டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் புத்தகம் தரவிறக்கம் செய்வது எப்படி?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் புத்தகம் தரவிறக்கம் செய்வது எப்படி?
டிஎன்பிஎஸ்சி தேர்விற்கென பிரத்யேகமாக நமது விண்மீன் இணையதளம், தினசரி நடப்பு நிகழ்வுகளை தொகுத்து மாதவாரியாக பிடிஎப் வடிவில் வழங்கிவருகிறது.
குரூப் 4 தேர்விற்கு தயார் செய்யும் மாணவர்கள் கடைசி ஒரு வருட நடப்பு நிகழ்வுகளை இந்த வலைப்பக்கத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நடப்பு நிகழ்வுகளை பொறுத்தவரை குரூப் 4 தேர்வுக்கு கடைசி 8 மாதங்களில் இருந்து கேள்விகள் கேட்க வாய்ப்பு உள்ளது. அதன்படி நவம்பர் 2021 முதல் 2022 ஜூலை 10 ஆம் தேதி வரை படித்தால் சரியாக இருக்கும். இங்கு கடைசி ஒருவருட நடப்பு நிகழ்வுகள் மாதவாரியாக பிடிஎப் வடிவில் உள்ளது. டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Tnpsc Current Affairs – Last 1 Year
இப்போது நடப்பு நிகழ்வில் இருந்து 8 முதல் 10 கேள்விகள் கேட்கப்படுகிறது. முன்னர் 20 முதல் 25 கேள்விகள் வரை கேட்கப்பட்டது. 2018, 2019 தேர்வுகளில் 17 கேள்விகள் வரை நேரடியாக நமது விண்மீன் நடப்பு நிகழ்வுகளில் இருந்து கேள்விகள் வந்திருந்தன. இப்போது மத்திய மாநில அரசு திட்டங்களில் அதிகமான கேள்விகள் கேட்கப்படுகின்றன.
Tnpsc Current Affairs Questions Pdf in Tamil
மேலும் நடப்பு நிகழ்வு பகுதியில், சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற மாநாடுகள், நீர்மூழ்கி கப்பல்கள், தேசியப்பூங்கா, விளையாட்டு வீரர்கள், புயல்கள், செயற்கைகோள் பெயர்கள், நாவல்கள்/புத்தகங்கள்/ புத்தகங்களின் ஆசிரியர்கள்/ சாகித்ய அகாதெமி போன்ற விருது வாங்கிய புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் பற்றிய கேள்விகள், கருத்தரங்குகள், செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்ப பூங்காக்கள், அரசு திட்டங்கள், அரசு அறிமுகப்படுத்திய சேவைகள், நோபல் பரிசுகள், திரைப்படங்கள் வாங்கிய விருதுகள், முக்கிய நாட்கள், முக்கிய நாட்களின் கருப்பொருள், உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களின் அறிக்கைகள், கணிப்புகள், கொரோனா போன்ற நோய்கள், தடுப்பு நடவடிக்கைள், உபகரணங்கள், நாடுகளுக்கிடைப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய கேள்விகள் இடம்பெறுகின்றன.