Current AffairsWinmeen Tamil News

அக்டோபர் 15: உலக மாணவர் தினம்

உலக மாணவர் தினம்  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதியில் அனுசரிக்கப்படுகிறது

முக்கிய தகவல்கள்:

ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு உலக மாணவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால், இந்தியாவில் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது.

“கல்வியின் மாற்றம் ஆசிரியர்களிடம் இருந்து தொடங்குகிறது” என்பதே இந்த ஆண்டின் தொனிப்பொருளாகும்.

2021 ஆம் ஆண்டில், உலக மாணவர் தினத்திற்கான கருப்பொருள் “மக்கள், பூமி, செழிப்பு மற்றும் அமைதிக்கான கல்வி”(“Learning for people, planet, prosperity, and peace”.) என்பதாகும். 

சிறப்பம்சம்.

கல்வித் துறையில் பெரும் பங்களிப்பை அளித்து மாணவர்களை ஊக்கப்படுத்திய முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் சாதனைகளைப் போற்றும் வகையில் உலக மாணவர் தினம் அனுசரிக்கப்படுகிறதுஇந்த நாள் கல்வியின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது மற்றும் கல்விக்கான அடிப்படை உரிமையை அங்கீகரிக்கிறது. டாக்டர் கலாம் 2015 இல் ஐஐஎம்-ஷில்லாங்கில் விரிவுரை ஆற்றிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது வாழ்நாளில், அவர் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னாவைப் பெற்றார். இந்திய அரசின் அறிவியல் ஆலோசகராக அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளையும் பெற்றார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organization-ISRO) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organization-DRDO) ஆகியவற்றில் விஞ்ஞானி மற்றும் அறிவியல் நிர்வாகியாக பணியாற்றினார். இந்தியாவின் சிவிலியன் விண்வெளித் திட்டம் மற்றும் ஏவுகணை மேம்பாட்டில் அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பு காரணமாக, அவர் இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவின் அணுசக்தி வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றினார். இந்தியாவில் ஒரு மசோதாவை மறுபரிசீலனைக்கு அனுப்பிய முதல் குடியரசுத் தலைவர் இவர்தான்.

சர்வதேச மாணவர் தினம் என்றால் என்ன?

உலக மாணவர் தினம் என்பது சர்வதேச மாணவர் தினத்திலிருந்து வேறுபட்டது. சர்வதேச மாணவர்கள் தினம் நவம்பர் 17 அன்று, மாணவர்களின் பன்முக கலாச்சாரத்தை அங்கீகரிப்பதற்காக அனுசரிக்கப்படுகிறது, குறிப்பாக வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள், தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி படிப்பவர்களைக் குறிக்கிறது. இது 1939 இல் செக் பல்கலைக்கழகங்கள் நாஜிகளால் தாக்கப்பட்ட தினத்தை நினைவுகூருகிறது. இது உயிரை இழந்த அல்லது வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்ட மாணவர்களை கௌரவிக்கின்றது. பல ஆண்டுகளாக, இந்த நாள் மாணவர்களிடையே பன்முகத்தன்மை கொண்டாட்டமாக உருவானது.

October 15: World Students Day – Update (October, 2022)

World Students’ Day is observed on 15th October each year.

Key facts

World Students Day is observed on the occasion of birth anniversary of A P J Abdul Kalam.

Since it is not officially declared by the United Nations, it is observed only in India.

This year’s theme is “the transformation of education begins with teachers”.

In 2021, the theme for World Students Day was “Learning for people, planet, prosperity, and peace”.

Significance

World Students Day is observed to honour the achievements of the former Indian President APJ Abdul Kalam, who made major contributions in the field of education and inspired students. This day also reiterates the importance of education and recognizes the Fundamental Right to Education. Dr Kalam passed away due to cardiac arrest while delivering a lecture at IIM-Shillong in 2015. During his lifetime, he was received Bharat Ratna – the highest civilian honour conferred by the Indian Government. He also received Padma Bhushan and the Padma Vibhushan in recognition for his contributions as scientific advisor of the Indian Government. He worked as a scientist and science administrator in Indian Space Research Organization (ISRO) and the Defence Research and Development Organization (DRDO). Due to his key contributions in India’s civilian space programme and missile development, he is known as the Missile Man of India. He also played a major role in the development of nuclear power in India. He was the first president in India to send back a bill to the parliament for reconsideration.

What is International Students Day?

World Students Day is different from international Students Day. The International Students Day is observed on November 17 to recognize multiculturalism of students, especially those studying in foreign countries, away from their homeland. It commemorates the day when Czech universities were raided by the Nazis in 1939. It honours students who lost their lives or sent to concentration camps. Over the years, this day evolved as a celebration of diversity among students.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!