 அன்று மும்பையில் காலமானார். இந்திய இசைக்கு இவரளித்த பங்களிப்புக்காக 2016 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி விருதினையும் இவர் பெற்றுள்ளார்.
9.ராஜஸ்தானுக்குப் பிறகு பசுக்களுக்கு என தனி அமைச்சகம் அமைக்கவுள்ள இரண்டாவது இந்திய மாநிலம் எது?


[A] உத்திரப்பிரதேசம்
[B] மத்தியப்பிரதேசம்
[C] குஜராத்
[D] ஜார்க்கண்ட்
ü  செப்.30 அன்று சத்தர்பூர் மாவட்டத்தில் கஜுராஹோவில் நடந்த ஒரு நிகழ்வில் பசுக்களை சிறந்த முறையில் பராமரிப்பதற்காக தனி அமைச்சகம் ஒன்றை மத்தியப்பிரதேச மாநில அரசு அமைக்க முடிவுசெய்தது. இதில் திகம்பர சமணத்துறவி வித்யாசாகர்ஜி மகாராஜ் கலந்துகொண்டார். இப் பசுநல அமைச்சகம், ஏற்கனவேயுள்ள மத்தியப்பிரதேச பசு பாதுகாப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு வாரியத்தை மாற்றாக இருக்கும், ஏனெனில் அது (வாரியம்) வரம்புகளைக் கொண்டுள்ளது.
ü  மத்தியப்பிரதேச அரசு இந்த முடிவை செயல்படுத்தினால், ராஜஸ்தான் மாநிலத்திற்குப் பிறகு பசுக்களுக்கென ஒரு தனி அமைச்சகத்தை அமைத்த இரண்டாவது இந்திய மாநிலமாக மாறும். முன்னதாக, அகர மால்வா மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவின் முதல் பசுக்கள் சரணாலயத்தை மத்தியப்பிரதேச அரசு திறந்துவைத்தது. 6000 பசுக்களை பராமரிக்கும் வசதியுடன், 472 ஹெக்டேர் பரப்பளவில் இந்தச் சரணாலயம் அமைந்துள்ளது.
ü  சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுடன் இந்த ஆண்டு மத்தியப்பிரதேச மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.


10.மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், இந்திய அணியின் கொடி ஏந்தி வரவுள்ளவர் யார்?
[A] மெஹூலி கோஷ்
[B] சௌரப் சௌத்ரி
[C] மனு பாகர்
[D] லக்ஷ்யா சேனா
ü  அக்.6 முதல் 18 ஆம் தேதி வரை அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏர்சில் நடைபெறவுள்ள 3 ஆவது இளையோர் ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணியின் கொடியை துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மனு பாகர் ஏந்திச்செல்லவுள்ளவர். கோவா ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் குருதத்தா D பக்தா, இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய தேசிய அணியின் தலைவராக (Chef-de-Mission) நியமிக்கப்பட்டுள்ளார்.
ü  அதிகபட்சமாக ஹாக்கி அணியில் 18 பேர் (தலா 9 வீரர், வீராங்கனைகள்) களமிறங்குகின்றனர். தவிர துப்பாக்கிசுடுதலில் (4), ரீகர்வ் வில்வித்தை (2), பாட்மிண்டன் (2), நீச்சல் (2), டேபிள் டென்னிஸ் (2), பளுதுாக்குதல் (2), மல்யுத்தம் (2), படகு ஓட்டல் (3) என வீரர்கள் பங்கேற்கின்றனர்.


            தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்
ü  இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு 2019 ஜனவரி 23, 24 ஆம் தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ü  மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, 2014-ம் ஆண்டு முதல் ‘தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது.
o   அந்த வகையில், 2017-18-ம் ஆண்டில் தூய்மை பள்ளிக்கான தேசிய அளவிலான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிலிருந்து தெரிவான ஆறு பள்ளிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேசிய தூய்மை பள்ளி விருதுகளையும், தேசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு தேசிய தூய்மை பள்ளி விருதுகள் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றதற்கான சான்றிதழையும் வழங்கினார்.
o   தேசிய அளவிலான தூய்மை பள்ளிக்கான விருது வழங்கப்பட்ட பள்ளிகள்:
§   கரூர் மாவட்டம் டி.செல்லாண்டிப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி.
§  தேனி மாவட்டம் கொம்பைதொழு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
§  சிவகங்கை மாவட்டம் எம்.ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
§  திருவள்ளூர் மாவட்டம் அரியப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
§  திண்டுக்கல் மாவட்டம் இ.ஆவாரம்பட்டி அரசு கே.ஆர். உயர்நிலைப்பள்ளி.
§  அரியலூர் மாவட்டம் சிலுவைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.No comments:

Post a Comment