தமிழ் நடப்பு நிகழ்வுகள்
Tamil Current Affairs 9th October 2018
1.எந்நகரத்தில், “JIMEX – 18” என்னும் இந்தியா – ஜப்பான் இருதரப்பு கடல்சார் பயிற்சியானது
தொடங்கியுள்ளது?
|
[B] கொச்சி
[C] விசாகப்பட்டினம்
[D] அகர்தலா
ü
இந்தியா
மற்றும் ஜப்பான் கடற்படைகளுக்கு இடையிலான “JIMEX – 18” என்னும் போர்ப்பயிற்சி அக்.7 அன்று, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. 8 நாள் நடைபெறும் இந்தப் பயிற்சியின்
நோக்கம், இரு நாட்டு கடற்படைகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் சிறந்த நடைமுறைகளை
பரஸ்பரம் உள்வாங்கிக்கொள்ளுதலாகும்.
ü
ஜப்பானிய
கடற்படைத் துணைத்தலைவருக்கு அடுத்த நிலையிலுள்ள அதிகாரி தத்சுயா ஃபகுடா தலைமையிலான
ஜப்பானிய போர் கப்பல்கள், மூன்றாவது முறையாக நடக்கும் இக்கூட்டுப்போர் பயிற்சியில்
ஈடுபடுவுள்ளன. இந்தப் பயிற்சியில் இந்தியாவின் ஆயுதம் தாங்கிய போர் கப்பலான INS சாத்புரா,
நீர்மூழ்கி எதிர்ப்புத் திறன்கொண்ட INS கத்மாத் மற்றும் ஏவுகணைகளை செலுத்தும் INS
சக்தி உள்ளிட்ட போர் கப்பல்களும்,
உலங்குவானூர்திகளும் ஈடுபடுகின்றன.
|
[A] M S ஜோதி
[B] அனுபமா ராமச்சந்திரன்
[C] மானஸ்வினி சேகர்
[D] கீர்த்தனா
பாண்டியன்
ü
ரஷ்யாவின்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், சர்வதேச பில்லியார்ட்ஸ் & ஸ்னூக்கர் கூட்டமைப்பு
நடத்திய U–16 ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்
தொடரின் சிறுமியர்களுக்கான பிரிவில், இந்தியாவின் கீர்த்தனா, பெலாரசின் அல்பினா
லேசுக்கை, 3-1 என்ற
கணக்கில் வென்று சாம்பியனானார். இது சர்வதேச அளவில் கீர்த்தனா பாண்டியன் வெல்லும்
முதல் சாம்பியன் பட்டமாகும். இதேபோல சிறுவர்களுக்கான பிரிவில், பெல்ஜியத்தின் பென் மார்டென்ஸ் சாம்பியன்
பட்டம் வென்றார்.
3.2018 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், ‘தொடர்நாயகன்’
விருதைப்பெற்றவர் யார்?
|
[B] ஆயுஷ் பதோனி
[C] பிரப் சிம்ரன் சிங்
[D] யஷாஸ்வி
ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal)
ü
வங்கதேச
தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்
தொடரில், இந்திய அணி 144 ரன்கள்
வித்தியாசத்தில் இலங்கையை வென்று 6 ஆவது முறையாக சாம்பியன்
பட்டம் வென்றது. இந்திய தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (85), அனுஜ்
ரவாத் (57) நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்க, அணித்தலைவர் சிம்ரான்
சிங் (65*) மற்றும் பதோனி (52*) ஆகியோர் இந்திய அணி 300 ரன்களை கடக்க உதவினர். 50
ஓவரின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டு இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது.
ü
கடின
இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்க –ளையும் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை
தழுவியது. 144 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெற்ற இந்திய அணி சாம்பியன்
பட்டம் வென்றது. 6 விக்கெட் வீழ்த்திய ஹர்ஷ் தியாகி ‘ஆட்டநாயகனாக’ தேர்வானார். மூன்று
போட்டியில் 233 ரன்கள் குவித்த இந்தியாவின் ஜெய்ஸ்வால் ‘தொடர் நாயகனாக’ தேர்வுசெய்யப்பட்டார்.
