தமிழ் நடப்பு நிகழ்வுகள்
Tamil Current Affairs 7th & 8th October 2018
1.ஈராண்டுக்கொருமுறை நடைபெறும் பத்தாவது “இந்தியா
கெம் – 2018” என்னும் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாடு, எந்த நகரத்தில்
நடைபெற்றது?
|
[B] புது தில்லி
[C] சென்னை
[D] கொல்கத்தா
ü
ஈராண்டுக்கொருமுறை
நடக்கும் “இந்தியா கெம் – 2018” என்னும் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டின் பத்தாவது
பதிப்பு, அக்டோபர்4-6 வரை
மும்பையில் நடைபெற்றது. இம்மாநாட்டை ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய வேதிகள் துறை,
உரங்கள் மற்றும்
ரசாயனங்கள் அமைச்சகம்,
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை
கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தின.
ü
இம்மாநாடு
உள்நாட்டளவிலும், பன்னாட்டளவிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு ஒரு தளத்தை வழங்கும் ரசாயண துறையின்
நீடித்த வளர்ச்சிக்கான அரசாங்க கொள்கையை வெளிக்காட்டும். இது ஆசிய – பசிபிக்
பிராந்தியத்தில் நடைபெறும் ரசாயணங்கள் மற்றும் பெட்ரோலிய வேதிகள் தொழிற்துறையின்
மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.
|
[A] 15 ஆவது
[B] 16 ஆவது
[C] 28 ஆவது
[D] 27 ஆவது
ü
விசா’வின் 2018 – மின்னணு முறையிலான
கட்டணம் செலுத்துதலை அரசு ஏற்றுக்கொள்ளும் தரவரிசையில் (Government e-Payment
Adoption Ranking – GEAR), 73 நாடுகளில் இந்தியா 28 ஆவது இடத்தில் உள்ளது. 2018 GEAR என்பது பொருளாதார அறிஞர்கள் நுண்ணறிவு அலகின் சர்வதேசத் தரவரிசையும், விசா’வால்
நியமிக்கப்பட்ட திறனளவிடல் ஆய்வுமாகும்.
ü
இது 2007
மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மூன்றாவது ஆய்வாகும். பல்வேறு
குறியீடுகளை அடிப்படையாகக்கொண்டு அரசாங்கங்களின் மின்னணு முறையிலான கட்டணம்
செலுத்துதல் திறனைக் கணக்கிடுவதன் மூலம் அரசுகளை இது வரிசைப்படுத்துகிறது. 73
நாடுகளின் தரவரிசையில் நார்வே முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரான்ஸ்
மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் உள்ளன.
|
[A] Valuing
teachers, improving their status
[B] A call for
teachers
[C] Teaching in
Freedom, Empowering Teachers
[D] The right to
education means the right to a qualified teacher
ü
உலகிலுள்ள
கல்வியாளர்களைப் பாராட்டி அவர்களை மதிப்பிட மற்றும் மேம்படுத்திட ஒவ்வோர் ஆண்டும்
அக்.5 ஆம் தேதி உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களின் மதிப்பு
தொடர்பான 1966 ஆம் ஆண்டு பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு / UNESCO பரிந்துரைகள் மீது கையெழுத்திட்டதின்
நினைவாக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ü
நிகழாண்டில்
வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “கல்விக்கான உரிமை என்பது தகுதிவாய்ந்த ஆசிரியர்கள்
உரிமை” என்பதாகும். மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனத்தின் 70’வது ஆண்டு நிறைவையும்
(1948) நினைவுகூரும் இந்நாள், பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள்
இல்லாமல் கல்விக்கான உரிமையைப் பெறமுடியாது என்றும் நினைவூட்டுகிறது.
4.இந்தியாவின் தலைமைப் புள்ளியியல் வல்லுநராக நியமிக்கப்பட்டுள்ளவர்
யார்?
|
[B] நிபுன் சிங்
[C] பிரவின்
ஸ்ரீவத்சவா
[D] மல்தீ சக்சேனா
ü
1983
ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த இந்திய புள்ளியியல் சேவை அதிகாரியான பிரவின் ஸ்ரீவத்சவா,
இந்தியாவின் புதிய தலைமைப் புள்ளியியல் வல்லுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த
நியமனம், அவரது ஓய்வுறுகாலம் (2020 ஆகஸ்ட் 31) வரையோ அல்லது அடுத்த உத்தரவுகள் வரும்
வரையோ நடைமுறையில் இருக்கும். அவர் பல்வேறு நிலைகளில் புள்ளியியல் துறை மற்றும்
சுகாதாரத் துறை அமைச்சகங்களில் பணிபுரிந்துள்ளார்.
