Current AffairsWinmeen Tamil News

3 முக்கிய ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு

3 முக்கிய ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு

இந்தியா முழுவதும் உள்ள மூன்று முக்கிய ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்வதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

முக்கிய தகவல்கள்:

புது தில்லி, அகமதாபாத் மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் (சிஎஸ்எம்டி) மும்பை ஆகிய மூன்று முக்கிய ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்வது தொடர்பான முன்மொழிவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மறுமேம்பாட்டு திட்டத்தின் ஒட்டுமொத்த முதலீடு கிட்டத்தட்ட ரூ.10,000 கோடி.

இதன் கீழ், இந்த நிலையங்கள் மேம்படுத்தப்பட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகளைப் பெறும்.

இந்த ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைப் நெறிப்படுத்துவதே மறுசீரமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

சூரிய ஆற்றல், நீர் பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சி, மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மூலம் இயற்கை சார்ந்த கட்டிட நுட்பங்களைப் பயன்படுத்தி நிலையங்கள் மறுவடிவமைக்கப்படும்.

அவை மெட்ரோ மற்றும் பேருந்து போன்ற பிற போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். பொழுதுபோக்கு வசதிகள், சில்லறை மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்ற பயணிகள் வசதிகளுடன் பொருத்தப்படும்.

அகமதாபாத் மறுசீரமபைப்பின் வடிவமைப்பு குஜராத்தில் உள்ள மோதேரா சூரியன் கோவிலை அடிப்படையாகக் கொண்டது .

CSMT இன் பாரம்பரிய கட்டிடம் எந்த மாற்றத்திற்குள்ளாகாமலும் இருக்கும், அதே நேரத்தில் அருகிலுள்ள கட்டிடங்கள் மறுவடிவமைப்பு செய்யப்படும்.

இந்த மறுவடிவமைப்புத் திட்டத்தை முடிக்க சுமார் 2 முதல் 3.5 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இந்தியா முழுவதும் 199 ரயில் நிலையங்களின் மறுவடிவமைப்பு ஏற்கனவே நடந்து வருகிறது.

திட்டத்தின் முதல் கட்டம் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் மற்றும் அதற்கு மேற்ப்பட்ட பயணிகளைக் கொண்ட நிலையங்களை உள்ளடக்கியது.

இந்த 199 நிலையங்கள் மற்றும் புது தில்லி, சிஎஸ்எம்டி, அகமதாபாத் ரயில் நிலையங்களின் மறுவடிவமைப்புக்கான ஒட்டுமொத்த செலவு ரூ.60,000 கோடி.

இதில் ஊனமுற்றோர் வசதிகளை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் .

வருகை/புறப்பாடு இடங்களில், நெரிசல் இல்லாத பிளாட்பாரங்கள், மேம்படுத்தப்பட்ட, முழுமையாக கூரையிடப்பட்ட பிளாட்பார்ம்கள் ஆகியவற்றின் மூலம் நிலையத்திற்குள் பயணிகளின் போக்குவரத்லுன எளிதாக்கப்படும்.

CSMT ரயில் நிலையம் பற்றி

  1. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) மும்பையில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும். இது 1878 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடைக்கால இத்தாலிய மாதிரிகளின் அடிப்படையில் உயர் விக்டோரியன் கோதிக் வடிவமைப்பில் கட்டப்பட்டது. இது இந்தியாவில் விக்டோரியன் கோதிக் கட்டிடக்கலை மறுமலர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்த கட்டிடத்தை FW ஸ்டீவன்ஸ் வடிவமைத்தார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!