4.அண்மையில் சஷக்த் கிசான் யோஜனா (SKY)
மற்றும் கிருஷி சமூஹ் யோஜனா (KSY)
என்ற திட்டங்களை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
|
[B] ஒடிசா
[C] பஞ்சாப்
[D] ஹரியானா
ü
அருணாச்சலப்பிரதேச
அரசு அண்மையில், முதலைமைச்சரின் சஷக்த் கிசான் யோஜனா (SKY) மற்றும் கிருஷி சமூஹ் யோஜனா (KSY)
என்ற திட்டங்களை இடாநகரில் தொடங்கியது. இந்த SKY திட்டம், முதலைமைச்சரின் வேலைவாய்ப்புத் திட்டம், வேளாண் – பொறிமயமாக்கல்
திட்டம் மற்றும் தேயிலை மற்றும் ரப்பர் திட்டம் என மூன்று மீச்சிறப்பு திட்டங்களை
உள்ளடக்கியுள்ளது. கூட்டுறவு அணுகுமுறையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது
KSY திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
|
[A] அசாம்
[B] ஒடிசா
[C] நாகலாந்து
[D] கேரளா
ü
மாநிலத்தில்
உள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளின் தொழில்நுட்பக் கல்விக்கு நிதியுதவி அளிப்பதற்காக
அண்மையில் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், ‘நிர்மான் குசுமா’ என்ற திட்டத்தை
அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்மூலம், ITI
பயிலும் மாணாக்கர் ஆண்டு ஒன்றுக்கு 23,600 ரூபாயும்,
பட்டயக்கல்வி பயிலும் மாணாக்கர் ஆண்டொன்றுக்கு 26,300 ரூபாயும்
நிதியுதவியாக பெறுவர்.
ü
இத்திட்டத்தின்
மூலம் மொத்தம் 1,878 மாணவர்கள் பயனடைவார்கள். இத்திட்டத்தின் மொத்த செலவீனம் சுமார் ரூ. 1.09
கோடி ஆகும். அது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
|
[A] புனீத் கண்ணா
[B] R N ரவி
[C] சமந்த் கோயல்
[D] V ஜோஹ்ரி
ü
கூட்டு
புலனாய்வுக்குழுவின் முன்னாள் தலைவரான R N
ரவி, புதிய தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்
நாகலாந்துக்கான தேசிய சோசலிச குழுவின் அரச பிரதிநிதியாகவும் செயல்படுகிறார். முன்னாள்
RAW தலைவர் ராஜிந்தர் கண்ணா, முன்னாள் தூதர் பங்கஜ் சரண் ஆகிய
இரு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர்களுக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித்
தோவாலுக்கு அறிக்கை தரும் மூன்றாவது தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக தற்போது R
N ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2012 ஆம்
ஆண்டில் புலனாய்வு செயலகத்தின் சிறப்பு இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றார்.
|
[A] பூரே லால் (Bhure Lal)
[B] அஜய் மாத்தூர்
[C] நவ்ரோஸ் K துபாஷ்
[D] அருணாபா கோஷ்
ü
தேசிய
தலைநகர் பகுதியிலுள்ள காற்று மாசுபாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாடு (தடுப்பு மற்றும்
கட்டுப்பாட்டு) ஆணையத்தை இந்திய அரசு மீளமைத்துள்ளது.
ü
கடந்த
ஆணையத்தின் பணிக்காலம், அக்.3 உடன் நிறைவடைந்தது. முன்னாள் செயலாளர் பூரே லால், மீளமைக்கப்பட்டுள்ள இந்த
மாசு கண்காணிப்புக் குழுவின் தலைவராக தொடருவார். சுற்றுச்சூழலின் தரத்தை பாதுகாப்பதும்,
மேம்படுத்துவதும் மற்றும் தேசிய தலைநகர்
பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பதும், கட்டுப்படுத்துவதும் இந்த ஆணையத்தின்
நோக்கமாகும்.
|
[A] கரிமா செளதாரி
[B] கல்பனா தௌதம்
[C] தபாபி
தேவி தங்ஜம்
[D] சுசிலா லிக்மபாம்
ü
அர்ஜென்டினாவில்
பியூனஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்றுவரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் ஜூடோ
44 கி.கி., எடைப்பிரிவில், ஆசிய கேடட் சாம்பியன் தபாபி தேவி தங்ஜம் வெள்ளிப்பதக்கம்
வென்றார். இதன்மூலம் இவர் ஒட்டுமொத்த ஒலிம்பிக் (சீனியர்,
இளையோர்) வரலாற்றில் ஜூடோ போட்டியில்
பதக்கம் வென்ற முதல் இந்தியரானார். முன்னதாக நடந்த துப்பாக்கிசுடுதலில்
ஆண்களுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ போட்டியில் இந்திய வீரர் துஷர் மானே 247.5
புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ü
இதில்
இந்தியா சார்பில் 13 விளையாட்டுகளில் 47 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக,
சீனாவின் நான்ஜிங் நகரில் 2014 ஆம் ஆண்டில்
நடந்த தொடரில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 2 பதக்கம் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
9.நிகழாண்டின் பொருளாதாரத்திற்கான நோபல்பரிசு பெற்றவர்கள்
யார்?