ü
அவரது
35 ஆண்டுகால பணிவாழ்க்கையில், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்திலும் அவர் பணிபுரிந்துள்ளார்.
நவீன புள்ளிவிவர முறைக்கு அடித்தளமாக விளங்கிய ரங்கராஜன் ஆணையத்தின் செயலாளராகவும்
அவர் இருந்துள்ளார். தேசிய புள்ளிவிவர ஆணையம், அதன் பரிந்துரைகளின் கீழ், 2005 ஆம்
ஆண்டு அமைக்கப்பட்டது.
|
[A] அசாம்
[B] மணிப்பூர்
[C] ஹிமாச்சலப்பிரதேசம்
[D] ஜம்மு மற்றும் காஷ்மீர்
ü
அக்டோபர்
5 அன்று அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள நம்ரூப் மெத்தனால் ஆலையில்,
இந்தியாவின் முதல் ‘மெத்தனால் சமையல் எரிபொருள் திட்ட’த்தை பொதுத்துறை நிறுவனமான அசாம்
பெட்ரோ வேதியியல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் NITI
ஆயோக் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது.
ü
பாதுகாப்பு
மிக்க குப்பி அடிப்படையிலான இந்த சமையல் அடுப்புகள், சுவீட தொழில்நுட்பத்தில் இருந்து
வந்தவை. தொழில்நுட்ப பரிமாற்றத்தின் கீழ், மிகப்பெரிய அளவில் சமையல் அடுப்புகள்
உற்பத்தி செய்யும் ஆலை அடுத்த 18 மாதங்களுக்குள் இந்தியாவில் நிறுவப்படும்.
ü
அதன்பின்,
ஆண்டொன்றுக்கு 10 லட்சம்
அடுப்புகளும், 1 கோடி குப்பிகளும் அதில் உற்பத்தி செய்யப்படும்.
இந்த தொழில்நுட்பம் மிகவும் தனித்துவமானது, இது மெத்தனாலை மிகவும் பாதுகாப்பாக
கையாளுகிறது. இதற்கு சீரியக்கி அல்லது எந்தவொரு குழாய் அமைப்பும் தேவையில்லை. இந்த
அடுப்பை பெற்ற முதல் பெண்மணி ரீத்து போர்டோலி ஆவார்.
|
[A] TS விஜியன்
[B] நர்மதா கபூர்
[C] பங்கஜ்
சர்மா
[D] விஜய் சேத்
ü
ஜெனிவாவில்
நடைபெறவுள்ள ஐ.நா. ஆயுதக் குறைப்பு மாநாட்டிற்கான இந்தியத் தூதராகவும், நிரந்தர பிரதிநிதியாகவும்
பங்கஜ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின் கூட்டு செயலாளராக (ஆயுதக்
குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிரிவு) தற்பொழுது சர்மா உள்ளார். இவருக்கு
முன், அமந்தீப் கில் இப்பதவியில் இருந்தார்.
|
[A] ரஜ்னிஷ்
குமார்
[B] M K சர்மா
[C] கிரிஷ்
சதுர்வேதி
[D] விக்ரம் லிமாயே
ü
தேசிய
பங்குச்சந்தையின் (NSE)
மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான விக்ரம் லிமாயே, பணிக்குழு தலைவராகவும் (WoCo), உலக சந்தைகள் கூட்டமைப்பு (WFE) வாரியத்தின் இயக்குநராகவும்
நியமிக்கப்பட்டுள்ளார். ஏதென்சில் நடந்து வரும் இவ்வமைப்பின் 58 ஆவது பொதுக்கூட்டம்
மற்றும் ஆண்டுக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
ü
WFE என்பது
சந்தைகள் மற்றும் கட்டண பரிமாற்றக் கணக்குத் தீர்வகங்களின் சர்வதேச தொழிற் சங்கமாகும்.