|
[B] வில்லியம்
நார்தாஸ் மற்றும் பால் ரோமர்
[C] டேனியல் கான்மேன் மற்றும் ரிச்சர்ட் H தாலேர்
[D] ஃப்ரைட்ரிச் ஹயேக் மற்றும் எலிநார் ஆஸ்டாம்
ü
நிகழாண்டுக்கான
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச்சேர்ந்த வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வில்லியம் நார்தாஸ் பருவநிலை மாற்றம் தொடர்புடைய பொருளாதார ஆய்வுகளுக்காக நோபல்பரிசைப்
பெறுகிறார். நீண்ட கால அடிப்படையிலான பொருளாதாரத்திற்கு உதவுவதற்கான
கண்டுபிடிப்புகளுக்காக பால் ரோமருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் வழங்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
ü
பைங்குடில்
வாயு உமிழ்வுகளால் ஏற்படும் சிக்கல்களுக்கான மிகச்சிறந்த தீர்வு,
அனைத்து நாடுகளிலும் சீரான முறையில் கரியமிலவாயு
வரியை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது என்பதை நார்தாசின் ஆராய்ச்சி
காட்டுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கும், பருவநிலைக்கும் உள்ள தொடர்புகளை விளக்கும் பொருளாதாரக்
கட்டமைப்பை முதல்முறையாக உருவாக்கித் தந்தவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள்
இருவருக்கும் 9 மில்லியன்
சுவீடிஷ் குரோனா ($1.3 மில்லியன்) பரிசுத்தொகையாக
வழங்கப்படும்.
|
[A] திரிபுரா
[B] நாகாலாந்து
[C] மிசோரம்
ü
‘நாகாலாந்து
காந்தி’ என அழைக்கப்பட்ட, காந்தியவாதி,
நட்வர் தக்கார் (86), கெளகாத்தியில் அக்.7
அன்று காலமானார். 1999 ஆம் ஆண்டில் அப்போது
குடியரசுத்தலைவராக இருந்த KR நாராயணன், இவருக்கு பத்மஸ்ரீ
விருது வழங்கி கெளரவித்தார்.
தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்
ü
தமிழ்நாட்டின்
அனைத்து மாவட்டங்களின் தலைமையகங்களிலும், காவல்துறை ஆணையர் அலுவலகங்களிலும் புதிய
கைரேகை அடையாளங்காணும் அமைப்பான FACTS 7.0 (Fingerprint Analysis and Criminal
Tracing System) என்ற அமைப்பு
நிறுவப்பட்டுள்ளது. இதனை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)
நிறுவம் உருவாக்கியுள்ளது.
ü
பாலியல்
வன்முறையில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த மற்றும் இதர குற்றச்சம்பவங்களில் பாதிக்கப் –பட்ட பெண்கள்,
அவர்களை சார்ந்தவர்களுக்கு இழப்பீடு
வழங்குவது தொடர்பாக, உச்சநீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
ü
சென்னையில்
புதிய தொழினுட்பத்துடன் கூடிய வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு (CFLOWS) என்பது சென்னை பெருநகர வெள்ள அபாய
மேலாண்மையில் சரியான நடவடிக்கை / முடிவுகள் மேற்கொள்ள உதவி புரியும் தொழினுட்பம்
ஆகும்.
o இவ்வமைப்பை தேசிய கடலோர ஆராய்ச்சி மையம்,
இந்திய தொழினுட்ப மையம் சென்னை,
இந்திய தொழில்நுட்ப மையம் மும்பை மற்றும்
அண்ணா பல்கலையின் தொலையுணர்வு நிறுவனம் (IRS) ஆகியவை கூட்டாக வடிவமைத்துள்ளன.
ü
பெரம்பூர்
ரயில்வே மருத்துவமனையின் சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டி,
2014 ஆம் ஆண்டுக்கான விருதை தேசியத்
தேர்வு வாரியம் வழங்கி கௌரவித்துள்ளது.
ü
சென்னையில்
ஒடிசா பவன் மாளிகையை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்தார். 22 கோடி ரூபாய் மதிப்பில்
கட்டப்பட்ட இந்த கட்டிடம், ஆறு தளங்களை கொண்டது. ஒடிசா மாநிலத்தில்
இருந்து வரும் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்கும் வகையில் பல்வேறு வசதிகள்
செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a comment