இக்கூட்டமைப்பில் 45000 நிறுவனங்களுக்கும் மேல் உறுப்பினர்களாக உள்ளன. இதன்
தலைமையகம் லண்டனில் உள்ளது. இது சந்தையில் பங்கேற்கும் நிறுவனங்களுக்காக பயனுள்ள
விதிகள் மற்றும் தரநிலைகளை உருவாக்குவதற்காக உலகம் முழுவதும் உள்ள கொள்கை
வகுப்பாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
8.எந்த நகரத்தில், இந்தியப் பிராந்தியத்துக்கான
காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நடந்தது?
|
[B] சிம்லா
[C] இந்தூர்
[D] கெளகாத்தி
ü
அசாம்
தலைநகர் கெளகாத்தியில் இந்தியப் பிராந்தியத்திற்கான காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு
அக்.7 அன்று தொடங்கியது.
இம்மாநாட்டில் வடகிழக்குப் பகுதிக்கான அவைத் தலைவர் ஆராய்ச்சி முன்னோட்டத்தை
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தொடங்கிவைக்கிறார். 4 நாட்கள்
நடைபெறும் இந்த மாநாட்டில் பொருளாதாரம், திறன் மேம்பாடு மற்றும் போக்குவரத்து இணைப்பு ஆகியவை
குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
9.இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்த்துப்
போரிடுவதற்கான கூட்டு நடவடிக்கைகள் மற்றும் தகவல்கள் பகிரலை மேற்கொள்ள எந்தெந்த மாநில
காவற்துறைகள் முடிவுசெய்துள்ளன?
|
[B] சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா
[C] ஆந்திரப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர்
[D] ஒடிசா
மற்றும் ஆந்திரப்பிரதேசம்
ü
ஒடிசா
மற்றும் ஆந்திர காவல்துறையினர், அண்மையில் இருமாநிலங்களின் எல்லையில் நிலவி வரும்
இடதுசாரி தீவிரவாதத்தை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு, கூட்டு நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கும், தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும் முடிவுசெய்துள்ளனர். ஒடிசா DGP R P சர்மா,
ஆந்திரப்பிரதேச DGP R P தாகூர் மற்றும் மாவோயிச எதிர்ப்பு
நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாநிலங்களின் மற்ற மூத்த காவல்துறை அதிகாரிகள் ஆகியோர்
கலந்துகொண்ட புவனேஸ்வரில் நடந்த ஒரு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
ü
இத்திட்டத்தின்
நோக்கம், இடதுசாரி தீவிரவாத அச்சுறுத்தல்
நிறைந்த இடங்களில் குறிப்பாக மல்கங்கிரி
மாவட்டம் போன்ற முக்கியப் பகுதிகளில் கூட்டு நடவடிக்கைகளை நடத்துவதற்கு மாநிலங்களுக்கு
இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகும்.
|
[A] 6.7%
[B] 7.2%
[C] 6.5%
[D] 7.4%
ü
அக்.5 அன்று வெளியிடப்பட்ட 2018–2019 ஆம் நிதியாண்டிற்கான ரிசர்வ் வங்கியின் நான்காவது நிதிக்கொள்கை அறிக்கையில்,
நிதிக்கொள்கை ஆய்வில் வங்கிகளுக்கான வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி மாற்றம்
எதையும் செய்யவில்லை.
ü
இந்திய
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையிலான 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிக் கொள்கைக் குழு, வணிக
வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ‘ரெப்போ’
வட்டி விகிதம் பழைய நிலையிலேயே தொடரும் என
அறிவித்தது. இதையடுத்து, அந்த வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே இருக்கும். அதேபோன்று,
ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளிடமிருந்து
பெறும் கடனுக்கான ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதமும் 6.25 சதவீதமாகவே இருக்கும் என அறிவித்தது.
ü
மேலும்,
Marginal Standing Facility
விகிதம், வங்கி
வட்டி விகிதம் ஆகிய இரண்டும் 6.75 சதவீதமாக தொடரும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
வளர்ச்சி விகிதத்தில், 2018-19 ஆம் ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7.4% ஆக ரிசர்வ் வங்கி
தக்கவைத்துக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment